என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கு கொரோனா

    விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 3 லட்சத்து 25 ஆயிரத்து 899 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 16,022 பேருக்கு நோய் பாதிப்பு உறுதியானது. 15,652 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். 2,220 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்பட வில்லை.

    142 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் யாரும் தனிமைப்படுத்தப்படவில்லை. மாவட்டத்தில் நேற்று மேலும் 15 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,037 ஆக உயர்ந்துள்ளது.

    மாவட்ட சுகாதார துறையினர் 3 பேருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள நிலையில், மாநில சுகாதார துறையினர் இம்மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 15 என உறுதிப்படுத்தியுள்ளது. பாதிப்பு பட்டியல் வெளியிடுவதில் தொடரும் இந்த முரண்பாடு ஏன்? என்று தெரியவில்லை.

    மேலும் மாவட்ட சுகாதாரத்துறை பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதி பற்றிய விவரங்களை தெரிவிக்காத நிலை தொடர்வதால் மாவட்டத்தில் கிராம பகுதிகளில் நோய் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும் நிலை உள்ளது.

    மேலும் மாவட்டத்தில் 370 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பாதிப்படைந்தவர்கள் அரசு ஆஸ்பத்திரிகளில் அல்லது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோ இருக்க வேண்டும். ஆனால் 142 பேர் மட்டுமே அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வீடுகளில் யாரும் தனிமைப்படுத்தப்பட வில்லை. பாதிப்படைந்த 228 பேர் நிலைபற்றி மாவட்ட சுகாதாரத்துறை எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. இந்நிலை நீடித்தால் மாவட்டத்தில் நோய் பாதிப்பை முற்றிலும் தவிர்க்க வாய்ப்பு ஏற்படுவது என்பது சாத்தியப்படாது.
    Next Story
    ×