என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • தன்னலம் கருதாத இந்த செயலே ஈகை பண்பாக போற்றப்படுகிறது.
    • இசுலாமிய சகோதர, சகோதரிகளுக்கு இனிய பக்ரீத் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் வெளியிட்டுள்ள பக்ரீத் வாழ்த்துச்செய்தியில் கூறியிருப்பதாவது:-

    மனித குலத்தின் சிறப்புகளில் ஈகை பண்பும் ஒன்று. அது பிறர் படும் துன்பத்தை கண்டு இரங்கலும், அத்துன்பத்தை போக்க முயல்வதும் ஆகும். தன்னலம் கருதாத இந்த செயலே ஈகை பண்பாக போற்றப்படுகிறது. இத்தகைய ஈகை பண்பால் மக்களின் பழக்க வழக்க பண்பாட்டு சிறப்புகள் பண்டிகைகள் மூலம் வெளிப்பட்டு நிற்பதை காண முடிகிறது.

    ஈகை பண்பையும், மனித நேயத்தையும் முன்னிறுத்தும் அதேவேளையில் தன்னலம் கருதா தியாகத்தின் மூலம் பரிபூரண இறையருளை பெற முடியும் என்பதை உலகிற்கு எடுத்துரைக்கும் இந்த பக்ரீத் நன்னாளில் இறை தூதர் முகமது நபிகளின் தியாகங்களை மனதில் நிலைநிறுத்தி, அவர் உலகிற்கு போதித்த அன்பு, அறம், அமைதி, சகோதரத்துவம், சமத்துவம், மனிதநேயம் ஆகியவை தழைத்தோங்க அர்ப்பணிப்பு உணர்வுடன் செயலாற்ற உறுதியேற்போம் என்று கூறி இசுலாமிய சகோதர, சகோதரிகளுக்கு இனிய பக்ரீத் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • இந்திய கம்யூனிஸ்டு அழைப்பு
    • மாநில உரிமைகளை பறித்து, மத்திய அரசிடம் அதிகாரத்தை குவிப்பதாகும், பாராளுமன்ற, சட்டமன்ற ஜனநாயகத்தை ஏற்க மறுப்பதாகும்.

    புதுச்சேரி:

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சலீம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தன்னுடைய அதிகாரம் முற்றிலும் பறிபோய் முதல்-அமைச்சர் இருக்கையில் ஏன் உட்கார்ந்து இருக்கிறோம் பின்பக்கமாக வெளியே சென்று விடலாம் போல இருக்கிறது என்று ரங்கசாமி பகிரங்கமாக கூறுகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிகாரிகள் என் கூற்றை மதிப்பதில்லை, மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை தினந்தோறும் மன உளைச்சலாக இருக்கிறது என்று புலம்பினார்.

    கடந்த ஆகஸ்ட்டு மாதம் நடந்த கட்சியின் மாநில மாநாட்டில் மக்களின் நலனுக்காக பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறுங்கள் என்று தீர்மானம் மூலமாக அறைக்கூவல் விடப்பட்டது. டெல்லி அரசுக்கு எதிரான அவசர சட்டத்தை எதிர்த்து முதல் அமைச்சர் ரங்கசாமி குரல் கொடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தோம். ஆனால் முதல்-அமைச்சர் இதை செவிமடுக்கவில்லை.

    பா.ஜனதாவின் கொள்கை கூட்டாட்சி தத்துவத்தை சிதைத்து, மாநில உரிமைகளை பறித்து, மத்திய அரசிடம் அதிகாரத்தை குவிப்பதாகும், பாராளுமன்ற, சட்டமன்ற ஜனநாயகத்தை ஏற்க மறுப்பதாகும்.

    புதுவை மண்ணின் விடுதலையை பேணிக்காக்க, மாநில உரிமைகளை நிலைநாட்டிட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் ஜனநாயகத்தை பாதுகாத்திட முதல அமைச்சர் ரங்கசாமி அரசியல் உறுதியுடன் செயல்பட வேண்டும். மத்திய பா.ஜனதா அரசுக்கு பாடம் புகட்ட வேண்டும். புலம்பிப் பயனில்லை போராட முன்வாருங்கள் என்று ரங்கசாமியை மீண்டும் ஒரு முறை கேட்டுக்கொள்கிறோம் .

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அரசு துறை செயலர்களுக்கு நிதித்துறை அறிவுறுத்தல்
    • அரசின் உள்ளாட்சி, பொதுப்பணி, வருவாய், வணிகவரி துறை வருவாய் பெருகும். இந்த முன்மொழிவுகளை உடன டியாக வழங்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை நிதித்துறை துணை செயலர் ரத்னகோஷ் கிஷோ அரசு துறை செயலர்கள், தலைவர்கள், தன்னாட்சி அமைப்பு தலைவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி அமைப்புகள் மானிய ஒதுக்கீடை குறைக்கவும், சொந்த வருவாயை பெருக்கவும் இந்திய அரசு புதுவை நிர்வாகத்துக்கு அழுத்தம் தருகிறது. இந்த நிதியாண்டில் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் மத்திய உதவியை கூடுதலாக பெற வாய்ப்பில்லை. இதை கருத்தில்கொண்டு, கவர்னர் வருவாய் வளங்களை அதிகரிக்க ஒப்புதல் அளித்துள்ளார்.

    புதுவை அரசு சொத்துவரி, ஜி.எல்.ஆர் மதிப்பு, பயனாளிகள் கட்டண மேம்பாடு போன்ற முன்மொழிவுகளை புதுவை அரசின் பரிசீலனைக்கு வழங்கலாம். இதன்மூலம் அரசின் உள்ளாட்சி, பொதுப்பணி, வருவாய், வணிகவரி துறை வருவாய் பெருகும். இந்த முன்மொழிவுகளை உடனடியாக வழங்க வேண்டும்.

    புதுவை அரசின் கீழ் உள்ள தன்னாட்சி அமைப்புகள், சொசைட்டிகள், வாரியங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் போன்றவை உள் வருவாய் வளங்களை அதிகப்படுத்தி தன்னிறைவு அடைய வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • யாரும் நான் சொன்னால் கேட்பதில்லை என்று முதலமைச்சர் அழுது புலம்புகிறார்.
    • ஆளத்தெரியவில்லை என்றால் ராஜினாமா செய்துவிட்டு போக வேண்டியது தானே?

    புதுச்சேரி:

    புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி என்னால் எதுவும் செய்ய முடியாமல் முதலமைச்சர் நாற்காலியில் உட்கார்ந்து இருக்கிறேன் என்று விரக்தியாக பேசினார்.

    இதுதொடர்பாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    மாநில அரசின் அதிகாரங்கள் ஒவ்வொன்றாக மத்திய அரசு பறித்து வருகிறது. இதற்கு முதலமைச்சர் ரங்கசாமி எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் வாய்மூடி மவுனமாக இருக்கிறார்.

    என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. யாரும் நான் சொன்னால் கேட்பதில்லை என்று முதலமைச்சர் அழுது புலம்புகிறார். 1963 யூனியன் பிரதேச சட்டப்படி மாநில முதலமைச்சருக்கு அதிகாரம் இருக்கிறது.

    மாநில அரசின் அதிகாரங்களை எல்லாம் கவர்னரிடம் சரண்டர் செய்து விட்டு தற்போது என்னால் முடியவில்லை என ரங்கசாமி கூறுகிறார். ஆளத்தெரியவில்லை என்றால் ராஜினாமா செய்துவிட்டு போக வேண்டியது தானே?

    பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்தால் அதிக நிதி கிடைக்கும். மாநில அந்தஸ்து பெறுவோம் என்ற வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கி விட்டு தற்போது என்னால் எதுவும் செய்யமுடியவில்லை என்று முதலமைச்சர் கூறுவது கபட நாடகம்.

    புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் -பா.ஜனதா ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு கலால்துறை, உள்ளாட்சித்துறை என அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டது. குப்பை வாகனம் டெண்ட ரில் ஊழல் என்றதும் அதனை தடுத்து நிறுத்திவிட்டனர்.

    போலீஸ் துறையில் ஆட்கள் தேர்வுக்கு ரூ.7 லட்சம் லஞ்சம் பெறப்படுகிறது என்று கூறியவுடன் அதனையும் சரி செய்துவிட்டனர் என்றார்.

    • புதிய செவிலியர்களை தேர்வு செய்ய அடுத்த மாதம் போட்டித்தேர்வு நடத்துவதற்கான பணிகளில் சுகாதாரத்துறை ஈடுபட்டு வருகிறது.
    • கொரோனா காலத்தில் பணிபுரிந்த செவிலியர்களுக்கு 5 ஆண்டுகள் பணி நீட்டிப்பு என் கையில் இருந்தால் செய்து விடுவேன்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் கொரோனா தொற்று காலத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் செவிலியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டதால் 250-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கடந்த 2020- ம் ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்பட்டனர்.

    வாய்ப்பு இருந்தால் அவர்களை பணி நிரந்தரம் செய்ய அரசு ஆலோசிப்பதாக பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் புதிய செவிலியர்களை தேர்வு செய்ய அடுத்த மாதம் போட்டித்தேர்வு நடத்துவதற்கான பணிகளில் சுகாதாரத்துறை ஈடுபட்டு வருகிறது.

    நியமன விதிகளை தளர்த்தி, நேரடியாக தங்களை நிரந்தரம் செய்யக்கோரி ஒப்பந்த செவிலியர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் அதற்கான பணிகள் எதுவும் நடக்கவில்லை.

    இதனால் சுகாதாரத்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமியை சந்திக்க நேற்று 100-க்கான ஒப்பந்த செவிலியர்கள் புதுச்சேரி சட்டப்பேரவை வாயில் முன்பு முற்றுகையிட்டனர். அங்கு வந்த சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சிவா மற்றும் தி.மு.க.

    எம்.எல்.ஏ.க்கள் ஒப்பந்த செவிலியர்களை அழைத்து பேசினர். சில செவிலியர்களை மட்டும் முதலமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்த அழைத்து சென்றனர்.

    கொரோனா காலத்தில் நியமிக்கப்பட்ட செவிலியர்கள் பாதிக்கப்பட சுகாதாரத்துறை அதிகாரிகள்தான் காரணம் என்று தி.மு.க.

    எம்.எல்.ஏ.க்கள் குற்றம்சாட்டினர். அப்போது அவர்களிடம் முதலமைச்சர் ரங்கசாமி கூறுகையில்,

    "முன்பு இருந்த நிர்வாகம் வேறு. தற்போது இருப்பது வேறு. கொரோனா காலத்தில் நியமிக்கப்பட்ட தற்காலிக செவிலியர்களை ஒப்பந்தம் முடிந்ததும் பணியில் இருந்து விடுவிக்கலாம் என அதிகாரிகள் கூறினர். நான் தான் 3 மாதங்களுக்கு ஒரு முறை பணி ஒப்பந்தத்தை நீட்டித்து தருகிறேன்.

    இங்கு 18 ஆண்டுகளாக பணிபுரிந்தோருக்கே ஏதும் செய்ய முடியவில்லை. உங்களிடம் சொல்வதற்கு சங்கடமாகத்தான் உள்ளது. முதலமைச்சர் இருக்கையில் ஏன் உட்கார்ந்திருக்கிறோம் என்று எண்ணுகிறேன். முதலமைச்சர் சொன்னால் முன்பெல்லாம் நடைபெறும்.

    இப்போது அதுபோல் செய்ய முடியாது. விழாவுக்கு சென்றாலே, கல்வெட்டில் பெயர் இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டியுள்ளது. பல அதிகாரிகள் வி.ஆர்.எஸ். தரக்கூறுகிறார்கள். மின்துறையில் விடுப்பு எடுத்து சென்று விட்டனர்

    புதிதாக ஆட்கள் எடுத்தால், கொரோனா காலத்தில் நீங்கள் பணி புரிந்ததற்காக வெயிட்டேஜ் செய்கிறோம். அதுதான் செய்ய முடியும்.

    கொரோனா காலத்தில் பணிபுரிந்த செவிலியர்களுக்கு 5 ஆண்டுகள் பணி நீட்டிப்பு என் கையில் இருந்தால் செய்து விடுவேன். அது முடியவில்லை. இதை புரிந்து காத்திருங்கள்" என்றார்.

    • பிரதமர் மோடி என்னுடைய கிளை வலிமையான கிளை என்ற நிகழ்ச்சியை காணொளி மூலம் உரையாற்றி வருகிறார்
    • ஒவ்வொரு தொகுதியிலும் பா.ஜனதாவினர் ஒலிபரப்பி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    பிரதமர் மோடி என்னுடைய கிளை வலிமையான கிளை என்ற நிகழ்ச்சியை காணொளி மூலம் உரையாற்றி வருகிறார். இந்நிகழ்ச்சியை ஒவ்வொரு தொகுதியிலும் பா.ஜனதாவினர் ஒலிபரப்பி வருகிறார்கள்.

    அதுபோல் உப்பளம் தொகுதி பா.ஜனதா சார்பிலும் பிரதமர் மோடியின் காணொளி நிகழ்ச்சி தொகுதி தலைவர் சக்திவேல் தலைமையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

    இந்நிகழ்ச்சிக்கு உப்பளம் தொகுதி பொருப்பாளரும், மாநில கூட்டுறவு பிரிவு அமைப்பாளருமான வெற்றிச்செல்வம் முன்னிலை வகித்தார். இதில் தொகுதி

    பொதுச்செய லாளர் கவிராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் தெய்வநாயகம், தொகுதி துணைத்தலைவர் போஸ், மாவட்ட செயலாளர் அற்புதழகன், நிர்வாகிகள் ஆரோக்கியசாமி, ராஜவேலு, ரகு, விக்னேஷ், மணிமாறன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • கும்பாபி‌ஷேக விழா விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கியது. முதல்கால யாக பூஜை நடைபெறுகிறது.
    • கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வந்தன.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே கோர்காடு கிராமத்தில் எல்லையம்மன் தேவஸ்தானத்துக்கு உட்பட்ட விநாயகர், பச்சைவாழியம்மன், அங்காளம்மன் மற்றும் பூரணி பொற்கலை உடனுறை அய்யனாரப்பன் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வந்தன. திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில் கும்பாபிஷேக விழா இன்று காலை விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கியது. இன்று மாலை முதல்கால யாக பூஜை நடைபெறுகிறது.

    நாளை  காலை 2-ம் கால யாக பூஜையும் அதனை தொடர்ந்து கடம் புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து 9.30 மணிக்கு மகா கும்பாபிஷேகமும் நடைபெறுகிறது. கும்பாபிஷேக விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம், லட்சுமி காந்தன் எம்.எல்.ஏ. மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்கிறார்கள்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவல் குழு தலைவர் வெங்கடேசன் தலைமையில் ஊர் பொது மக்கள் செய்திருந்தனர்.

    • தேசிய அளவிலான செஸ் போட்டி அமலோற்பவம் பள்ளியில் 3 நாட்கள் நடந்தது.
    • 450-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    அகில இந்திய செஸ் பெடரேஷன், புதுச்சேரி செஸ் அசோசியேஷன் சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இடையேயான தேசிய அளவிலான செஸ் போட்டி அமலோற்பவம் பள்ளியில் 3 நாட்கள் நடந்தது.

    இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 450-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் 18 வயதுக்குட் பட்டோர் பிரிவில் ஆலப்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா முதலிடமும், 12 வயதுக்குட்பட்டோர் பிரிவில் முகப்பேர் வேலம்மாள் பள்ளி முதல் இடத்தையும் பிடித்து சாம்பியன் பட்டம் பெற்றது.

    பரிசளிப்பு விழாவுக்கு புதுச்சேரி செஸ் அசோசி யேஷன் சங்கத் தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். செயலாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.

    விழாவில் சிறப்பு விருந் தினர்களாக வைத்திலிங்கம் எம்.பி., அமலோற்பவம் பள்ளி தாளாளர் லூர்துசாமி ஆகியோர் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி னர். முன்னதாக பொருளாளர் வரதராசு வரவேற்றார். முடிவில் துணைச்செய–லாளர் அழகுமணி நன்றி கூறினார். போட்டியில் வெற்றி பெற்றவர் மாணவர்கள் கஜகஸ்தானில் ஆகஸ்ட்டு மாதம் நடைபெறும் உலக போட்டியில் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • புதுவை முத்தியால் பேட்டை மின்துறை அலுவலகத்திற்கு பிரகாஷ் குமார் எம்.எல்.ஏ. நேரில் சென்றார்.
    • மின் துறை குறைகள் சம்பந்த மாக மின்துறை உதவி பொறியாளர் திலகராஜ் மற்றும் இளநிலை பொறியாளர் குமாரிடம் நேரில் ஆலோசித்தார்.

    புதுச்சேரி:

    புதுவை முத்தியால் பேட்டை மின்துறை அலுவலகத்திற்கு பிரகாஷ் குமார் எம்.எல்.ஏ. நேரில் சென்று மின் துறை குறைகள் சம்பந்தமாக மின்துறை உதவி பொறியாளர் திலகராஜ் மற்றும் இளநிலை பொறியாளர் குமாரிடம் நேரில் ஆலோசித்தார்.

    குறிப்பாக பல்வேறு இடங்களில் புதைவட கேபிள்கள் பழுது நீக்கி அந்தப் பள்ளங்கள் இதுவரை மூடப்படாமல் உள்ளது. இது சம்பந்தமா கவும் ஊழியர்கள் பொது மக்களிடம் சமூகமான நல்லு றவை ஏற்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மேலும் இந்த குறைபாடுகளை ஒரு மாதத்திற்குள் நீக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இது சம்பந்தமாக பொருட்கள் ஏதேனும் தேவைப்பட்டால் தனக்கு தகவல் தெரிவிக்க வேண்டியும் உயர் அதிகாரி களிடம் பேசி அவற்றை பெற்று தருவதாகவும் பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. உறுதியளித்தார்.

    இதனைத் தொடர்ந்து மின்துறை அதிகாரிகளும் ஊழியர்களும் தொகுதி பொதுமக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக போர்க்கால அடிப்படையில் செய்து தருவதாக தெரிவித்தனர்.

    • புதுவை பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் உமாபதியை சந்தித்து ஒரு மனு அளித்தார்.
    • உப்பளம் அம்பேத்கர் சாலையை விரிவாக்கம் செய்து அங்குள்ள பூங்காவை சீரமைத்து தரவேண்டும்.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி புதுவை பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் உமாபதியை சந்தித்து ஒரு மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்ப தாவது:-

    உப்பளம் அம்பேத்கர் சாலையை விரிவாக்கம் செய்து அங்குள்ள பூங்காவை சீரமைத்து தரவேண்டும். மேலும் அம்பேத்கர் சிலை அருகே உள்ள நீர்வீழ்ச்சியையும் செயல்படுத்த வேண்டும் என கூறியிருந்தார்.

    மனுவை பெற்றுக் கொண்ட செயற்பொறியாளர் உமாமதி சம்பந்தப் பட்ட இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் சாலையை விரி வாக்கம் செய்து பூங்காவினை முழுமையாக புனரமைத்து கொடுப்பதாக கென்னடி எம்.எல்.ஏ.விடம் பொதுப்பணித்துறை செய ற்பொறியாளர் உமாபதி உறுதி அளித்தார்.

    • திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
    • போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 60-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடம் அபகரிப்பு செய்யப்பட்டது.

    இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி சார்பதிவாளர் சிவசாமி உட்பட 16 பேரை கைது செய்தனர். கோவில் இடத்தை தனது குடும்பத்தினர் பெயரில் பதிவு செய்த பா.ஜனதா எம்.எல்.ஏ. ஜான்குமார், மாவட்ட பதிவாளர் ரமேஷ், தாசில்தார்கள் பாலாஜி, ரமேஷ்கண்ணா ஆகியோர் மீதும் சட்டப்படி எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதன்படி இன்று காலை வழுதாவூர் சாலையில் திராவிடர் விடுதலைக்கழகம் லோகு அய்யப்பன் தலைமையில் பல்வேறு சமூக அமைப்பு நிர்வாகிகள் ஒன்று கூடினர். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக கலெக்டர் அலுவலகம் நோக்கி வந்தனர்.

    போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து ஜான்குமார் எம்.எல்.ஏ., வருவாய்த்துறை அதிகாரிகளை கைது செய்ய வலியுறுத்தி அவர்கள் கோஷம் எழுப்பியபடி கலெக்டர் அலுவலகத்தை தடையை மீறி முற்றுகையிட முயன்றனர்.

    இதையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 60-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். 

    • புதுச்சேரியில் நடைமுறைப்படுத்த காவல் சித்தரவதைக்கு எதிரான கூட்டியக்கம் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
    • புதுச்சேரி ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம் தலைமையில் மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர்.

    புதுச்சேரி:

    நாட்டில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டு அதன் பதிவுகளை பார்வையிட்டு அவ்வபோது அறிவிப்புகளை வெளியிட மாநில அளவில் ஒரு சுயதின குழு உருவாக்கபட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

    இதை புதுச்சேரியில் நடைமுறைப்படுத்த காவல் சித்தரவதைக்கு எதிரான கூட்டியக்கம் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக கூட்டியக்கத்தின் புதுச்சேரி ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம் தலைமையில் மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர்.

    அப்போது மாவட்ட கலெக்டர் வல்லவன் இது குறித்து முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

    இந்த சந்திப்பின்போது மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு பெருமாள், ம.தி.மு.க. அமைப்பாளர் கபிரியேல், விடுதலை சிறுத்தை கட்சி புதுச்சேரி தொகுதி பொறுப்பாளர் செழியன், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் அமைப்பாளர் வக்கீல் பரகத்துல்லா, விடுதலை வேங்கைகள் பெருமாள், திராவிடர் கழகம் அன்பரசன், திராவிடர் விடுதலைக் கழகம் லோகு ஐயப்பன், உள்பட பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    ×