என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    வழிப்பறி செய்த 2 வாலிபர்கள் கைது
    X

    வழிப்பறி செய்த 2 வாலிபர்களையும் அவர்களை கைது செய்த போலீசாரையும் படத்தில் காணலாம்.

    வழிப்பறி செய்த 2 வாலிபர்கள் கைது

    • கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.
    • இந்த சம்பவத்தை யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி விட்டு தப்பியோடி விட்டனர்.

    புதுச்சேரி:

    திருபுவனை அருகே சன்னியாசி குப்பம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவகொழுந்து (வயது 29). இவர் திருபுவனையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

    கடந்த 25-ந் தேதி புதுவையில் உள்ள உறவினர் திருமண விழாவை முடித்துக் கொண்டு இரவு 10 மணி அளவில் சிவகொழுந்து வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார். திருவாண்டார் கோவில் பகுதியில் வந்த போது அதே பகுதியைச் சேர்ந்த பகவான் (30), ஆகாஷ் (25), கவியரசன் (21) ஆகிய 3 பேரும் சிவகொழுந்துவின் பைக்கை வழிமறித்தனர்.

    பின்னர் அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி சிவகொழுந்து அணிந்திருந்த வெள்ளி குருமாத், செல்போன் மற்றும் சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த 2 ஆயிரம் ரொக்க பணத்தை பறித்தனர். மேலும் இந்த சம்பவத்தை யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி விட்டு தப்பியோடி விட்டனர்.

    இதையடுத்து சிவக்கொழுந்து இதுகுறித்து திருபுவனை போலீசில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் குற்றவியல் போலீசார் வழக்கு பதிவு செய்து பகவான், ஆகாஷ் ஆகிய 2பேரையும் கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர். தொடர்ந்து தலைமறைவான கவியரசனை போலீசார் தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×