என் மலர்
புதுச்சேரி

மடுகரை பகுதியில் மாசு கட்டுப்பாட்டு வாரிய செயலர் ரமேஷ், ஆணையர் கார்த்திகேயன் ஆய்வு செய்த காட்சி.
பிளாஸ்டிக் தொழிற்சாலையில் மாசு கட்டுபாட்டு வாரிய செயலர் திடீர் ஆய்வு
- கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் ஊழியர்கள் சம்ப இடத்திற்கு சென்று திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.
- பிளாஸ்டிக் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் வசூலிக்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுவையில் கடந்தாண்டு ஜூலை 1-ந் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், அதனை பயன்படுத்தும் கடைகள் மீதும் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில் மடுகரையில் இயங்கும் ஒரு தனியார் தொழிற்சாலை யில் ஒருமுறை பயன்படுத்தப் படும் பிளாஸ்டிக் பைகள் தயார் செய்யப்படுவதாக மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு புகார் வந்தது.
அதையடுத்து மாசுகட்டுப் பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் ரமேஷ், நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் ஊழியர்கள் சம்ப இடத்திற்கு சென்று திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அங்கு ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தாயாரிப்ப தற்கான பொருட்கள் இருந்தது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த தொழிற்சாலைக்கு எச்சரிக்கை விடுத்து அபாரதம் விதித்தனர்.
பின்னர் அதே பகுதியில் இயங்கிய 2 தனியார் மதுகடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அதில், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தி வந்தது தெரியவந்தது.
அந்த மதுகடைகளில் இருந்த அனைத்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் வசூலிக்கப்பட்டது.
மேலும், இனிவரும் காலங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கடையில் இருப்பது ஆய்வில் தெரியவந்தால் கடைக்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாசு கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் ரமேஷ் எச்சரிக்கை விடுத்தார்.






