என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை என்று ரங்கசாமி கபட நாடகம் ஆடுகிறார்- நாராயணசாமி ஆவேசம்
    X

    என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை என்று ரங்கசாமி கபட நாடகம் ஆடுகிறார்- நாராயணசாமி ஆவேசம்

    • யாரும் நான் சொன்னால் கேட்பதில்லை என்று முதலமைச்சர் அழுது புலம்புகிறார்.
    • ஆளத்தெரியவில்லை என்றால் ராஜினாமா செய்துவிட்டு போக வேண்டியது தானே?

    புதுச்சேரி:

    புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி என்னால் எதுவும் செய்ய முடியாமல் முதலமைச்சர் நாற்காலியில் உட்கார்ந்து இருக்கிறேன் என்று விரக்தியாக பேசினார்.

    இதுதொடர்பாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    மாநில அரசின் அதிகாரங்கள் ஒவ்வொன்றாக மத்திய அரசு பறித்து வருகிறது. இதற்கு முதலமைச்சர் ரங்கசாமி எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் வாய்மூடி மவுனமாக இருக்கிறார்.

    என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. யாரும் நான் சொன்னால் கேட்பதில்லை என்று முதலமைச்சர் அழுது புலம்புகிறார். 1963 யூனியன் பிரதேச சட்டப்படி மாநில முதலமைச்சருக்கு அதிகாரம் இருக்கிறது.

    மாநில அரசின் அதிகாரங்களை எல்லாம் கவர்னரிடம் சரண்டர் செய்து விட்டு தற்போது என்னால் முடியவில்லை என ரங்கசாமி கூறுகிறார். ஆளத்தெரியவில்லை என்றால் ராஜினாமா செய்துவிட்டு போக வேண்டியது தானே?

    பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்தால் அதிக நிதி கிடைக்கும். மாநில அந்தஸ்து பெறுவோம் என்ற வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கி விட்டு தற்போது என்னால் எதுவும் செய்யமுடியவில்லை என்று முதலமைச்சர் கூறுவது கபட நாடகம்.

    புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் -பா.ஜனதா ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு கலால்துறை, உள்ளாட்சித்துறை என அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டது. குப்பை வாகனம் டெண்ட ரில் ஊழல் என்றதும் அதனை தடுத்து நிறுத்திவிட்டனர்.

    போலீஸ் துறையில் ஆட்கள் தேர்வுக்கு ரூ.7 லட்சம் லஞ்சம் பெறப்படுகிறது என்று கூறியவுடன் அதனையும் சரி செய்துவிட்டனர் என்றார்.

    Next Story
    ×