என் மலர்
செய்திகள்

விபத்து
அருப்புக்கோட்டை அருகே வேன் கவிழ்ந்து விபத்து - 13 பேர் காயம்
அருப்புக்கோட்டை அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் 13 பேர் காயம் அடைந்தனர்.
அருப்புக்கோட்டை:
பல்லடத்தை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 48). இவர் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் பிள்ளையார்பட்டி மற்றும் திருச்செந்தூர் கோவிலுக்கு செல்வதற்காக தனக்கு சொந்தமான வேனில் சென்றார். வேனை துரைராஜ் ஓட்டினார்.
இந்தநிலையில் திருச்செந்தூர் கோவிலுக்கு செல்வதற்காக தூத்துக்குடி நான்கு வழிச்சாலை அருப்புக் கோட்டை அடுத்த கட்டங்குடி விலக்கு அருகே வந்து கொண்டிருந்தபோது வேன் நிலைதடுமாறி அருகே சாலை நடுவே உள்ள தடுப்புச்சுவரின் மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த டவுன் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் விரைந்து வந்து வேனுக்குள் காயமடைந்த துரைராஜ் உள்பட 13 பேரையும் மீட்டனர். பின்னர் அவர்களை சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு தலைகீழாக கவிழ்ந்து கிடந்த வேனை உடனடியாக போலீசார் அப்புறப்படுத்தினர். இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story