என் மலர்
விருதுநகர்
ஆயுர்வேத மருத்துவர்களின் நவீன மருத்துவ முறையில் அறுவை சிகிச்சை செய்ய அனுமதி வழங்கும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் என தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
விருதுநகர்:

இதுகுறித்து அச்சங்கத்தின் நிர்வாகிகள் கூறியதாவது:-
மத்திய அரசு ஆயுர்வேத மருத்துவர்கள் நவீன மருத்துவ முறையில் அறுவை சிகிச்சை செய்வதற்கு அனுமதிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதனால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும். மேலும் ஒரே நாடு, ஒரே மருத்துவ முறை கலைக்க வேண்டும். தேசிய கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ள ஒருங்கிணைந்த மருத்துவ கல்வியில் பக்கவாட்டு நுழைவு முயற்சியை மத்திய அரசு கைவிடவேண்டும். மேலும் ஒரே நாடு, ஒரே மருத்துவ முறை என கூறி இதர பாரம்பரிய மருத்துவ முறைகளை புறக்கணிக்கும் போக்கும் நவீன மருத்துவத்தை நீர்த்துப்போகச் செய்யும் முயற்சியும் மேற்கொள்ளப்படுகிறது.
நவீன அறிவியல் மருத்துவத்தில் சமஸ்கிருத சொற்களை புகுத்தும் போக்கும் அதிகரித்து வருகிறது. இதனால் நவீன மருத்துவ முறைக்கு பாதிப்பு ஏற்படும். பழைய மருத்துவ முறைகளில் மருந்துகளில் உள்ள மூலக்கூறுகளின் பயன்பாட்டை மேம்படுத்தாமல் ஒன்று கலத்தல் என்ற பெயரில் நவீன அறிவியல் மருத்துவ முறைகளில் பழைய மருத்துவ முறைகளை ஒன்றிணைப்பது நவீன மருத்துவத்தை சீர்குலைப்பது ஆகும். இது சரியல்ல.
இதுவரை ஏற்பட்டுள்ள மருத்துவ அறிவியல் வளர்ச்சியை நாசம் செய்வதாகும். ஆயுர்வேதம் மற்றும் நவீன அறிவியல் மருத்துவர்களிடையே முரண்பாடு மோதலை அதிகரிப்பதாகும். மருத்துவ அறிவியலையும் அதன் மதசார்பற்ற தன்மையையும், வளர்ச்சியையும் பாதுகாக்க வேண்டும்.
இதில் அக்கறை உள்ள அனைவரும் குரல் கொடுக்க வேண்டும். மத்திய அரசின் சீர்குலைவு வேலைகளை தடுத்து நிறுத்த முன்வரவேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ராஜபாளையம் கிளை தலைவர் டாக்டர் ஜவகர்லால் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாவட்ட தலைவர் டாக்டர் சுகுமார், விருதுநகர் மாவட்ட துணைத்தலைவர் டாக்டர் போஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை வலியுறுத்தி டாக்டர்கள் ரூபன் ராஜ், சண்முகராஜன், சுப்பிரமணியன் ஆகியோர் பேசினர்.

அருப்புக்கோட்டை அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் 13 பேர் காயம் அடைந்தனர்.
அருப்புக்கோட்டை:
பல்லடத்தை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 48). இவர் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் பிள்ளையார்பட்டி மற்றும் திருச்செந்தூர் கோவிலுக்கு செல்வதற்காக தனக்கு சொந்தமான வேனில் சென்றார். வேனை துரைராஜ் ஓட்டினார்.
இந்தநிலையில் திருச்செந்தூர் கோவிலுக்கு செல்வதற்காக தூத்துக்குடி நான்கு வழிச்சாலை அருப்புக் கோட்டை அடுத்த கட்டங்குடி விலக்கு அருகே வந்து கொண்டிருந்தபோது வேன் நிலைதடுமாறி அருகே சாலை நடுவே உள்ள தடுப்புச்சுவரின் மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த டவுன் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் விரைந்து வந்து வேனுக்குள் காயமடைந்த துரைராஜ் உள்பட 13 பேரையும் மீட்டனர். பின்னர் அவர்களை சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு தலைகீழாக கவிழ்ந்து கிடந்த வேனை உடனடியாக போலீசார் அப்புறப்படுத்தினர். இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 3 லட்சத்து 25 ஆயிரத்து 899 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 16,022 பேருக்கு நோய் பாதிப்பு உறுதியானது. 15,652 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். 2,220 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்பட வில்லை.
142 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் யாரும் தனிமைப்படுத்தப்படவில்லை. மாவட்டத்தில் நேற்று மேலும் 15 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,037 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்ட சுகாதார துறையினர் 3 பேருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள நிலையில், மாநில சுகாதார துறையினர் இம்மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 15 என உறுதிப்படுத்தியுள்ளது. பாதிப்பு பட்டியல் வெளியிடுவதில் தொடரும் இந்த முரண்பாடு ஏன்? என்று தெரியவில்லை.
மேலும் மாவட்ட சுகாதாரத்துறை பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதி பற்றிய விவரங்களை தெரிவிக்காத நிலை தொடர்வதால் மாவட்டத்தில் கிராம பகுதிகளில் நோய் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும் நிலை உள்ளது.
மேலும் மாவட்டத்தில் 370 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பாதிப்படைந்தவர்கள் அரசு ஆஸ்பத்திரிகளில் அல்லது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோ இருக்க வேண்டும். ஆனால் 142 பேர் மட்டுமே அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடுகளில் யாரும் தனிமைப்படுத்தப்பட வில்லை. பாதிப்படைந்த 228 பேர் நிலைபற்றி மாவட்ட சுகாதாரத்துறை எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. இந்நிலை நீடித்தால் மாவட்டத்தில் நோய் பாதிப்பை முற்றிலும் தவிர்க்க வாய்ப்பு ஏற்படுவது என்பது சாத்தியப்படாது.

10 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
விருதுநகர் அருகே உள்ள தம்மநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் தங்கவேல் (வயது51). இவர் பட்டாசு ஆலையில் தொழிலாளியாக பணியாற்றினார்.
இவர் கடந்த 2014-ம் ஆண்டு 10 சிறுமிகளை, டி.வி.யில் கார்ட்டூன் படம் காட்டுவதாக கூறி தனது வீட்டின் மாடிக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதுகுறித்த புகாரின் பேரில் விருதுநகர் அனைத்து மகளிர் போலீசார் தங்கவேலுவை கைது செய்தனர். இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள போக்சோ வழக்குகளுக்கான நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கை நீதிபதி பரிமளா விசாரித்து, தங்கவேலுக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்தும், ரூ.2 லட்சத்து 45 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பு அளித்தார். அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கவும் நீதிபதி பரிந்துரை செய்தார்.

“தி.மு.க.வினர் மிரட்டலுக்கு பயப்பட மாட்டோம்” என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறினார்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஒன்றியம் தாயில்பட்டி அருகே உள்ள விஜயகரிசல்குளம் கிராமத்திற்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வந்தார். அங்கு தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
எம்.ஜி.ஆர். கட்சி ஆரம்பிக்கும் போது பல்வேறு சோதனைகளை தாண்டிதான் கட்சியை நடத்தினார். இன்று கோடிக்கணக்கான தொண்டர்கள் அ.தி.மு.க.வில் உள்ளனர்.
கருணாநிதி இறந்த பிறகு அவரையும், அவரது குடும்பத்தினரையும் பற்றி ஒரு போதும் அ.தி.மு.க. தரக்குறைவாக பேசியது கிடையாது. ஆனால் மு.க.ஸ்டாலின், ஆ.ராசா ஆகியோர்தான் முதல்-அமைச்சரை பற்றி அவதூறாக பேசி வருகின்றனர்.
இதை எல்லாம் பார்த்துக்கொண்டு அ.தி.மு.க. தொண்டர்கள் சும்மா இருக்க மாட்டார்கள். தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு தேவையான திட்டங்கள் எதையும் நிறைவேற்றவில்லை. ஆதலால் அ.தி. மு.க.வை குறை சொல்ல தி.மு.க. வில் யாருக்கும் தகுதி கிடையாது.
சாத்தூர் சட்டமன்ற தொகுதி உள்பட தமிழ்நாடு முழுவதும் புதிய சாலைகள், அரசு கலைக்கல்லூரிகள் தொடங்கப்பட்டு உள்ளன. தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம், கொண்டல் நகர் கூட்டுக்குடிநீர் திட்டம், சீவலப்பேரி கூட்டுக்குடிநீர் திட்டம், இருக்கன்குடி கூட்டுக் குடிநீர் திட்டம் மற்றும் தடுப்பணைகள் கொண்டுவரப்பட்டு உள்ளன.
விருதுநகர் மாவட்டத்தில் தி.மு.க. ஆட்சி காலத்தில் எவ்வித பணிகளும் செய்யப்படவில்லை. தி.மு.க.வினர் மிரட்டலுக்கு எல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம்.
முதல்-அமைச்சரின் நடவடிக்கையால்தான் தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. என்னை போன்ற அமைச்சர்கள் ஏதாவது தவறு செய்தால் முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் ஆகியோர் உடனே கண்டிப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

ராஜபாளையத்தில் அ.தி.மு.க., தி.மு.க.வினர் ஒரே இடத்தில் திரண்டு கோஷம் எழுப்பியதால் மோதல், கல்வீச்சு ஏற்பட்டது. கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினார்கள். இந்த சம்பவம் தொடர்பாக தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டனர்.
ராஜபாளையம்:
விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், பால்வளத்துறை அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி நேற்று முன்தினம் அளித்த பேட்டியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா ஆகிய 2 பேரையும் அவதூறாக விமர்சித்ததாக, அவரை கண்டித்து ராஜபாளையத்தில் தி.மு.க.வினர் நேற்று திரண்டு ராஜேந்திரபாலாஜி உருவபொம்மையை எரிக்க முயன்றனர்.
இந்த தகவல் அறிந்ததும் அ.தி.மு.க.வினர் காந்தி சிலை ரவுண்டானா முன்பு குவிந்தனர். ஒரே இடத்தில் 2 கட்சியை சேர்ந்தவர்களும் கூடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் அ.தி.மு.க.வினருக்கும், தி.மு.க.வினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தகவல் அறிந்து போலீசார் அங்கு விரைந்து 2 தரப்பினரிடமும் பேசினர். ஆனால் யாரும் கலைந்து செல்லவில்லை. மாறாக இருகட்சியினரும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி ஆவேசமாக பேசினர்.
இதற்கிடையே தி.மு.க.வை சேர்ந்த எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன், தென்காசி தொகுதி எம்.பி. தனுஷ்குமார், ஒன்றிய தலைவர் சிங்கராஜ் மற்றும் தி.மு.க.வினர் அரசு மகப்பேறு மருத்துவமனை வழியாக சென்று அமைச்சரை கண்டித்து கோஷங்களை எழுப்பி தென்காசி சாலையில் உருவ பொம்மையை எரித்தனர்.
இதை அறிந்து அ.தி.மு.க. வினர் நகர செயலாளர் ராணா பாஸ்கரராஜ், மேற்கு ஒன்றிய செயலாளர் குருசாமி, பேரவை நகர செயலாளர் துரை முருகேசன் உள்பட அ.தி.மு.க. வினர், தி.மு.க. வினரை எதிர்த்து கோஷங்களை எழுப்பியதுடன், போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சற்று நேரத்தில் தி.மு.க.வினரும், அ.தி.மு.க.வை மாறி, மாறி கோஷங்கள் எழுப்பியதால் மோதலானது. ஒருவர் மீது ஒருவர் கற்கள் மற்றும் செருப்புகளை வீசினர். பின்னர் அ.தி.மு.க.வினர் காந்தி சிலை ரவுண்டானா முன்பு, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உருவ பொம்மையை எரித்தனர்.
பதற்றம் நிலவியதால் விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெருமாள், துணை சூப்பிரண்டு நாக சங்கர் தலைமையில் ஏராளமான போலீசார் வரவழைக்கப்பட்டனர். கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். இதனால் அந்த பகுதி போர்க்களம் போல் மாறியது.
இதையடுத்து தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ., தனுஷ் குமார் எம்.பி., உள்பட தி.மு.க.வை சேர்ந்த 280 பேரையும், அ.தி.மு.க.வை சேர்ந்த 200 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவத்தால் ராஜபாளையத்தில் சிறிது நேரம் கடைகள் அடைக்கப்பட்டன. ராஜபாளையத்தில் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இதேபோல் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை கண்டித்து நேற்று காலையில் தி.மு.க.வினர் விருதுநகர் பழைய பஸ் நிலையம் அருகே திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது உருவபொம்மையை எரிக்க முயன்றனர். அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார், உருவ பொம்மையை பறித்தனர். அந்த நேரத்தில் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க.வினர் அமைச்சரின் உருவப்படத்தை எரிக்க முயன்றனர்.
இதனைத்தொடர்ந்து ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் எம்.எல்.ஏ., வடக்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் ராஜகுரு, இளைஞர் அணி அமைப்பாளர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட 166 பேரை கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இதற்கிடையே அ.தி.மு.க. வினர் மாவட்ட அவைத்தலைவர் விஜயகுமரன் தலைமையில் விருதுநகர் தேசபந்து திடலில் திரண்டனர். அவர்களிடம் கலைந்து செல்லுமாறு போலீசார் கேட்டுக் கொண்டனர். ஆனாலும் அவர்கள் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசாவை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். மேலும் ஆ.ராசாவின் உருவப்படத்தை கிழித்தெறிந்தனர். இந்த போராட்டத்தில் நகர அ.தி.மு.க. செயலாளர் முகமது நயினார், ஒன்றிய செயலாளர்கள் தர்மலிங்கம், கே.கே. கண்ணன், மேற்கு ஒன்றிய பொருளாளர் ராஜசேகர் உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம் முழுவதும் 9 இடங்களில் தி.மு.க.வினர் அமைச்சரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் கலந்துகொண்ட 1,370 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதில் அருப்புக்கோட்டையில் 120 பேரும், ஸ்ரீவில்லிபுத்தூரில் 160 பேரும், காரியாபட்டியில் 275 பேரும், திருச்சுழியில் 80 பேரும், வத்திராயிருப்பில் 145 பேரும், சிவகாசியில் 165 பேரும், சாத்தூரில் 175 பேரும் அடங்குவர்.
இதே போல் ஸ்டாலின், ஆ.ராசாவை கண்டித்து அ.தி.மு.க.வினர் விருதுநகர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, சிவகாசி, வத்திராயிருப்பு, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்பட 10 இடங்களில் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் 5 இடங்களில் ரூ.3 கோடி செலவில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான பூமிபூஜை நடைபெற்றது.
சிவகாசி:
சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருத்தங்கல் பகுதியில் அமைந்துள்ள நின்ற நாராயணபெருமாள் கோவிலுக்கு ரூ.10 லட்சம் செவலில் தோரணவாயில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான பூமி பூஜை நேற்று காலை நடைபெற்றது.
இதில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து திருத்தங்கல் நகராட்சிக்கு உட்பட்ட 10-வது வார்டு பகுதியில் ரூ.7 லட்சம் செலவில் புதிய மேல்நிலை குடிநீர் தொட்டி கட்ட முடிவு செய்யப்பட்டு அதற்கான பூமிபூஜை நடைபெற்றது. இதில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
இதை தொடர்ந்து திருத்தங்கல் நகராட்சிக்கு உட்பட்ட 6-வது வார்டு பகுதியில் ரூ.10 லட்சம் செலவில் புதிய அங்கன்வாடி கட்டிடம், திருத்தங்கல் சத்யா நகரில் உள்ள சிவகாசி ஒன்றிய மேல்நிலைப்பள்ளியில் ரூ.68 லட்சம் செலவில் அறிவியல் ஆய்வகம், நூலகம், கணினி அறை, கலை மற்றும் கைவினை அறைகள் கட்ட முடிவு செய்யப்பட்டு அதற்கான பூமி பூஜைநடைபெற்றது.
மேலும் மாரனேரியில் உள்ள ஊராட்சி ஒன்றிய மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.2 கோடி செலவில் 6 வகுப்பறை கட்டிடங்கள், அறிவியல் ஆய்வகம், மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக கழிப்பறை, சுற்றுச்சுவர் ஆகியவை அமைப்பதற்கான பூமிபூஜை நடைபெற்றது. இதில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
ரூ.3 கோடி செலவில் அமைக்கப்பட உள்ள புதிய கட்டிடங்களுக்கான பூமிபூஜை விழாவில் திருத்தங்கல் நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) பாண்டிதாய், முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் பொன்சக்திவேல், விருதுநகர் மாவட்ட அறநிலையக் குழு தலைவர் பலராமன், ஒன்றிய செயலாளர்கள் வேண்டுராயபுரம் சுப்பிரமணி, கருப்பசாமி, ஒன்றிய கவுன்சிலர் வடமலாபுரம் ஆழ்வார்ராமானுஜம், இளைஞர்-இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் விஸ்வநத்தம் ஆரோக்கியராஜ், திருத்தங்கல் நகராட்சி முன்னாள் கவுன்சிலர்கள் சரவணக்குமார், ரமணா, சேதுராமன், கிருஷ்ணமூர்த்தி, காளிராஜ், கோவில் பிள்ளை, ஆ.செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சிவகாசி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகாசி:
சிவகாசி அருகே உள்ள செங்கமலநாச்சியார்புரம் பஞ்சாயத்துக்கு உட்பட்டது சாரதா நகர். இந்த பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் இப்பகுதியில் இருந்த குடிநீர் மின்மோட்டார் பழுதாகிவிட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக இப்பகுதியில் கடந்த 10 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், இங்குள்ள தெருவிளக்குகள் முறையாக பராமரிக்காததால் சரிவர எரியவில்லை எனவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில் சாரதாநகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 150 பேர் குடிநீர் கேட்டும், தெருவிளக்குகளை சரியாக பராமரிக்க வலியுறுத்தியும் வார்டு உறுப்பினர்கள் முருகேஸ்வரி, சுரேஷ் ஆகியோர் தலைமையில் நேற்று காலை சிவகாசி-செங்கமலநாச்சியார்புரம் சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த சிவகாசி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் பஞ்சாயத்து நிர்வாகிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
பின்னர் அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது கோரிக்கைகளை சில நாட்களில் நிறைவேற்றி தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

தமிழக அரசியலில் ஆ.ராசா மூலம் ஒரு கீழ்த்தரமான அரசியலை திமுக தலைவர் ஸ்டாலின் கையில் எடுத்துள்ளார் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி குற்றம் சாட்டினார்.
விருதுநகர்:
விருதுநகரில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக அரசியலில் ஆ.ராசா மூலம் ஒரு கீழ்த்தரமான அரசியலை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கையில் எடுத்துள்ளார். ஆ.ராசாவை வைத்து அவதூறாக பேசுவதை வன்மையாக கண்டிக்கிறோம்.
விவசாய சட்டங்களைப் பற்றியும் விவசாயிகளைப் பற்றியும் பேசுவதற்கு ஸ்டாலினுக்கு எந்த அருகதையும் கிடையாது.
காமராஜர் வழியில் நாங்கள் ஏராளமான பள்ளிக்கூடங்களை தந்துள்ளோம். குடிமராமத்து மூலம் ஏராளமான கண்மாய்களை தூர்வாரி உள்ளோம், காமராஜரை பற்றி பேச அ.தி.மு.க.விற்கு மட்டுமே உரிமை உண்டு.
பாரதிய ஜனதா கட்சி ஒன்றும் அமெரிக்காவில் இல்லை. இந்தியாவில்தான் உள்ளது. அந்த கட்சி தீண்டத்தகாத கட்சி இல்லை. இந்தியாவில் பெரும்பாலான மக்கள் வாக்களித்து பிரதமராக மோடி உள்ளார். பா.ஜ.க. திட்டங்களுக்கு நாங்கள் ஆதரவு கொடுத்து வருகிறோம். மக்களுக்கு எதிரான திட்டங்கள் இருந்தால் எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம்.
பாரதிய ஜனதா அழுத்தம் கொடுத்துதான் ரஜினி கட்சி ஆரம்பித்தார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ரஜினி சுயமாக சிந்திக்கக்கூடியவர். ஒட்டுமொத்தமாக சேர்ந்து தி.மு.க.வை படுதோல்வி அடையச் செய்வதுதான் அ.தி.மு.க.வின் ஒரே நோக்கமாகும்.
ரஜினிகாந்த் அரசியலில் பா.ஜ.க. பின்னணியில் இருந்தால் என்ன? முன்னணியில் இருந்தால் என்ன? தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஏன் இவ்வளவு பயப்படுகிறார்?
விருதுநகரில் மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகள் முடிவடைய உள்ளது. ஜனவரியில் முதல்-அமைச்சர் திறந்து வைக்க உள்ளார். விருதுநகர் மாவட்டத்திற்கு அவர் வந்தால் வெறுங்கையோடு வரவே மாட்டார் ஏராளமான திட்டங்களை கொண்டு வருவார்.

புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது போல பாதிப்படைந்த சிறு வியாபாரிகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத்தலைவர் விக்கிரமராஜா வலியுறுத்தினார்.
விருதுநகர்:
விருதுநகரில் மாவட்ட பேரமைப்பின் கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
விருதுநகரில் மாவட்டத்தில் வியாபாரிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து கலந்தாய்வு செய்யப்பட்டது. இதற்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். விருதுநகருக்குள் நெடுந்தூர பஸ்கள் வராமல் நான்கு வழிச்சாலையில் செல்வதால் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தூத்துக்குடி, நெல்லை போன்ற நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி அமைப்பு பணிகளுக்காக கடைகள் அகற்றப்பட்டன. 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் கட்டுமான பணிகள் முடியவில்லை. இதனால் வியாபாரிகளுக்கு பெரிதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கடைகள் கட்டுமான பணியை முடிக்க உறுதி அளிப்பதோடு, வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கப்படாவிட்டால் கடைகளை அகற்ற ஒத்துழைப்பு அளிக்காமல் போராட வேண்டியது வரும்.
மத்திய அரசு அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து உருளைக்கிழங்கு, வெங்காயம், எண்ணெய் வித்துக்கள், பயறு வகைகள் ஆகியவற்றை நீக்க வேண்டும்.
இதுகுறித்து ஏற்கனவே கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. புயல் பாதிப்பால் விவசாயிகளை போன்று சிறு வியாபாரிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். நாளை நாமக்கல்லில் நடைபெற உள்ள பேரமைப்பு மாநாட்டில் விவசாய சட்ட திருத்தங்களுக்கு ஆதரவு கொடுப்பது பற்றி முடிவு எடுக்கப்படும். அதுகுறித்து பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் பேட்டி அளித்தார்.
விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி உருவ பொம்மையை எரித்து திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர்:
முதல்வரின் ஊழல் குற்றச்சாட்டு குறித்து பேசிய திமுக எம்.பி ஆ.ராசா, “ஊழல் குற்றச்சாட்டில் திமுகவில் இதுவரை யாரும் தண்டிக்கப்படவில்லை. ஆனால் 2ஜி உட்பட ஏதாவது ஒரு குற்றச்சாட்டில், குற்றம் நிரூபிக்கப்பட்டிருக்கும் என்றால் நாளையோ, நாளை மறுநாளோ கோட்டையில், எல்லா ஊடகங்கள் முன்னிலையில், 2ஜி, சர்க்காரியா கமிஷன் குறித்து விவாதிக்க நான் தயார். அவர் தயாரா? ” எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி “முதல்வரை ஏன் கூப்பிடுகிறாய்? எங்கு வரவேண்டும்? நான் வருகிறேன். ராசாவுடன் ஆனாலும் சரி, ஸ்டாலினுடன் ஆனாலும் சரி. ஊழல் செய்தாயா இல்லையா? சர்க்காரியா கமிஷனால் குற்றம்சாட்டப்பட்ட கட்சி தானே திமுக.” எனத் தெரிவித்திருந்தார்.
அமைச்சரின் இந்த பதில் திமுகவினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அவரின் உருவ பொம்மையை எரித்து திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை போலீசார் தடுத்துநிறுத்தி அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் உருவ பொம்மையை எரிக்க முயன்ற திமுகவினரை தடுக்க முற்பட்டபோது போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. விருதுநகரில் அமைச்சரின் உருவ பொம்மையை எரிக்க திமுகவினர் முயன்றனர். அப்போது அதிமுகவினரும் அங்கு குவிந்தனர். இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டது. தகவலறிந்த போலீசார் சுற்றி வளைத்து உருவ பொம்மையைப் பறித்துச் சென்றனர். தொடர்ந்து திமுகவினருக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.
அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியின் உருவப்படங்களை திமுகவினர் தீயிட்டு எரித்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
அமைச்சரின் உருவ பொம்மையை எரிக்கும் தகவலறிந்து அதிமுக ஒன்றிய அவைத்தலைவர் விஜயகுமாரன், ஒன்றியச் செயலர்கள் தர்மலிங்கம், கண்ணன் மற்றும் அதிமுகவினர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அப்பொழுது திமுக தலைவர் ஸ்டாலின் உருவ பொம்மையை அதிமுகவினர் எரிக்க முயன்றனர். போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தி உருவ பொம்மையை பறிமுதல் செய்தனர்.
திமுகவினரை கண்டித்து அதிமுகவினரும் குவிந்ததால் விருதுநகரில் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு கருதி நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ராஜபாளையத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் உருவ பொம்மையை அதிமுகவினர் தீயிட்டு எரித்தனர். அப்போது திமுகவினருக்கு அதிமுகவினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
இதுபோன்ற போராட்டங்களால் விருதுநகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. முக்கிய சாலைகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
வத்திராயிருப்பு அருகே பெரிய குளம் கண்மாய் முழு கொள்ளளவை எட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
வத்திராயிருப்பு:
வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும், கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்த மழையினால் வத்திராயிருப்பு அருகே உள்ள பெரியகுளம் கண்மாய் அதன் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. இதனால் வத்திராயிருப்பு பகுதியை சுற்றி உள்ள விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த பெரியகுளம் கண்மாய் மூலமாக வத்திராயிருப்பு தாலுகா பகுதியில் உள்ள வ.புதுப்பட்டி, அனுப்பன்குளம், மாதவராயன் குளம், பணிக்கர் குளம், வத்திராயிருப்பு வில்வராயன் குளம், சுந்தரபாண்டியம் செங்குளம், குன்னூர் செங்குளம், கோவனேரி கண்மாய், பாத்தனேரி கண்மாய், நத்தம்பட்டி பெரியகுளம் கண்மாய் ஆகிய பகுதிகளுக்கு தண்ணீர் செல்கிறது.
வத்திராயிருப்பு பெரியகுளம் கண்மாய் மூலம் வத்திராயிருப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 900 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. வத்திராயிருப்பு தாலுகா பகுதியில் உள்ள 40 கண்மாய்களில் தற்போது 19 கண்மாய்கள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. மீதமுள்ள 21 கண்மாய்கள் 30 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை தண்ணீர் நிரம்பி உள்ளது.
வத்திராயிருப்பு பெரியகுளம் கண்மாய் கடந்த ஆண்டு பெய்த மழையின் மூலம் அதன் முழு கொள்ளளவை எட்டியது. பின்னர் போதிய மழை இல்லாததால் சில மாதங்கள் மட்டுமே கண்மாயில் தண்ணீர் இருந்தது.
ஆனால் இந்த ஆண்டு பெய்த தொடர் மழையால் வத்திராயிருப்பு பெரியகுளம் கண்மாய் முழு கொள்ளளவை எட்டியது. அத்துடன் கண்மாய்க்கு நீர்வரத்து வந்து கொண்டிருப்பதால் இன்னும் 9 மாதங்களுக்கு விவசாயத்திற்கு தண்ணீர் போதுமான அளவு இருப்பு உள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கூறினர்.
பாசனத்திற்கு தேவையான தண்ணீர் இருப்பதால் விவசாயிகள் தற்போது உரமிடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.