என் மலர்
விருதுநகர்
விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் எந்திரமயமாக்கப்பட்ட தீப்பெட்டி ஆலைகள் உள்ளன.
விருதுநகர்:
விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் எந்திரமயமாக்கப்பட்ட தீப்பெட்டி ஆலைகள் உள்ளன. இந்த பகுதிகளில் சுமார் 600 தீப்பெட்டி ஆலைகள் எந்திரங்கள் மூலம் தீப்பெட்டி தயாரிப்பு செய்து வருகின்றனர். இதன் மூலம் 4 லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். இதில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர்.
இந்தநிலையில் தீப்பெட்டி உற்பத்திக்கான வேதியல் பொருட்கள், தீக்குச்சி, அட்டைப்பெட்டி ஆகிய மூலப்பொருட்களின் விலை வெகுவாக உயர்ந்து உள்ள நிலையிலும், பெட்ரோல், டீசல் விலையினால் மூலப்பொருட்களின்அடக்க விலை மேலும் அதிகரித்துள்ளது. மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பால் பெரும் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.
தீக்குச்சி மட்டுமின்றி வேதிப்பொருட்கள் கிடைப்பதிலும் தட்டுப்பாடு உள்ளது.
இந்தநிலையில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் இன்று முதல் இந்த மாத இறுதி வரை 10 நாட்கள் தீப்பெட்டி ஆலைகளை மூட முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் 4 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்படும்.
மேலும் அடுத்த மாதம் முதல் 600 தீப்பெட்டிகள் கொண்ட பண்டலுக்கு ரூ.40 விலையை அதிகரிக்க முடிவு செய்துள்ளனர்.
எனவே தமிழக அரசு தீப்பெட்டி உற்பத்தியாளர்களுக்கு மூலப்பொருட்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பதற்கும், வெளி மாநிலங்களுக்கு தீப்பெட்டி பண்டல்களை அனுப்புவதற்கும் தேவையான உதவி கிடைப்பதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
விருதுநகர்:
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்ட பிரசார கூட்டம் நேற்று முன்தினம் இரவு விருதுநகரில் நடந்தது. இதில் விருதுநகர் மாவட்டத்தில் போட்டியிடும் 7 தொகுதிகளின் வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த பிரசார கூட்டம் இரவு 10 மணிக்கும் மேல் கூடுதலாக 10 நிமிடங்கள் நடைபெற்றதாக நிலை கண்காணிப்புக்குழு அதிகாரி மோகன்ராஜ் விருதுநகர் மேற்கு போலீசில் புகார் அளித்தார்.
அதன் பேரில் சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 7 போ் உள்ளிட்ட 450 பேர் மீது தேர்தல் விதிமுறை மீறல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் விதிமுறைகளை மீறி இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்ததாக சீமான் மீது மாவட்ட தொழில் மைய புள்ளிவிவர ஆய்வாளர் விருதுநகர் போலீசில் புகார் கொடுத்தார்.
விருதுநகர்:
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று இரவு விருதுநகரில் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் தேர்தல் விதிமுறைகளை மீறி இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்ததாக மாவட்ட தொழில் மைய புள்ளிவிவர ஆய்வாளர் மோகன்ராஜ் என்பவர் விருதுநகர் போலீசில் புகார் கொடுத்தார்.
இதுதொடர்பாக போலீசார் சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் செல்வகுமார்(விருதுநகர்), ஆனந்த ஜோதி(திருச்சுழி), பிரியா (சிவகாசி), ஜெயராஜ் (ராஜபாளையம்), பாண்டி (சாத்தூர்), அபிநயா (ஸ்ரீவில்லிபுத்தூர்), உமா அடைக்கலம் (அருப்புக்கோட்டை) ஆகிய 7 தொகுதி வேட்பாளர்கள் உள்பட கட்சியினர் 450 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் திருச்சுழி மற்றும் அருப்புக்கோட்டை தொகுதிகளுக்கு சட்டசபை தேர்தல் செலவின பார்வையாளராக நர்சிங்குமார் கால்கோ நியமனம் செய்யப்பட்டார்.
விருதுநகர்:
அருப்புக்கோட்டை, திருச்சுழி தொகுதி தேர்தல் பணிக்கு வந்த வடமாநில அதிகாரி கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார். அவரது உதவி அதிகாரிக்கும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் திருச்சுழி மற்றும் அருப்புக்கோட்டை தொகுதிகளுக்கு சட்டசபை தேர்தல் செலவின பார்வையாளராக நர்சிங்குமார் கால்கோ (வயது 40) நியமனம் செய்யப்பட்டார். இவர் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஐ.ஆர்.எஸ். அதிகாரி ஆவார்.
இவர் கடந்த 18-ந் தேதி விருதுநகர் மாவட்டத்துக்கு வந்தார். இந்நிலையில் அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததால் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து அவர் மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இவரது உதவி அதிகாரியாக கருவூலத்துறை கண்காணிப்பாளர் முருகன் நியமிக்கப்பட்டு இருந்தார். அவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்ததில் பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது.
ஆனால் இவருக்கு அறிகுறி ஏதும் இல்லாத நிலையில் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதால் அருப்புக்கோட்டையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.

சாத்தூரில் முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம் விதித்து நகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
சாத்தூர்:
தமிழகத்தில் தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில் சாத்தூர் நகராட்சி ஆணையாளர் ராஜமாணிக்கம் உத்தரவின் பேரில் சாத்தூர் நகராட்சியில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுக்கும் பொருட்டு சுகாதார அலுவலர் குமார் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் திருப்பதி, கண்ணன், சுகாதார மேற்பார்வையாளர்கள் மற்றும் தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் குழுவாக சென்று கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில் இந்த குழுவினர் மெயின் ரோடு, பஸ் நிலையம், மார்க்கெட், வெம்பக்கோட்டை ரோடு மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முக கவசம் அணியாமல் வரும் பொதுமக்கள் மற்றும் கடைக்காரர்களுக்கு ரூ. 200 அபராதம் விதித்து வருகின்றனர்.
மேலும் இந்த குழுவினர் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அனைவரும் அரசு கூறும் விதிமுறைகளை பின்பற்றி பொது இடங்களில் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் எனவும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும், வீதிக்கு வந்து வீட்டிற்கு செல்லும்போது கை மற்றும் கால்களை சோப்பினால் கழுவ வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படும் எனவும், பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும், இதுவரை முக கவசம் அணியாத 50 நபர்களுக்கு அபராதம் விதித்துள்ளதாக நகராட்சிஆணையாளர் ராஜமாணிக்கம் கூறினார்.
இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜியை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று நடிகை விந்தியா பேசினார்.
ராஜபாளையம்:
ராஜபாளையத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியை ஆதரித்து நடிகை விந்தியா பிரசாரம் செய்தார். அப்போது அவர் திரண்டு இருந்த மக்கள் மத்தியில் பேசியதாவது:-
வெற்றிநடை போடும் தமிழகம் என்றுமே வீரநடை போட வேண்டும். அதற்கு இப்பகுதி மக்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு அளித்து அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியை வெற்றி பெற செய்ய வேண்டும்.
விருதுநகர் மாவட்டத்தில் ஆலமரம் போல் தாங்கி நிற்கும் சக்தி அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு உண்டு.
உங்களுக்காக போராடுபவர். இவரை நம்பினால் வீடும், நாடும் நன்றாக இருக்கும். தி.மு.க.வை நம்பாதீர்கள். 10 ஆண்டுகளாக காய்ந்து போய் இருக்கிறார்கள். அவர்கள் அகோரப்பசியில் இருக்கிறார்கள். பணத்தை மட்டுமல்ல, மக்களையும் புடுங்கி சாப்பிட்டு விடுவார்கள். தயவுசெய்து உஷாராக இருங்கள்.
வராத மழைக்கு வானிலை அறிக்கை கூறுவதும், வராத ஆட்சிக்கு தி.மு.க.வினர் இஷ்டத்திற்கு வாக்குறுதி கொடுத்திருப்பதும் ஒன்றுதான்.. எந்த பிரச்சினையை தி.மு.க. ஆட்சி காலத்தில் தீர்த்து வைத்தார்கள். இப்போது ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களில் பிரச்சினைகளை முடிப்பேன் என ஸ்டாலின் கூறுகிறார். அவரை நம்பாதீர்கள். எத்தனை கட்சி கூட்டணி சேர்ந்தாலும் அ.தி.மு.க.வை தோற்கடிக்க முடியாது.
இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜியை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அதேபோல சிவகாசி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் லட்சுமி கணேசனை ஆதரித்து நடிகை விந்தியா சிவகாசி -திருத்தங்கல் ரோட்டில் உள்ள தேவர் சிலை அருகே பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
நாங்கள் தீபாவளியின் போது மகிழ்ச்சியாக இருக்க உங்கள் உயிரை பணயம் வைத்து வேலை செய்கிறீர்கள். உங்களது உழைப்பை நாடே போற்றுகிறது. தமிழகத்தில் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைய போகிறது. மக்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு வாழ போகிறார்கள். இந்த பகுதியில் உள்ள தீப்பெட்டி, பட்டாசு, அச்சுத்தொழில் பாதுகாக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பிரசாரத்தின் போது அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, வேட்பாளர் லட்சுமி கணேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

அ.ம.மு.க. பற்றி பேச வேண்டாம் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியதோடு, சப்புன்னு அடிக்க போறேன் பாரு என கூறியது சலசலப்பு ஏற்படுத்தியது.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற தேர்தல் அலுவலகம் திறப்பு விழாவிற்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வந்திருந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
இந்தநிலையில் அ.ம.மு.க. பற்றி நிருபர் ஒருவர் கேள்வி கேட்டதற்கு, உடனே அமைச்சர், அ.ம.மு.க. பற்றி பேச வேண்டாம் என்று கூறியதோடு, சப்புன்னு அடிக்க போறேன் பாரு, என கூறினார். இதனால் திடீர் சலசலப்பு ஏற்பட்டது.

100 சதவீத வாக்குப்பதிவினை வலியுறுத்தி விருதுநகரில் மினி மாரத்தான் ஓட்டத்தை கலெக்டர் கண்ணன் தொடங்கி வைத்தார்.
விருதுநகர்:
மாவட்டத்தில் 100 சதவீத வாக்குபதிவினை வலியுறுத்தி வாக்காளர்களை கவரும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் நேற்று செந்திக்குமார நாடார் கல்லூரியில் இருந்து 500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட மினி மாரத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை கலெக்டர் கண்ணன் தொடங்கி வைத்து மாணவர்களை உற்சாகப்படுத்தினார்.
தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய டீ-ஷர்ட் தொப்பிகள் அணிந்து செந்திக்குமார நாடார் கல்லூரியில் தொடங்கி மாரத்தான், அரசு தலைமை ஆஸ்பத்திரி, மாரியம்மன் கோவில், தெப்பக்குளம், கருமாதி மடம், புதிய பஸ்நிலையம் வழியாக 6 கிலோ மீட்டர் தூரம் சென்று மாவட்ட விளையாட்டு அரங்கினை அடைந்தது.
இதை தொடர்ந்து மாவட்ட விளையாட்டரங்கில் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் கண்ணன் வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மங்கள ராமசுப்பிரமணியன், திட்ட இயக்குனர் ஜெயக்குமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலையத்தில் பஸ்சை எடுப்பதில் தனியார் மற்றும் அரசு பஸ் டிரைவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
சிவகாசியில் இருந்து தனியார் பஸ் ஒன்றும், அரசு பஸ் ஒன்றும் நேற்று காலை ஸ்ரீவில்லிபுத்தூர் வந்தது. ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலையத்திற்குள் வந்தவுடன் பஸ்சை எடுப்பதில் இந்த 2 டிரைவர்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து ஒருவருக்கு ஒருவர் மோதல் ஏற்பட்டது.
இந்தநிலையில் அரசு பஸ் டிரைவர் அரசு பஸ்சை ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலையத்திலிருந்து எந்த பஸ்சும் வெளியே செல்லாத வகையில் குறுக்கே நிறுத்தினார்.
இதனால் பஸ் நிலையதத்தின் நுழைவு வாயில் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
காலை 8 மணிக்கு இந்த சம்பவம் நடைபெற்றதால் அலுவலகம், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் விரைந்து சென்று தனியார் மற்றும் அரசு பஸ் டிரைவர்களை விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
இதையடுத்து போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அரசு பஸ் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சரி செய்யப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்து செல்லப்பட்ட ரூ.1 லட்சத்து 21 ஆயிரம் மதிப்பிலான சேலை, வேட்டிகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள எம்.பி.கே. புதுப்பட்டி பகுதியில் பொதுப்பணித்துறையை சேர்ந்த முகைதீன் ஆரிப் ரகுமான் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தன் ஆகியோர் தலைமையில் பறக்கும் படையினர் நேற்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது அதில் காட்டன் வேட்டி, சேலைகள், துண்டுகள், சட்டைகள் ஆகியவை இருந்தன. இவற்றின் மதிப்பு ரூ.1 லட்சத்து 21 ஆயிரம் என கூறப்படுகிறது.
தொடர்ந்து காரில் வந்தவரிடம் விசாரணை நடத்தியதில் மதுரையை சேர்ந்த பாஸ்கர் என்பதும், கேரளாவில் உள்ள பத்தினம் திட்டை பகுதியில் இருந்து மதுரைக்கு அந்த கார் செல்வதும், அந்த துணிகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லை என்பதும் தெரியவந்தது. இதையடுதது அந்த சேலை, துண்டு, சட்டை ஆகியவற்றை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
சாத்தூரில் முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம் விதித்து நகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
சாத்தூர்:
தமிழகத்தில் தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில் சாத்தூர் நகராட்சி ஆணையாளர் ராஜமாணிக்கம் உத்தரவின் பேரில் சாத்தூர் நகராட்சியில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுக்கும் பொருட்டு சுகாதார அலுவலர் குமார் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் திருப்பதி, கண்ணன், சுகாதார மேற்பார்வையாளர்கள் மற்றும் தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் குழுவாக சென்று கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில் இந்த குழுவினர் மெயின் ரோடு, பஸ் நிலையம், மார்க்கெட், வெம்பக்கோட்டை ரோடு மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முக கவசம் அணியாமல் வரும் பொதுமக்கள் மற்றும் கடைக்காரர்களுக்கு ரூ. 200 அபராதம் விதித்து வருகின்றனர்.
மேலும் இந்த குழுவினர் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அனைவரும் அரசு கூறும் விதிமுறைகளை பின்பற்றி பொது இடங்களில் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் எனவும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும், வீதிக்கு வந்து வீட்டிற்கு செல்லும்போது கை மற்றும் கால்களை சோப்பினால் கழுவ வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படும் எனவும், பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும், இதுவரை முக கவசம் அணியாத 50 நபர்களுக்கு அபராதம் விதித்துள்ளதாக நகராட்சிஆணையாளர் ராஜமாணிக்கம் கூறினார்.
சிவகாசி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அசோகன் மனு தாக்கல் செய்தார்.
சிவகாசி:
சிவகாசி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட நேற்று காலை காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அசோகன் தேர்தல் அதிகாரி தினேஷ்குமாரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது தி.மு.க. மாநில நிர்வாகி வன ராஜா, காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ராஜாசொக்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.
இவரை தொடர்ந்து மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் முகுந்தன் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவரை தொடர்ந்து சுயேச்சைகளாக கண்ணன், தங்கராஜ், பாண்டியராஜ், பாலகிருஷ்ணன், கணேசன், ஜேசுதாஸ் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். சிவகாசி சட்டமன்ற தொகுதியில் இதுவரை அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என 12 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.