என் மலர்
புதுச்சேரி

மின்துறை அதிகாரியிடம் பிரகாஷ் குமார் எம்.எல்.ஏ. ஆலோசனை நடத்திய காட்சி.
முத்தியால்பேட்டை மின்துறை அலுவலகத்தில் திடீர் ஆய்வு செய்த எம்.எல்.ஏ.
- புதுவை முத்தியால் பேட்டை மின்துறை அலுவலகத்திற்கு பிரகாஷ் குமார் எம்.எல்.ஏ. நேரில் சென்றார்.
- மின் துறை குறைகள் சம்பந்த மாக மின்துறை உதவி பொறியாளர் திலகராஜ் மற்றும் இளநிலை பொறியாளர் குமாரிடம் நேரில் ஆலோசித்தார்.
புதுச்சேரி:
புதுவை முத்தியால் பேட்டை மின்துறை அலுவலகத்திற்கு பிரகாஷ் குமார் எம்.எல்.ஏ. நேரில் சென்று மின் துறை குறைகள் சம்பந்தமாக மின்துறை உதவி பொறியாளர் திலகராஜ் மற்றும் இளநிலை பொறியாளர் குமாரிடம் நேரில் ஆலோசித்தார்.
குறிப்பாக பல்வேறு இடங்களில் புதைவட கேபிள்கள் பழுது நீக்கி அந்தப் பள்ளங்கள் இதுவரை மூடப்படாமல் உள்ளது. இது சம்பந்தமா கவும் ஊழியர்கள் பொது மக்களிடம் சமூகமான நல்லு றவை ஏற்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மேலும் இந்த குறைபாடுகளை ஒரு மாதத்திற்குள் நீக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இது சம்பந்தமாக பொருட்கள் ஏதேனும் தேவைப்பட்டால் தனக்கு தகவல் தெரிவிக்க வேண்டியும் உயர் அதிகாரி களிடம் பேசி அவற்றை பெற்று தருவதாகவும் பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. உறுதியளித்தார்.
இதனைத் தொடர்ந்து மின்துறை அதிகாரிகளும் ஊழியர்களும் தொகுதி பொதுமக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக போர்க்கால அடிப்படையில் செய்து தருவதாக தெரிவித்தனர்.






