என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • ரெயில் நிலைய அதிகாரியிடம் கென்னடி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
    • சாலைகளை உடனடியாக சீரமைத்து தர வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை ரெயில் நிலைய அதிகாரியை கென்னடி எம்.எல்.ஏ. சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    உப்பளம் தொகுதி க்குட்பட்ட வாணரப்பேட்டை சாலை மற்றும் அம்பேத்கர்சாலை ரெயில்வே லைனையொட்டி உள்ளது. இந்த சாலைகள் குண்டும், குழியுமாக சேதமடைந்து ள்ளது. இந்த சாலைகள் வழியேதான் அரசு அலுவலகத்துக்கும் மற்றும் பள்ளிகளுக்கும் மாணவர்கள் சென்று வருகிறார்கள். இந்த குண்டும் குழியுமான சாலைகளால் தினமும் விபத்து ஏற்படுகிறது. எனவே இந்த சாலைகளை உடனடியாக சீரமைத்து தர வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    நிகழ்ச்சியின் போது தொகுதி அவைத்தலைவர் அரிகிருஷ்ணன், தொகுதி செயலாளர் சக்திவேல், ஆதி திராவிடர் துணை அமைப்பா ளர் தங்கவேலு மற்றும் தி.மு.க. கிளை செயலாளர் காத்தலிங்கம், செல்வம், ராக்கேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.
    • இந்த சம்பவத்தை யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி விட்டு தப்பியோடி விட்டனர்.

    புதுச்சேரி:

    திருபுவனை அருகே சன்னியாசி குப்பம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவகொழுந்து (வயது 29). இவர் திருபுவனையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

    கடந்த 25-ந் தேதி புதுவையில் உள்ள உறவினர் திருமண விழாவை முடித்துக் கொண்டு இரவு 10 மணி அளவில் சிவகொழுந்து வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார். திருவாண்டார் கோவில் பகுதியில் வந்த போது அதே பகுதியைச் சேர்ந்த பகவான் (30), ஆகாஷ் (25), கவியரசன் (21) ஆகிய 3 பேரும் சிவகொழுந்துவின் பைக்கை வழிமறித்தனர்.

    பின்னர் அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி சிவகொழுந்து அணிந்திருந்த வெள்ளி குருமாத், செல்போன் மற்றும் சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த 2 ஆயிரம் ரொக்க பணத்தை பறித்தனர். மேலும் இந்த சம்பவத்தை யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி விட்டு தப்பியோடி விட்டனர்.

    இதையடுத்து சிவக்கொழுந்து இதுகுறித்து திருபுவனை போலீசில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் குற்றவியல் போலீசார் வழக்கு பதிவு செய்து பகவான், ஆகாஷ் ஆகிய 2பேரையும் கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர். தொடர்ந்து தலைமறைவான கவியரசனை போலீசார் தேடி வருகிறார்கள். 

    • பொது மக்கள் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தனர்.
    • டெங்கு மற்றும் மலேரியா காய்ச்சல் பிரிவு அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர்.

    புதுச்சேரி:

    பாகூர் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட காட்டுக்குப்பம் மாரியம்மன் கோவில் தெரு, கன்னிய கோவில் மணப்பட்டு சாலையில் கடந்த சில தினங்களாக பொது மக்கள் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தனர்.

    கிருமாம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக வந்தவர்களை சோதனை செய்தபோது அவர்களுக்கு டெங்கு காய்ச்சல் பலருக்கு இருப்பது தெரிய வந்தது.

    கடந்த சில தினங்களில் சுமார் 13 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து டெங்கு மற்றும் மலேரியா காய்ச்சல் பிரிவு அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர்.

    அங்கு பல இடங்களில் உள்ள சிறிய கிணறு சேதமடைந்த பொருட்களில் நல்ல தண்ணீர் தேங்கி டெங்கு கொசுக்களுக்கான முட்டைகள் அதிகமாக உற்பத்தியாகி இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்தவுடன் பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து, ஆஷா பணியாளர்கள் மற்றும் மலேரியா நோய் தடுப்பு பிரிவு ஊழியர்கள் இணைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் போதிய பாதுகாப்பும் நடவடிக்கையும் இருக்க அறிவுறுத்தினர். இருந்த போதும் டெங்கு காய்ச்சல் அப்பகுதியில் தொடர்ந்து பரவி வருவதால் மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். 

    • முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
    • சண்டை போட்டுத்தான் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்பது தேவையற்றது.

    புதுச்சேரி:

    புதுவையில் பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடியின் 9 ஆண்டு கால சாதனை விளக்க புத்தகம் வெளியீட்டு விழா நடந்தது.

    முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் புத்தகத்தை வெளியிட்ட பின் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிரதமர் மோடியின் 9 ஆண்டு கால சாதனை விளக்க கூட்டத்துக்கு பின் புதுவையில் பா.ஜ.க. எழுச்சி பெற்றுள்ளது. புதுவை அரசுக்கு அதிகாரிகள் ஒத்துழைப்பதில்லை என முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார். அரசுக்கு ஒத்துழைப்பு தராத அதிகாரிகள் மீது முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுப்பார்.

    உலகிற்கே வழிகாட்டும் தலைவராக பிரதமர் மோடி உள்ளார். அவர் வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் போட்டி யிட்டால் அது தமிழகத்திற்கே பெருமை.

    பிரதமர் எங்கு போட்டியிட வேண்டும் என்பதை பா.ஜ.க. தலைமை முடிவு செய்யும். அவர் போட்டியிடும் தொகுதி எந்த அளவுக்கு வளர்ச்சி பெறும் என்பதற்கு வாரணாசி உதாரணம்.

    சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடந்து வரும் பிரச்சினைகள் தேவையில்லாத ஒன்று. சண்டை போட்டுத்தான் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்பது தேவையற்றது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின்போது மாநில தலைவர் சாமிநாதன், வி.பி. ராமலிங்கம்

    எம்.எல்.ஏ. பொதுச் செயலாளர் மோகன்குமார், துணை தலைவர்கள் தங்க விக்ரமன், முருகன், ஆகியோர் உடனிருந்தனர்.

    • அசோக்பாபு எம்.எல்.ஏ. தலைமையில் வழங்கினர்
    • புத்தகம் ஜான்பால் நகரில் அசோக்பாபு எம்.எல்.ஏ. தலைமையில் வழங்கப் பட்டது. மேலும் வீடு தோறும் ஸ்டிக்கரும் ஒட்டப்பட்டது.

    புதுச்சேரி:

    பாரத பிரதமர் மோடியின் 9 ஆண்டு சாதனைகளை விளக்கி புதுவையில் பா.ஜனதா சார்பில் வீடு வீடாக சென்று சாதனை விளக்க புத்தகம் வழங்கப்பட்டு வருகிறது.

    அதுபோல் முதலி யார்பேட்டை தொகுதியில் பா.ஜனதா சார்பிலும் வீடு வீடாக மோடி அரசின் சாதனை விளக்க புத்தகம் ஜான்பால் நகரில் அசோக்பாபு எம்.எல்.ஏ. தலைமையில் வழங்கப் பட்டது. மேலும் வீடு தோறும் ஸ்டிக்கரும் ஒட்டப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் பா.ஜனதா நிர்வாகிகள் கார்த்திகேயன், கணேசன், தில்லை கோவிந்தன், லட்சுமி, அன்பரசி, மஞ்சுளா, ரஞ்சித், பார்த்தீபன், ரத்தின சபாபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை அனைவரும் சரியான நேரத்தில் பணிக்கு வரவேண்டும்.
    • இனி பொதுமக்களை ஒருபோதும் அலைக்கழிக்க கூடாது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநில குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய் சரவணன் குமார் , காரைக்கால் மதகடியில் அமைந்துள்ள குடிமை பொருள் வழங்கல் துறை அலுவலகத்தில், திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் வருகை பதிவேட்டை பார்வையிட்ட அமைச்சர், ஒரு சிலர் காலதாமத்துடன் வருகை தருவதாக கூறப்படுகிறது. இனி, அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை அனைவரும் சரியான நேரத்தில் பணிக்கு வரவேண்டும். காலதாமதத்துடன் வந்தால் அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். என்றார்.

    மேலும், அலுவலகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், பொதுமக்கள் சிலர் நிற்பதை பார்த்த அமைச்சர், அவர்கள் ஏன் காத்துகிடக்கிறார்கள்? அவர்களது குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்து உடனுக்குடன் அவர்களை அனுப்பி வைக்கவேண்டும். இனி பொதுமக்களை ஒருபோதும் அலைக்கழிக்க கூடாது. முக்கியமாக, பொதுமக்களிடமிருந்து எனக்கு எந்தவித குறைகளும் வராத வண்ணம் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பணி செய்ய வேண்டும் என்றார்.

    • கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் ஊழியர்கள் சம்ப இடத்திற்கு சென்று திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.
    • பிளாஸ்டிக் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் வசூலிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவையில் கடந்தாண்டு ஜூலை 1-ந் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், அதனை பயன்படுத்தும் கடைகள் மீதும் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது.

    இந்த நிலையில் மடுகரையில் இயங்கும் ஒரு தனியார் தொழிற்சாலை யில் ஒருமுறை பயன்படுத்தப் படும் பிளாஸ்டிக் பைகள் தயார் செய்யப்படுவதாக மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு புகார் வந்தது.

    அதையடுத்து மாசுகட்டுப் பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் ரமேஷ், நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் ஊழியர்கள் சம்ப இடத்திற்கு சென்று திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது அங்கு ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தாயாரிப்ப தற்கான பொருட்கள் இருந்தது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த தொழிற்சாலைக்கு எச்சரிக்கை விடுத்து அபாரதம் விதித்தனர்.

    பின்னர் அதே பகுதியில் இயங்கிய 2 தனியார் மதுகடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அதில், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தி வந்தது தெரியவந்தது.

    அந்த மதுகடைகளில் இருந்த அனைத்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் வசூலிக்கப்பட்டது.

    மேலும், இனிவரும் காலங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கடையில் இருப்பது ஆய்வில் தெரியவந்தால் கடைக்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாசு கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் ரமேஷ் எச்சரிக்கை விடுத்தார்.

    • அ.தி.மு.க. வலியுறுத்தல்
    • 100-க்கணக்கான ஒட்டல் உரிமையாளர்கள் கடற்கரை மணல் பகுதிகளில் வேலி அமைத்து, டெண்ட் அமைத்து தங்களுக்கு சொந்தமானதாக அபகரித்து வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள காமாட்சி அம்மன் கோவில் நிலத்தை போலி பத்திரம் தயாரித்து, போலி பட்டா மாற்றம் செய்து முறைகேடுகள் நடத்தியதாக 10-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் பத்திர பதிவுத் துறையில் கடந்த 2 ஆண்டுகளாக பட்டா மாற்றம் செய்யப்பட்ட சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதிவுகள் பத்திர பதிவுத் துறை இணையதளத்தில் இருந்து ஒட்டுமொத்தமாக காணாமல் போய் உள்ளது.

    திட்டமிட்டு இந்த தவறை துறை அதிகாரிகள் தைரியத்துடன் செய்துள்ளதாக தெரிகிறது.

    இது புதுவை மாநிலத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரிய தலைகுனிவு ஆகும். இந்த விவகாரத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி ஒரு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா காலத்தில் தங்களது உயிரையும் துச்சமென நினைத்து ஒப்பந்த அடிப்படையில் 100-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணியில் அமர்த்தபட்டனர்.

    தற்போது செவிலியர் பணியிடங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது.

    இதில் கொரோனா காலத்தில் பணிபுரிந்த செவிலியர்களுக்கு பணி வழங்க வேண்டும் அல்லது பணி நியமன விதிப்படி பணிக்கு ஆட்கள் எடுக்கும் போது ஏற்கனவே கொரோனா காலத்தில் பணிபுரிந்து வந்த செவிலியர்களுக்கு 25 சதவீதம் மதிப்பெண் கொடுத்து அவர்கள் பணியில் சேருவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

    புதுவை மாநிலம் முழு வதும் தற்போது கடற்கரைப் பகுதிகள் தனியாரால் அபகரிக்கப்பட்டு வருகிறது. 100-க்கணக்கான ஒட்டல் உரிமையாளர்கள் கடற்கரை மணல் பகுதிகளில் வேலி அமைத்து, டெண்ட் அமைத்து தங்களுக்கு சொந்தமானதாக அபகரித்து வருகின்றனர்.

    அங்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் பணம் வசூல் செய்து வருகின்றனர். போலி பத்திரம் மூலம் 15 கி.மீ தூரம் உள்ள கடற்கரையை அபகரிக்கும் சூழல் உள்ளது. வழக்கம் போல் அரசு பாராமுகம் போல் இல்லாமல் தனி யார்கள் ஆக்கிரமிப்பு செய்வது தடுத்து நிறுத்த வேண்டும்.

    ஒரு ஆட்டோவில் 6 மாணவர்களை மட்டுமே ஏற்றி செல்ல வேண்டும். அளவுக்கு அதிகமான மாணவர்கள் ஏற்றி செல்லக்கூடாது. என்ன சட்டம் உள்ளதோ அதனை அதிகாரிகள் அமல்படுத்த வேண்டும். அதிகப்படியாக மாணவர்களை ஏற்றி செல்வது தடுத்து நிறுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • மக்கள் பாதுகாப்பு பேரியக்கம் வலியுறுத்தல்
    • பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை மக்கள் பாதுகாப்பு பேரியக்க தலைவர் கராத்தே வளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை அரசு தொடர்ந்து விளையாட்டு வளர்ச்சியை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. புதுவை மாநில விளையாட்டு வீரர்களின் நீண்ட நாள் கோரிக்கை தனியாக விளையாட்டுத்துறை ஏற்படுத்த வேண்டும் என்பதாகும்.

    ஆனால் தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கி வருவது கண்டிக்கத்தக்கது.

    வருகிற 7-ந் தேதி புதுவை மாநில வங்கிகளின் சார்பில் நடைபெறும் விழாவில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார்.

    விளையாட்டிற்கு சம்பந்த மில்லாத அத்தகைய ஒரு விழாவை உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு அரங்கில் நடத்த ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

    இந்த விளையாட்டு அரங்கம் தொடங்கி 33 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தான் சிந்தடிக் பதித்து விளையாட்டு பயிற்சி பெற தயார் நிலையில் உள்ளது.

    இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தினால் இந்த விளையாட்டு அரங்கம் முழுவதுமாக சேதம் அடைந்து விடும், ஏனென்றால் விழா மேடைகள் அமைப்பதற்கு அனைத்து வகையான கனரக வாகனங்கள் உள்ளே சென்று ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள தயாராக உள்ளன.

    பிரதமர் மோடியின் பல நிகழ்ச்சிகளை லாஸ்பேட்டை விமான தள மைதானத்தில் நடத்தியுள்ளார்.

    அதேபோல் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பங்கேற்கும் வங்கி சம்பந்தப்பட்ட விழாவினை யும் லாஸ்பேட்டை மைதானத்திலே அல்லது உப்பளம் துறை முக பகுதிகளில் நடத்த கவர்னரும், தலைமைச் செயலாளரும் பரிந்துரை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    • இருசக்கர வாகனங்களில் செல்வோர் அடிக்கடி தவறி விழுந்து விபத்து ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.
    • புதுவை அரசே மக்களைக் கொல்லும் மரண கால்வாயை உடனே சீராக்கு என வாசகங்கள் எழுதிய பேனரும் வைத்துள்ளனர்.

    புதுச்சேரி:

    திருக்கனூர் கடைவீதி, வணிகர் வீதி சந்திப்பில் கழிவு நீர் கால்வாயின் மேல் இரும்பு கம்பியால் ஆன சிலாப் புதுவை அரசின் பொதுப் பணித்துறை சார்பில் போடப் பட்டுள்ளது.

    அந்த இரும்பு சிலாப்கள் பழுதடைந்து உள்வாங்கிய தால் அந்த இடத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. பழுதடைந்த இரும்பு சிலாப்பை சரி செய்யாததால் கடைவீதியில் உள்ள மெகா பள்ளத்தில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் அடிக்கடி தவறி விழுந்து விபத்து ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.

    திருக்கனூரில் இருந்து மதகடிப்பட்டுக்கு செல்லக் கூடிய முக்கிய வழியாகவும் இந்த இடம் இருப்பதால் பஸ்கள், லாரிகளும் அடிக்கடி இந்த பள்ளத்தில் சிக்கி கொள்வதால் கடைவீதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.

    இரவு நேரங்களில் பள்ளம் இருப்பது தெரியா மல் இரு சக்கர வாகனங்க ளில் வருவோர் தவறி விழுந்தால் உயிர்பலி ஏற்படும் அபாயமும் உள்ளது. இதனை சரி செய்யக்கோரி பொதுமக்கள் பலமுறை முறையிட்டும் பொதுப்பணி துறை சார்பில் இதுவரை நடவடிக்கை யும் எடுக்கப்ப டவில்லை.

    கடை வியாபா ரிகளும் இரும்பு சிலாப்பை சரி செய்து சீரமைக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை யும் விடுத்தனர்.

    இந்நிலையில் கடைவீதி யில் ஏற்பட்டுள்ள பள்ளத்தினை சரி செய்ய வேண்டும் என்பதற்காக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி சார்பில் அபாய நிலையில் உள்ள பள்ளத்தில் கட்சி கொடி யினை நட்டு, புதுவை அரசே மக்களைக் கொல்லும் மரண கால்வாயை உடனே சீராக்கு என வாசகங்கள் எழுதிய பேனரும் வைத்துள்ளனர்.

    அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நூதன முறையில் பள்ளத்தில் கொடி நட்டு பேனர் வைத்துள்ளதை பார்த்து இனியாவது பொதுப்பணி த்துறை இந்த பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என கம்யூனிஸ்டு கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • புதுச்சேரி வணிகர் கூட்டமைப்பு கோரிக்கை
    • பஸ் நிலையத்தை செம்மைப்படுத்தும் பணியினை விரைவாக செயல்படுத்த வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி வணிகர் கூட்ட மைப்பின் பெருந்தலைவர் சிவசங்கர் எம்.எல்.ஏ. தலை மையில் கூட்டமைப்பின் தலைவர் பாபு, பொருளாளர் தங்கமணி, ஒருங்கிணைப்பாளர் சித்திக், பஸ் நிலைய வியாபாரிகள் சங்கத் தலைவர் கதிரேசன் மற்றும் நிர்வாகிகள் புதுவை நகராட்சி ஆணையர் சிவக்குமாரை சந்தித்து மனு அளித்தனர்.

    அதில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் செயல்படுத்த இருக்கும் பஸ் நிலையத்தை செம்மைப்படுத்தும் பணியினை விரைவாக செயல்படுத்த வேண்டும்.

    தற்போது அங்கு உள்ள கடை உரிமையாளரிடமே மீண்டும் கடையை ஒப்படைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

    நகராட்சி ஆணையர் புதுச்சேரி வணிகர் கூட்ட மைப்பினரின் வேண்டு கோளை ஏற்று கடைகளை ஏற்கனவே உள்ள வியாபாரி களிடமே ஒப்படைப்பதாக உறுதியளித்தார்.

    • மாணவர் காங்கிரஸ் தலைவர் ஹர்ஷவர்தன் கோரிக்கை
    • செவிலியர்களுக்கான பணியிடங்களுக்கு மட்டும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை மாணவ காங்கிரஸ் தலைவர் டாக்டர் ஹர்ஷவர்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரியில் 5 அரசு மருத்துவமனைகளும், 32 ஆரம்ப சுகாதார நிலையங்க ளும், காரைக்காலில் 1 அரசு பொது மருத்துவமனையும், 13 ஆரம்ப சுகாதார நிலை யங்களும், மாகியில் 1 அரசு பொது மருத்துவ மனையும், 2 ஆரம்ப சுகாதார நிலையங்களும், ஏனாம் பகுதியில் 1 அரசு பொது மருத்துவமனையும் 1 ஆரம்ப சுகாதார நிலையமும் என மொத்தம் 56 ஆஸ்பத்திரிகள் உள்ளன.

    இதில் கடந்த சில ஆண்டு களாக பார்மசி, பிசியோ தெரபி, லேப் டெக்னீசியன் மற்றும் லேப் அசிஸ்டண்ட் போன்ற துறைகளில் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது.

    தற்போது செவிலியர்களுக்கான பணியிடங்களுக்கு மட்டும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    எனவே முதல்- அமைச்சர் ரங்கசாமி தலையிட்டு மருத்து வமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் அனைத்து பிரிவு காலி இடங்களையும் விரைந்து நிரப்ப வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.

    ×