என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • குழந்தையை மர்ம கும்பல் யாரோ கடத்தி சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து அங்குள்ள சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி நேதாஜி நகரை சேர்ந்தவர் வீரபிரதாப். இவரது மனைவி சோனியா. இவர்கள் கடற்கரை மற்றும் சாலையோரம் இளநீர், சோளம், குழந்தைகள் விளையாட்டு பொருட்கள் வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.

    இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். 3 வயதில் பெண் குழந்தையும், 2½ மாதங்களே ஆதித்யா என்ற ஆண் குழந்தையும் உள்ளது.

    இவர்கள் மிஷின் வீதியில் உள்ள ஜென்மராகினி கோவில் அருகே சாலையோர உள்ள பைக் வாடகை விடும் கடை வாசலில் படுத்து தூங்குவது வழக்கம். அதுபோல் நேற்று இரவு தனது குழந்தையுடன் சாலையோரம் படுத்து தூங்கினர். ஆனால் காலையில் பார்த்த போது குழந்தை ஆதித்யாவை காணவில்லை. இதனால் அவர்கள் திடுக்கிட்டனர். அங்குள்ள இடங்களில் தேடி பார்த்தனர். எங்கும் குழந்தை கிடைக்கவில்லை. குழந்தையை மர்ம கும்பல் யாரோ கடத்தி சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    இதுகுறித்து சோனியா பெரியகடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அங்குள்ள சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • காங்கிரஸ் வளர்ச்சி நிலை குறித்தும், கட்சி வளர்ச்சிக்கான வழிகள் குறித்தும் கருத்துக்களை கேட்டறிந்து ஆலோசனைகளை வழங்கினார்.
    • காங்கிரஸ் நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில காங்கிரஸ் தலைவராக வைத்திலிங்கம் எம்.பி. பொறுப்பேற்றுள்ளார். இதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சி அலுவல கத்தில், கட்சி நிர்வாகிகளை சந்தித்து கட்சியை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டுசெல்வது குறித்தும், மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார்.

    முதல்கட்டமாக மாநில தலைவர் வைத்திலிங்கம், 3 தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார். முத்தியால்பேட்டை, ராஜ்பவன், உப்பளம் தொகுதிகளை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    அவர்களிடம் காங்கிரஸ் வளர்ச்சி நிலை குறித்தும், கட்சி வளர்ச்சிக்கான வழிகள் குறித்தும் கருத்துக்களை கேட்டறிந்து ஆலோசனைகளை வழங்கினார்.

    தொடர்ந்து இன்றும் 3 தொகுதிகளை சேர்ந்த நிர்வாகிகளை மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

    • 17 ஆயிரம் முதியோருக்கு புதிதாக உதவித்தொகை வழங்க ஆணை பெற்றார்.
    • மக்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதுதான் ஒரு நல்ல அரசுக்கு உதாரணம்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நான் நினைத்தது எல்லாம் நடக்க வேண்டும், நான் சொன்னால் தட்டாமல், எல்லோரும் செய்ய வேண்டும் என நினைப்பது சர்வாதி காரத்தின் உச்சகட்டம்.

    முதல்-அமைச்சர் நினைத்தது எது நடக்கவில்லை? கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரியில் 300-க்கும் மேற்பட்டோரை பணி நிரந்தரம் செய்தார்.

    பதவி ஏற்றவுடன் முதியோர் உதவித் தொகையை ரூ.500 உயர்த்தினார். 17 ஆயிரம் முதியோருக்கு புதிதாக உதவித்தொகை வழங்க ஆணை பெற்றார். காரைக்கால் துறைமுகத்தை தனியாருக்கு கைமாற்ற சம்மதம் பெற்றார்.

    புதுவையில் 6 மதுபான ஆலைகளை தொடங்க அனுமதி பெற்றார். புதுவை மாநிலத்தில் எங்கு பார்த்தாலும் கவர்ச்சி நடன மதுபார்கள் திறக்க அனுமதி பெற்றார். நகர பகுதிக்குள் இருந்த பார்களை மாநில எல்லைகளில் இடமாற்றம் செய்ய ஒப்புதல் பெற்றார்.

    இதற்கெல்லாம் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளிடம் முதல்-அமைச்சரால் எப்படி அனுமதி பெற முடிந்தது. இதற்கு அனுமதி அளித்த அதிகாரிகள், தற்போது எதற்கு அனுமதி தர மறுக்கிறார்கள் என முதல்-அமைச்சர் நீலிக்கண்ணீர் வடிப்பதன் அர்த்தம் என்ன?

    தற்போதுள்ள அதிகாரிகள் வானத்தில் இருந்து குதித்தவர்களா? அரசின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு எந்த திட்டத்தையும் செயல்படுத்தினால் அதிகாரிகள் ஏன் மறுப்பு சொல்லப் போகிறார்கள்? முதல்- அமைச்சருக்கு எதிர்கேள்வி கேட்டால் பிடிக்காது.

    சட்டவிரோதமாக, சுயலாபத்துக்காக திட்டங்களை கொண்டு வந்தால் அதிகாரிகள் கேள்வி கேட்கத்தான் செய்வார்கள். அதற்குரிய விளக்கத்தை அளித்து, திட்டங்களையும், மக்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதுதான் ஒரு நல்ல அரசுக்கு உதாரணம்.

    எதற்கெடுத்தாலும் மாநில அந்தஸ்து இல்லை, அதிகாரம் இல்லை என புலம்புவதையும், விரக்தியாக பேசுவதையுமே முதல்-அமைச்சர் வாடிக்கையாக வைத்துள்ளார். மத்தியிலும், மாநிலத்திலும் நீங்கள் விரும்பியபடி கூட்டணி அரசுதானே செயல்படுகிறது.

    1963-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட யூனியன் பிரதேச சட்டத்தில் தேவையான திருத்தத்தை டெல்லியில் முகாமிட்டு கொண்டு வரலாமே? அதிகாரிகளை அழைத்து பேசி இப்போதைய காலக்கட்டத்திற்கு ஏற்ப சட்டங்களை மாற்றியும், தேவையான திருத்தங்களையும் மத்திய கூட்டணி அரசின் உதவியோடு செயல்படுத்த முதல்-அமைச்சர் முன்வராதது ஏன்?

    முதல்-அமைச்சர் இருக்கையில் இருக்கிறேன் என எண்ண தோன்றுகிறது என புலம்பிக் கொண்டே, அதே பதவியில் நீடிப்பதில் எந்த பிரயோஜனமும் இல்லை. காமராஜர் வழியில், உங்களால் முடியவில்லை என்றால், இளைஞர்கள் ஆளட்டும் என வழிவிட்டு விலகி செல்ல வேண்டியதுதானே? இப்படியெல்லாம் யார் நம்மை எதிர்த்து கேள்வி கேட்கப் போகிறார்கள்? என்ற எண்ணம்தான் முதல்-அமைச்சரை கபட நாடகம் ஆட வைக்கிறது.

    பாராளுமன்ற தேர்தல் நெருங்குகிறது. அரிதாரம் பூசி, முகமூடி அணிய வேண்டிய காலம் வந்துவிட்டது. தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள, மக்களை ஏமாற்றும் காலம் நெருங்கிவிட்டது என எண்ணும் உங்களின் மனவோட்டம் தெளிவாக புரிகிறது.

    பலரை ஒருநாள் ஏமாற்றலாம், சிலரை பல நாள் ஏமாற்றலாம். ஆனால் எப்போதும் மக்களை ஏமாற்றிக் கொண்டே இருக்க முடியாது. புதுவை மக்கள் விழித்துள்ளனர், முதல அமைச்சரை பற்றி உணர்ந்துள்ளனர். இனி அவரின் புலம்பலும், பொய்யுரையும் மக்களிடம் என்றும் எடுபடாது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

    • அனிபால் கென்னடி எம்.எல்.ஏ அலுவலகத்தில் நடைபெற்றது
    • அங்கன்வா டியை புரணமித்தல், மின்சாரம், தண்ணீர் தட்டுப்பாடு இன்றி கிடைத்திட ஏற்பாடு.

    புதுச்சேரி:

    புதுவை உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட அங்கன்வாடியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுடன் தி.மு.க. அனிபால் கென்னடி எம்.எல்.ஏ ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

    இந்த கூட்டத்தில் தொகுதிக்குட்பட்ட அங்கன்வாடி பணியா ளர்கள் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையே உள்ள நல்லுறவை வலுப்படுத்தி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும், வசதிகளையும் அரசிடம் இருந்து பெற்றுத் தருவதாக உறுதியளித்தார். அங்கன்வா டியை புரணமித்தல், மின்சாரம், தண்ணீர் தட்டுப்பாடு இன்றி கிடைத்திட ஏற்பாடு செய்து கொடுத்தல், கழிவறை வசதி அனைத்தையும் மிக சுகாதார முறையில் செய்து கொடுப்பதாக உறுதி அளித்தார்.

    உடன் அவைத்தலைவர் அரிகிருஷ்ணன், தி.மு.க. மூத்த நிர்வாகி ரவி, தொகுதி செயலாளர் சக்திவேல், மாநில ஆதிதிராவிடர் துணை அமைப்பாளர் தங்கவேலு, துணைத் தொகுதி செயலாளர் ராஜி, மீனவர் அணி விநாயகம், கிளைச் செயலாளர் செல்வம் மற்றும் கழக சகோதரர்கள் அனைவரும் உடனிருந்தனர்.

    • 300 கிராம் கஞ்சா, பணம், பைக் பறிமுதல்
    • கஞ்சா வாங்கி வந்ததும் 200 கிராம் கஞ்சாவை பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டனர்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட ஒதியம்பட்டு ராம்பரதேசி கோவில் அருகே 2 வாலிபர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக இன்ஸ்பெக்டர் வேலயன், சப்-இன்ஸ்பெக்டர் வேலு ஆகியோருக்கு ரகசியதகவல் கிடைத்தது.

    தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார் சந்தேகத்துக்கிடமாக பைக்கில் இருந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்ட னர்.

    அதற்கு அவர்கள் முன்னுக்குப் பின் முரணான தகவல் அளித்தனர். அவர்களது உடைமைகளை சோதனை செய்ததில் அவர்களது பைக்கில் 300 கிராம் கஞ்சா பொட்டலம் இருந்தது தெரியவந்தது.

    அவர்களை கைது செய்த போலீசார் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று துருவி துருவி விசாரணை நடத்தியதில், மேட்டுப்பாளையம் வண்ணாத்திகுளத்தைச் சேர்ந்த ஜெயவேல் (வயது 22), என்பதும் மற்றொருவர் வில்லியனூர் உத்தரவாகினி பேட் அபினேஷ் (வயது 22) என்பதும், இருவரும் ஆந்திர மாநிலம் குன்னூரில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு 500 கிராம் கஞ்சா வாங்கி வந்ததும் 200 கிராம் கஞ்சாவை பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டனர்.

    மீதமிருந்த 300 கிராம் கஞ்சாவை வைத்திருந்த போது போலீசார் பிடித்தனர். அவர்கள் வைத்திருந்த 300 கிராம் கஞ்சா 4 ஆயிரம் ரூபாய் பணம், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட ஜெயவேல் மற்றும் அபினேஷ் இருவரும் வில்லியனூரில் உள்ள அரசு பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள் என்பதும், தற்போது இருவரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

    • ரூ.4 கோடி மதிப்புள்ள சொத்தை மீட்டு கொடுத்தனர்.
    • வில்லியனூர் காவல் நிலைய போலீசார் அந்த இடத்திற்கு சென்று அந்த இடத்தை கையகப்படுத்தி கோவில் ஊழியர்களிடம் ஒப்படைத்தவர்.

    புதுச்சேரி:

    புதுவை மணக்குள விநாயகர் கோவிலுக்கு சொந்தமான சுமார் ஒரு ஏக்கர் நிலம் வில்லியனூர் பைபாஸ் சாலை அருகில் உள்ளது.

    இந்த இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கோவில் நிர்வாகம் இந்து அறநிலை துறை, வில்லியனூர் பஞ்சாயத்து ஆணையர், வில்லியனூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், வில்லியனூர் போலீஸ் நிலையம் ஆகியோரிடம் புகார் மனு கொடுத்தனர்.

    அதன் அடிப்படையில் இன்று காலை 9 மணி அளவில் மணக்குள விநாயகர் அறங்காவலர் குழுவினர் கோயிலுக்கு சொந்தமாக இடத்திற்கு சென்றனர், இந்து அறநிலைத்துறை ஊழியர்கள், கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் மற்றும் வில்லியனூர் காவல் நிலைய போலீசார் அந்த இடத்திற்கு சென்று அந்த இடத்தை கையகப்படுத்தி கோவில் ஊழியர்களிடம் ஒப்படைத்தவர்.

    அந்த இடத்தில் சிலர் கையகப்படுத்தி வேலிகளை அமைத்திருந்தனர் , அதை போலீசார் அப்புறப்படுத்தி சுமார் ரூ.4 கோடி மதிப்புள்ள சொத்தை மீட்டு கொடுத்தனர்.

    அங்கு யாரோ சிலர் சாலை வசதியை ஏற்படுத்தி அதை காலி மனையாக விற்பனை செய்வதற்கு வைத்திருந்தனர். அந்த சாலையையும் ஜேசிபி எந்திரம் மூலம் அதிகாரிகள் துணையுடன் கோவில் நிர்வாகம் அப்புறப்படுத்தியது. அந்த இடத்தை சுற்றி புதிய நகர் உருவாகி உள்ளது. அந்தப் புதிய நகருக்கு செல்வதற்கு இந்தக் கோவில் நிலத்தை பயன்படுத்தி வந்தனர் அதையும் அதிகாரிகள் ஒத்துழைப்புடன் கோவில் நிர்வாகம் வேலி அமைக்கும் பணியை  தொடங்கியது.

    • சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார்
    • ஏரி வாய்க்காலை ரூ.4.35 லட்சம் மதிப்பில் தூர்வாரி ஆழப்படுத்துதல் ஆகிய பணிகள் தொடங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    அரசு வட்டார வளர்ச்சி அலுவலகம் அரியாங்குப்பம் வட்டாரம் சார்பாக மணவெளி தொகுதி அபிஷேகம்பாக்கம் மற்றும் ஆண்டியார்பாளையம் தாணாம் பாளையம் பகுதிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.27.23 லட்சம் மதிப்பில் பணிகளை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார்.

    அதன்படி அபிஷே கப்பாக்கம் பகுதியில் தேடுவார்நத்தம் முதல் வன்னான் குளம் வரை உள்ள ஊரல் வாய்க்காலை ரூ.8.25 லட்சம் மதிப்பில் தூர்வாரி ஆழப்படுத்துதல், மேட்டு மதகு மற்றும் பள்ள மதகு வாய்க்காலை ரூ.8.29 லட்சம் மதிப்பில் தூர்வாரி ஆழப்படுத்துதல், ஆண்டியார் பாளையம் தானாம்பாளையம் பகுதியில் காட்டுப்பாளையம் முதல் உப்பனாரறு வரை உள்ள ஏரி வாய்க்காலை ரூ.6.33 லட்சம் மதிப்பில் தூர்வாரி ஆழப்படுத்துதல் மற்றும் தானாம்பாளையம் குளம் முதல் புரணாங்குப்பம் ஆறு வரை உள்ள ஏரி வாய்க்காலை ரூ.4.35 லட்சம் மதிப்பில் தூர்வாரி ஆழப்படுத்துதல் ஆகிய பணிகள் தொடங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன், வட்டார வளர்ச்சி அதிகாரி சந்திர குமரன், உதவி பொறியாளர்கள் ராஜ்குமார், ராமன் இளநிலை பொறியாளர் சிவஞானம் மற்றும் அப்பகுதி முக்கிய பிரமுகர்கள் லட்சுமி காந்தன், மாயகிருஷ்ணன், ஜானகிராமன், ஆனந்தன், ரமேஷ், ராஜன் குமார், தேனாம்பாளையம் பகுதி ஞானசேகர், ஜெயக்குமார், பெருமாள், நகமுத்து, பழனி, விமல், கந்தன், சகாயராஜ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • அதிக மது அருந்தி போதையில் கீழே விழுந்து உயிரிழந்து இருக்கலாம் என போலீசார் முதலில் வழக்கு பதிவு செய்தனர்.
    • சந்தேகமடைந்த போலீசார் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை சாமிபிள்ளை தோட்டம் 8-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் முத்துகுமரன் (வயது 57) டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    இவரது மனைவி காளியம்மாள் (எ) காஞ்சனா (வயது 42) இவர்களுக்கு 1 மகன், 1 மகள் உள்ளனர். மகள் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார் மகன் பிளஸ்-2 முடித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார்.

    குடிபழக்கத்திற்கு அடிமையான முத்துகுமரன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் மனைவி பிள்ளைகளை பிரிந்து சென்றுள்ளார். தற்போது பிளாட்பாரத்தில் தங்கி தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    நேற்று புதுவை வெள்ளாழர் வீதி பேங்க் ஆப் பரோடா அருகில் உள்ள வாய்க்காலில் முகத்தில் சிராய்ப்பு காயத்துடன் பின் தலையில் அடிப்பட்டு இறந்து கிடந்துள்ளார். அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இதனை கண்டு பெரியக்கடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் நாகராஜ், சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதிக மது அருந்தி போதையில் கீழே விழுந்து உயிரிழந்து இருக்கலாம் என போலீசார் முதலில் வழக்கு பதிவு செய்தனர்.

    சந்தேகமடைந்த போலீசார் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டனர். அதில் நள்ளிரவு பைக்கில் வந்த 3 வாலிபர்கள் தூங்கிக் கொண்டிருந்த முத்துகுமரனின் பாக்கெட்டில் பணம் ஏதாவது இருக்கிறதா என கைவிட்டு பார்க்கின்றனர்.

    உடனே சுதாகரித்துக் கொண்டு எழுந்த முத்துகுமரன் அவர்களை தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

    உடனே அவர்கள் 3 பேரும் சரமாரியாக அவரை கையால் தாக்குகின்றனர். பின் அவர்கள் அங்கிருந்து தப்பி செல்கின்றனர். மயங்கி முத்துகுமரன் அங்கே விழுந்து கிடக்கும் காட்சிகள் பதிவாகி உள்ளது.

    எனவே அவர்கள் 3 பேரும் அடித்ததில் உயிரிழந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இதனையடுத்து கொலை செய்த 3 பேரையும் போலீசார் பைக் எண்ணை வைத்து தேடி வருகின்றனர். அவர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    • தாய்மார்களால் சில காரணங்களால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாதபோது தானமாக பெற்ற தாய்ப்பால் உதவுகிறது.
    • தாய்ப்பால் பரிசோதிக்கப்பட்ட பிறகே குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுவை ஜிப்மர் பச்சிளம் குழந்தைகள் நலத்துறை தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஜிப்மர் மருத்துவ மனை யில் அமுதம் தாய்ப்பால் வங்கி 2016 முதல் செயல்பட்டு வருகிறது. 7 ஆண்டாக பச்சிளம் குழந்தைகள் பலர் பயனடை ந்துள்ளனர். தாய்மார்களால் சில காரணங்களால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாதபோது தானமாக பெற்ற தாய்ப்பால் உதவுகிறது.

    ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு 400 மில்லி தாய்ப்பால் சேகரிக்க ப்பட்டது. இப்போது ஆயிரம் மில்லி வரை சேகரிக்க ப்படுகிறது. இதன்மூலம் தினமும் 20 குழந்தைகள் பயன்பெறுகின்றனர். தாய்ப்பால் பரிசோதிக்கப்பட்ட பிறகே குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.

    தாய்ப்பால் கொடுப்பதும், பெறுவதும் அவரவர் சொந்த விருப்பம். இதில் பண பரிமாற்றம் கிடையாது.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • துரித நடவடிக்கையால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது
    • பொதுமக்கள் சாலையில் உள்ள மின்கம்பியை மிதிக்காமல் செல்ல எச்சரிக்கையை ஏற்படுத்தினார்.

    புதுச்சேரி:

    மதகடிப்பட்டு பாளையத்தில் கஸ்தூரிபாய் நகர் பிள்ளையார் கோவில் தெருவில் கோவில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது இந்நிலையில் அங்கு எதிர்பாரதவிதமாக நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்தது. நள்ளிரவில் அறுந்து விழுந்த மின்சார கம்பியால் அவழியாக பொதுமக்கள் யாரும் செல்லாததால் உயிர் சேதம் தடுக்கப்பட்டது.

    அதிகாலை 4 மணிக்கு தனது மகனை ஹாக்கி பயிற்சிக்காக அழைத்துச் சென்ற பைக் மெக்கானிக் ரமேஷ் என்பவர் மின் கம்பி அறுந்து கிடப்பதை கண்டார்.

    உடனே அவர் அப்பகுதியில் உள்ள இளைஞர்களை அழைத்து மரக்கிளைகள் மற்றும் தனது பைக் வாகனத்தையும் சாலையின் குறுக்கே நிறுத்தி பொதுமக்கள் சாலையில் உள்ள மின்கம்பியை மிதிக்காமல் செல்ல எச்சரிக்கையை ஏற்படுத்தினார்.

    அதனைத் தொடர்ந்து திருபுவனை மின்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. மின்துறையினர் அப்பகுதியில் அறுந்து கிடந்த மின் கம்பியை மீண்டும் இணைத்தனர். அவர் துரிதமாக செயல்பட்ட தால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    • நகை வியாபாரியை தாக்கி ரூ.3½ லட்சம் பறிப்பு
    • ஒரு வீட்டை காட்டி அதை கட்டவே பணம் வேண்டும் என்றும் தன் அம்மா உள்ளே இருப்பதாகவும் கூறியுள்ளார்.

    புதுச்சேரி:

    விழுப்புரம் மாவட்டம் வி.மருதூர் காளியம்மன் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் இவரது மகன் பிரகாஷ் (வயது 26). பழைய மற்றும் அடகு வைத்த நகைகளை மீட்டு வாங்கி விற்று வியாபாரம் செய்து வருகிறார்.

    செல்போனில் அழைப்புடந்த 24-ந் தேதி ஒரு செல்போன் எண்ணில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதில் பேசியவர் தன்னை ரகு என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, கொம்பாக்கம் பகுதியில் நாங்கள் கட்டி வரும் வீட்டிற்கு பணம் தேவைப்படுவதால் எங்களிடம் உள்ள நகைகளை விற்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    இதனையடுத்து நேற்று முன் தினம் மதியம் விழுப்புரத்தில் இருந்து ரூ. 3,64,000 பணம் எடுத்து க்கொண்டு வந்துள்ளார்.

    செல்போ னில் ரகுவை தொடர்பு கொண்டபோது கொம்பாக்கம் வாலிபால் மைதானம் அருகே வந்து கூப்பிடும்படி கூறினார்.

    ஒதியம்பட்டு பகுதியில் ஒரு வெள்ளை கலர் இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு நபர் அருகில் இறக்கத்தில் பாதி கட்டியிருந்த ஒரு வீட்டை காட்டி அதை கட்டவே பணம் வேண்டும் என்றும் தன் அம்மா உள்ளே இருப்பதாகவும் கூறியுள்ளார்.

    உடனே பிரகாஷ் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி, உள்ளே சென்று நின்றவுடன் இருசக்கர வாகனத்தில் வந்தவர் பாட்டிலால் பிரகாஷின் தலையில் அடித்துள்ளார்.

    பிரகாஷ் திரும்பிப் பார்த்தபோது அந்த வீட்டில் மேலும் 2 பேரும் பக்கவாட்டில் இருந்து ஒருவரும் ஓடி வந்து அவரை தாக்கி பையையும், பிரகாஷின் போனையும் பிடுங்கி கொண்டு கருவேல காட்டிற்குள் தப்பி ஓடினர்.

    பிரகாஷ் இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்பகுதியில் சரியான கண்காணிப்பு கேமராக்கள் இல்லாததால் குற்றவாளிகளை பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. பிரகாஷின் செல்போனை அவர்கள் திருடிச்சென்றி ருப்பதால் அதன் சிக்னலை வைத்து குற்றவாளிகளை அடையாளம் கானும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • புதிய திட்டத்தை அனைத்து தரப்பினரும் மத்திய, மாநில அரசுக்கும், ரெயில்வேக்கும் கோரிக்கை வைக்க வேண்டும்.
    • ரெயில்பாதை குறித்தும், திண்டிவனம் புதுவை ரெயில் பாதை குறித்தும் விளக்கம் கேட்டிருந்தோம்.

    புதுச்சேரி:

    புதுவை ரெயில் பயணிகள் சங்க தலைவர் கருப்பசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தெற்கு ரெயில்வே தலைமை நிர்வாக அதிகாரி குப்தா தலைமையில் கடந்த 6-ம் தேதி புதுவை கவர்னரை சந்தித்தனர். புதுவை ரெயில்நிலைய மேம்பாடு, சென்னைக்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாக கடலூர் வரை ரெயில் திட்டம் குறித்து ஆலோசனை நடத்தினர். தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் இந்த ரெயில்பாதை குறித்தும், திண்டிவனம் புதுவை ரெயில் பாதை குறித்தும் விளக்கம் கேட்டிருந்தோம்.

    ரெயில்வே நிர்வாகம் அனுப்பிய பதிலில், கிழக்கு கடற்கரை சாலை ரெயில்பாதை திட்டம் கைவிடப்பட்டுள்ளது. திண்டிவனம் நகரி, புதுவை ரெயில்பாதை கிடப்பில் போடப்பட்டுள்ளது. மறு ஆய்வு செய்து புதிய திட்டத்துக்கு கணக்கெடுப்பு நடத்துவதாக கூறியுள்ளனர்.

    மத்திய, மாநில அரசுகள் இதில் தலையிட்டு திண்டிவனம், புதுவை, கடலூர் புதிய ரெயில்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த புதிய திட்டத்தை அனைத்து தரப்பினரும் மத்திய, மாநில அரசுக்கும், ரெயில்வேக்கும் கோரிக்கை வைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×