என் மலர்
புதுச்சேரி

தேசிய ஆசிரியர் சங்கம் சார்பில் மாநில பொதுக் கூட்டம் நடந்த போது எடுத்த படம்.
ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்
- தேசிய ஆசிரியர் சங்கம் தீர்மானம்
- இந்த ஆண்டு சங்கத்தில் ஆயிரம் உறுப்பினர்களை சேர்ப்பது என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதுச்சேரி:
புதுவை தேசிய ஆசிரியர் சங்கம் சார்பில் கடந்த மே மாதம் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
இதில் 3 ஆண்டுக்கான புதுவை மாநில, மாவட்ட நிர்வாகிகளை தேர்வு செய்ய தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இதை தொடர்ந்து மாநில பொதுக்குழு கூட்டம் புதுவையில் நடந்தது. இதில் புதுவை மாநில தலைவராக பாட்சா, துணைத்தலைவர் விநாயகமூர்த்தி, செயலாளர் சுந்தரமூர்த்தி, மகளிர் செயலாளர் தாட்சாயிணி, மகிளா பிரமுகர் கலைவாணி, பொதுச்செய லாளர் தீபக்உச்சம்பள்ளி, இணை செயலாளர் செந்தமிழ்செல்வன், பொருளாளர் ராஜ்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டனர்.
மாவட்ட தலைவர்களாக புதுவை விஜயா, காரைக்கால் வேலாயுதம், மாகே அர்ச்சனா அசோக், ஏனாம் ராமதாஸ்கனக்காலா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் தேசிய கல்விக்கொள்கை 2020-ஐ முழுமையாக புதுவை மாநிலத்துக்கு கொண்டுவந்த மத்திய, மாநில அரசுக்கு வாழ்த்து தெரிவிப்பது.
கல்வித்துறையில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். இந்த ஆண்டு சங்கத்தில் ஆயிரம் உறுப்பினர்களை சேர்ப்பது என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.






