என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீதிமன்றம்
    X
    நீதிமன்றம்

    10 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு சாகும் வரை சிறை- ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு தீர்ப்பு

    10 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் அருகே உள்ள தம்மநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் தங்கவேல் (வயது51). இவர் பட்டாசு ஆலையில் தொழிலாளியாக பணியாற்றினார்.

    இவர் கடந்த 2014-ம் ஆண்டு 10 சிறுமிகளை, டி.வி.யில் கார்ட்டூன் படம் காட்டுவதாக கூறி தனது வீட்டின் மாடிக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் விருதுநகர் அனைத்து மகளிர் போலீசார் தங்கவேலுவை கைது செய்தனர். இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள போக்சோ வழக்குகளுக்கான நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

    இந்த வழக்கை நீதிபதி பரிமளா விசாரித்து, தங்கவேலுக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்தும், ரூ.2 லட்சத்து 45 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பு அளித்தார். அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கவும் நீதிபதி பரிந்துரை செய்தார்.
    Next Story
    ×