என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகள்
    X

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகளை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்த காட்சி.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகள்

    • சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார்
    • ஏரி வாய்க்காலை ரூ.4.35 லட்சம் மதிப்பில் தூர்வாரி ஆழப்படுத்துதல் ஆகிய பணிகள் தொடங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    அரசு வட்டார வளர்ச்சி அலுவலகம் அரியாங்குப்பம் வட்டாரம் சார்பாக மணவெளி தொகுதி அபிஷேகம்பாக்கம் மற்றும் ஆண்டியார்பாளையம் தாணாம் பாளையம் பகுதிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.27.23 லட்சம் மதிப்பில் பணிகளை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார்.

    அதன்படி அபிஷே கப்பாக்கம் பகுதியில் தேடுவார்நத்தம் முதல் வன்னான் குளம் வரை உள்ள ஊரல் வாய்க்காலை ரூ.8.25 லட்சம் மதிப்பில் தூர்வாரி ஆழப்படுத்துதல், மேட்டு மதகு மற்றும் பள்ள மதகு வாய்க்காலை ரூ.8.29 லட்சம் மதிப்பில் தூர்வாரி ஆழப்படுத்துதல், ஆண்டியார் பாளையம் தானாம்பாளையம் பகுதியில் காட்டுப்பாளையம் முதல் உப்பனாரறு வரை உள்ள ஏரி வாய்க்காலை ரூ.6.33 லட்சம் மதிப்பில் தூர்வாரி ஆழப்படுத்துதல் மற்றும் தானாம்பாளையம் குளம் முதல் புரணாங்குப்பம் ஆறு வரை உள்ள ஏரி வாய்க்காலை ரூ.4.35 லட்சம் மதிப்பில் தூர்வாரி ஆழப்படுத்துதல் ஆகிய பணிகள் தொடங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன், வட்டார வளர்ச்சி அதிகாரி சந்திர குமரன், உதவி பொறியாளர்கள் ராஜ்குமார், ராமன் இளநிலை பொறியாளர் சிவஞானம் மற்றும் அப்பகுதி முக்கிய பிரமுகர்கள் லட்சுமி காந்தன், மாயகிருஷ்ணன், ஜானகிராமன், ஆனந்தன், ரமேஷ், ராஜன் குமார், தேனாம்பாளையம் பகுதி ஞானசேகர், ஜெயக்குமார், பெருமாள், நகமுத்து, பழனி, விமல், கந்தன், சகாயராஜ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×