என் மலர்
விருதுநகர்
திமுக-வும் அதிமுக கூட்டணியில் பா.ஜனதாவும் நேருக்குநேர் மோதும் விருதுநகர் தொகுதி கண்ணோட்டம்.
விருதுநகர் தொகுதியில் தி.மு.க. சார்பில் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் மீண்டும் களம் இறங்கி உள்ளார். அ.தி.மு.க. இந்த முறை தொகுதியை கூட்டணி கட்சியான பா.ஜனதாவுக்கு விட்டு கொடுத்துள்ளது. இந்த கட்சி சார்பில் பாண்டுரங்கன் போட்டியிடுகிறார்.
தனக்கு நிச்சயம் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என தீவிர களப்பணியாற்றிய அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். மன்ற மேற்கு மாவட்ட செயலாளர் கோகுலம் தங்கராஜ் சீட் கிடைக்காததால் விரக்தி அடைந்து அ.ம.மு.க.வில் இணைந்து அதன் வேட்பாளராக களம் இறங்கி உள்ளார்.

இவர்கள் தவிர மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் மணிமாறனும், நாம் தமிழர் கட்சி சார்பில் செல்வகுமாரும் போட்டியில் உள்ளனர்.
மேலும் குணசேகரன் (புதிய தமிழகம்), சுயம்புலிங்கம் (மை இந்தியா பார்ட்டி), விக்ரமன், கருப்பையா, குருநாதன், சிபி, தங்கபாண்டி, தங்கராஜ், தாமோதரன், பாண்டுரங்கன், புங்கன், ராமராஜ், வேலுசாமி என மொத்தம் 18 பேர் விருதுநகர் தொகுதியில களத்தில் உள்ளனர்.
பா.ஜனதா வேட்பாளர் பாண்டுரங்கள் சொத்து மதிப்பு
1. கையிருப்பு- ரூ. 1,00,850
2. அசையும் சொத்து- ரூ. 1,35,48,112
3. அசையா சொத்து- ரூ. 4,49,30,000
தி.மு.க. வேட்பாளர் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் சொத்து மதிப்பு
1. கையிருப்பு- ரூ. 30,000
2. அசையும் சொத்து- ரூ. 44,65,419
3. அசையா சொத்து- ரூ. 12,00,000
விருதுநகர்... பெயரை உச்சரித்தவுடன் நினைவுக்கு வருபவர் காமராஜர்தான். இந்த ஊரில் பிறந்த அவர் கல்வி கண் திறந்தவர், சத்துணவு திட்டம் தந்தவர், எளிமையாக வாழ்ந்தவர், இந்திய அரசியலில் முக்கியத்துவம் பெற்றவர் என பல்வேறு புகழுக்கு சொந்தக்காரர்.

முதல்- அமைச்சர் பதவி வகித்தபோதும் தனக்கோ, குடும்பத்துக்கோ எந்த சொத்தும் சேர்க்காதவர். இப்படி நேர்மையுடன் வாழ்ந்த காமராஜர் 1967-ம் ஆண்டு சொந்த தொகுதியிலேயே தோற்கடிக்கப்பட்டார் என்பது வேதனையான ஒன்றுதான்.
இதுகுறித்து பேசிய அன்றைய முதல்- அமைச்சர் அண்ணாத்துரை தி.மு.க. விருதுநகரில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளித்தாலும் காமராஜர் வெற்றி வாய்ப்பை இழந்தது மிகுந்த வருத்தத்தை அளிப்பதாக குறிப்பிட்டார்.
விருதுநகர் தொகுதி சாத்தூருடன் இணைந்த 1957 மற்றும் 1962-ம் ஆண்டுகளில்தான் காமராஜர் வெற்றி பெற்று முதல்- அமைச்சர் ஆனார்.

தற்போதைய விருதுநகர் தொகுதியில் விருதுநகர் நகராட்சி மற்றும் யூனியன் சிவகாசி யூனியனில் சில பகுதிகள் அடங்கி உள்ளன. இந்த தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2,24,327. ஆண்கள் 1,09,607. பெண்கள் 1,14,674. மூன்றாம் பாலினத்தவர் 46.
விருதுநகர் தொகுதியை பொறுத்தவரை நாயக்கர், நாடார், தேவர், தேவேந்திரகுல வேளாளர் இனத்தவர் அதிகம் உள்ளனர்.
விருதுநகருக்கு மற்றொரு சிறப்பு வணிக நகர் என்பதுதான். இங்கு விவசாய விளை பொருட்கள் எதுவும் சாகுபடி செய்யப்படாவிட்டாலும் பல்வேறு பொருட்களின் விலையை நிர்ணயம் செய்வது விருதுநகர் சந்தைதான். இங்கு இருந்து தான் மல்லி, வத்தல், சமையல் எண்ணை, பருப்பு வகைகள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.
கிராம பகுதிகளில் மானாவாரி சாகுபடி நடைபெற்றாலும் தொகுதியில் பெருமளவு முன்னேறவில்லை. விருதுநகர் மாவட்டம் கல்வியில் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது. ஆனால் இங்கு அரசு கல்லூரி, அரசியல் என்ஜினீயரிங் கல்லூரி போன்றவை இதுவரை அமைக்கப்படவில்லை.

விருதுநகர் பகுதியில் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக வேறு மாவட்டங்களையே நாடிச்செல்கின்றனர். 2010-ம் ஆண்டு இந்த பகுதியில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க எடுத்த முயற்சியும், தொழில் முதலீட்டு மண்டலம் அமைக்க மேற்கொண்ட நடவடிக்கையும் பலன் தரவில்லை.
2015-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட சிப்காட் தொழில்பூங்காவும் இன்னும் பயன்பாட்டிற்கு வராதநிலைதான் உள்ளது. 1985-ம் ஆண்டு விருதுநகரை தலைமையிடமாக கொண்டு மாவட்டம் உருவானபோது இனி பெரும் முன்னேற்றம் கிடைக்கும் என எதிர்பார்த்த மக்களுக்கு இதுவரை ஏமாற்றமே கிடைத்துள்ளது.

விருதுநகரில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், குடிநீர் விநியோக திட்டத்தை புனரமைத்து குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதும் மக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.

1952 ராமசாமி
1954 சண்முகநாடார் (காங்கிரஸ்)
1957 மற்றும் 1962-ம் ஆண்டுகளில் விருதுநகர் தொகுதி சாத்தூர் தொகுதியில் இணைக்கப்பட்டது. அப்போது காமராஜர் வெற்றி பெற்றார்.
1967 சீனிவாசன் (தி.மு.க.)
1971 சீனிவாசன் (தி.மு-.க.)
1977 சுந்தர்ராஜன் (அ.தி.மு.க.)
1980 சுந்தர்ராஜன் (அ.தி.மு.க.)
1984 ஆறுமுகம் (ஜனதா தளம்)
1989 சொக்கர் (காங்கிரஸ்)
1991- சஞ்சய்ராமசாமி (காங்கிரஸ்)
1996 ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் (தி.மு.க.)
2001 தாமோதரன் (த.மா.கா.)
2006 வரதராஜன் (ம.தி.மு.க.)
2011 பாண்டியராஜன் (தே.மு.தி.க.)
2016 ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் (தி.மு.க.)
விருதுநகர் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி நாள்தோறும் பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
சாத்தூர்:
விருதுநகர் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி நாள்தோறும் பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
பள்ளி மாணவர்கள், நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்ட வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
சாத்தூர் எட்வர்டு மேல்நிலைப்பள்ளியில் மூவர்ண பலூன்களை மாவட்ட கலெக்டர் கண்ணன் பறக்க விட்டு பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.
பின்னர், சாத்தூர் முக்குராந்தல் பகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி கிராமிய கலைக்குழுவினரின் சிலம்பாட்டம், தப்பாட்டம், நையாண்டி, மேளம் மற்றும் மாணவர்கள் பாடிய தேர்தல் விழிப்புணர்வு பாடல்கள் ஆகிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
சாத்தூர் நகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்களால் போடப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு ரங்கோலி கோலத்தினை அவர் பார்வையிட்டார்.
தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை மாவட்ட கலெக்டர் கண்ணன், சாலையில் செல்லும் பொதுமக்கள் அனைவருக்கும் வழங்கினார். தொடர்ந்து தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட கலெக்டர் கண்ணன் தலைமையில் எடுத்துக்கொண்டனர். மேலும் மாதிரி வாக்குப்பதிவு எந்திரத்தின் மூலம் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மங்களராமசுப்ரமணியன், திட்ட இயக்குனர் ஜெயக்குமார், சாத்தூர் ஆர்.டி.ஓ. புஷ்பா, சாத்தூர் நகராட்சி ஆணையாளர் ராஜமாணிக்கம், தாசில்தார் வெங்கடேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட 50 மூடை அரிசியை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நகரில் பறக்கும் படையினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராமச்சந்திராபுரம் பகுதியில் பறக்கும் படை அதிகாரி கண்காணிப்புக்குழு அலுவலர் சிவராம்குமார் மற்றும் சப்- இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக சரக்கு ஆட்டோ ஒன்று வந்தது. அந்த ஆட்டோவை நிறுத்தி அவர்கள் சோதனை செய்து பார்த்தனர்.
அதில் உரிய ஆவணங்கள் இன்றி மூடை ஒன்றுக்கு 50 கிலோ வீதம் 50 மூடை அரிசி பிளாஸ்டிக் பைகளில் இருந்தது ெதரியவந்தது.
இதையடுத்து அந்த அரிசி மூடைகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் முருகன், வட்ட வழங்கல் அதிகாரி கோதண்டராமன், தாசில்தார் சரவணன் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து வட்ட வழங்கல் அதிகாரி கோதண்டராமன் கூறியதாவது:-
பறிமுதல் செய்யப்பட்ட அரிசி குறித்து தற்போது விசாரணை நடைபெற்று கொண்டிருக்கிறது. விசாரணையின் முடிவில் அரிசி எங்கிருந்து கொண்டு செல்லபட்டது என்பது தெரியவரும்.
மேலும் தரக்கட்டுப்பாட்டு அதிகாரியின் சோதனைக்கு உட்படுத்தி அதன் பின்னரே இது ரேஷன் அரிசியா அல்லது எந்த வகையான அரிசி என்பது குறித்த முழு விவரங்கள் தெரியவரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட அரிசியை வட்ட வழங்கல் அதிகாரி தலைமையிலான குழுவினர் பார்வையிட்டனர்.
சாத்தூர் அருகே கார் - இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் கணவன் கண் முன்னே மனைவி பரிதாபமாக இறந்தார்.
சாத்தூர்:
தூத்துக்குடி மாவட்டம் சில்லாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமண பெருமாள் (வயது57). இவரது மனைவி இந்திராணி (50).
இவர்கள் இருவரும் நத்தத்துப்பட்டியில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிட்டு விட்டு உப்பத்தூர் விலக்கு அருகில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, தூத்துக்குடி மாவட்டம் அகிலாண்டபுரத்தை சேர்ந்த வர்கீஸ் (50) என்பவர் ஓட்டி வந்த கார், இருசக்கர வாகனம் மீது மோதியது.
இந்த விபத்தில் இந்திராணி பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த லட்சுமண பெருமாளை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
சம்பவ இடத்தில் உயிரிழந்த இந்திராணியின் உடலை மீட்டு சாத்தூர் தாலுகா போலீசார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து கார் டிரைவர் வர்கீசை கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கணவன் கண் முன்னே மனைவி இறந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் நிச்சயமாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டத்தில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பிரசாரம் மேற்கொண்டார்.
அருப்புக்கோட்டையில் தி.மு.க. வேட்பாளர் சாத்தூர் ராமச்சந்திரனையும்,, திருச்சுழியில் தங்கம் தென்னரசுவையும், விருதுநகரில் ஏ.ஆர்.ஆர். சீனிவாசனையும், சாத்தூரில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் ம.தி.மு.க. வேட்பாளர் ரகுராமனையும், ராஜபாளையத்தில் தி.மு.க. வேட்பாளர் தங்கப்பாண்டியனையும் ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பேசினார். பிரசாரத்தில் அவர் பேசியதாவது:-
பா.ஜ.க. தமிழகத்தில் எந்த காலத்திலும் காலூன்ற முடியாது. பிரதமர் மோடிக்கு தமிழக மக்கள் மீது கோபம். அதனால்தான் ஜி.எஸ்.டி. வரியால் தமிழகத்துக்கு வர வேண்டிய ரூ.15 ஆயிரம் கோடியை தராமல் இழுத்தடிக்கிறார்.
எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் தயவால் முதல்-அமைச்சர் ஆனவர். அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்-அமைச்சர் அல்ல. அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டால்தான் மக்களின் கஷ்டம் என்னவென்று அவருக்கு தெரியும். தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் நிச்சயமாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.
பிரதமர் மோடியையும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் நம்பாதீர்கள். மதுரையில் 3 ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். அங்கு வேறு எந்த பணியும் நடக்கவில்லை.
தி.மு.க. ஆட்சி அமைந்தால்தான் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும். கொரோனா காலத்தில் பிரதமர் மோடி சொகுசு விமானத்தை ரூ.8 ஆயிரம் கோடியில் வாங்கி சுற்றுப்பயணம் செய்தார். மக்களுக்காக அவர் எதுவும் செய்யவில்லை. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியை அமோக வெற்றி பெற செய்தீர்கள். அதேபோல் இம்முறை சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியை அமோக வெற்றி பெறச் செய்யுங்கள்.

கடந்த முறை போட்டியிட்ட சாத்தூர் ராமச்சந்திரன், வைகைச்செல்வன் ஆகியோரே தற்போதும் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. சார்பில் மீண்டும் களம் காண்கின்றனர்.
இந்த தொகுதியில் கடந்த முறை போட்டியிட்ட சாத்தூர் ராமச்சந்திரன், வைகைச்செல்வன் ஆகியோரே தற்போதும் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. சார்பில் மீண்டும் களம் காண்கின்றனர். அ.ம.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சார்பில் ரமேஷ் போட்டியிடுகிறார். மக்கள் நீதி மய்யம் சார்பில் உமாதேவி களம் இறங்கி உள்ளார்.
அ.தி.மு.க. வேட்பாளர் வைகைச்செல்வன் சொத்து மதிப்பு
1. கையிருப்பு- ரூ. 50,000
2. அசையும் சொத்து- ரூ. 47,28,359.49
3. அசையா சொத்து- ரூ. 84,50,000
தி.மு.க. வேட்பாளர் சாத்தூர் ராமச்சந்திரன் சொத்து மதிப்பு
1. கையிருப்பு- ரூ. 16,24,000
2. அசையும் சொத்து- ரூ. 1,60,14,439
3. அசையா சொத்து- ரூ. 81,96,775
விருதுநகர் மாவட்டத்தில் முற்றிலும் கிராம பகுதிகளை கொண்ட தொகுதி என்றால் அது அருப்புக்கோட்டைதான்.
இந்த தொகுதிக்கு மற்றும் ஒரு சிறப்பு உண்டு. 1977-ம் ஆண்டு அ.தி.மு.க.வை நிறுவிய எம்.ஜி.ஆர். முதன் முதலாக களம் கண்டது இந்த தொகுதியில்தான். இங்கு வெற்றி பெற்றுத்தான் அவர் கோட்டைக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

1952-ம் ஆண்டு முதல் அருப்புக்கோட்டை தொகுதி தேர்தலை சந்தித்து வருகிறது. இதில் 1977-ம் ஆண்டுவெற்றி பெற்று முதல்-அமைச்சரான எம்.ஜி.ஆர்., தொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக வி.எஸ். பஞ்சவர்ணம் என்பவரை சிறப்பு பிரதிநிதியாக நியமித்து மக்களின் தேவைகளை பூர்த்தி செய்தார்.
1986-ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் வி.எஸ். பஞ்சவர்ணம் அ.தி.மு.க. வேட்பாளராக களம் இறங்கினார். அவருக்கு ஆதரவு திரட்ட உடல்நலம் குன்றி இருந்த நிலையிலும் அருப்புக்கோட்டை தொகுதிக்கு வந்து எம்.ஜி.ஆர். பிரசாரம் மேற்கொண்டார்.

எம்.ஜி.ஆரின் மனம் கவர்ந்த அருப்புக்கோட்டை தொகுதியில் இருந்துதான் தி.மு.க.வைச் சேர்ந்த தங்கபாண்டியன் வெற்றி பெற்று அமைச்சரானார். அவர் வழியில் அவரது மகன் தங்கம் தென்னரசும் அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
தற்போது அருப்புக்கோட்டை தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2,22,980. ஆண்கள் 1,08,063. பெண்கள் 1,14,899. மூன்றாம் பாலினத்தவர் 18.

திருச்சுழி, காரியாபட்டி, நரிக்குடி ஆகிய யூனியன் பகுதிகளில் உள்ள கிராமங்களை கொண்டு 1952 முதல் களம் கண்ட அருப்புக்கோட்டை, தொகுதி மறுசீரமைப்புக்கு பின்னர் 2011-ம் ஆண்டு முதல் அருப்புக்கோட்டை நகர் மற்றும் யூனியன், சாத்தூர் யூனியனில் உள்ள சில கிராம பகுதிகளை கொண்ட தொகுதியாக மாறி உள்ளது.
இந்த தொகுதியின் பிரதான தொழில் நெசவு மற்றும் விவசாயம்தான். முற்றிலும் கிராம பகுதிகளை கொண்ட அருப்புக்கோட்டை தொகுதியில் பொருளாதார மேம்பாடு என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. அருப்புக்கோட்டை நகர் பகுதியில் மக்களின் முக்கிய பிரச்சினையாக நீடித்து வருவது குடிநீர் பிரச்சினைதான்.

இதனை தீர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் மக்களின் தாகம் தணியாத நிலையே உள்ளது. வைகையில் இருந்து குடிநீர் கொண்டு வரும் திட்டம் பெயரளவில் தான் இருக்கிறது. இந்த திட்டம் செயல் இழந்தே உள்ள நிலையில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் பெறப்படும் தண்ணீரும் குடிநீர் பிரச்சினையை முழுமையாக தீர்க்க முடியவில்லை.
அருப்புக்கோட்டையில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை செயல்பாட்டுக்கு வரவில்லை.
தேர்தல் வெற்றி

1952 ஜெயராமரெட்டியார் (காங்கிரஸ்)
1957 ராமசாமி (சுயேட்சை)
1962 கடம்பவன சுந்தரம் (காங்கிரஸ்)
1967 சவுடி சுந்தரபாரதி (சுதந்திரா கட்சி)
1971 சவுடி சுந்தரபாரதி (அ.இ.பா.பி.)
1977 எம்.ஜி.ஆர். (அ.தி.மு.க.)
1980 பிச்சை (அ.தி.மு.க.)
1984 பிச்சை (அ.தி.மு.க.)
1986 பஞ்சவர்ணம் (அ.தி.மு.க.) இடைத்தேர்தல்
1989 தங்கபாண்டியன் (தி.மு.க.)
1991- மணிமேகலை (அ.தி.மு.-க.)
1996 தங்கபாண்டியன் (தி.மு.க.)
1998 தங்கம்தென்னரசு (தி.மு.க.) இடைத்தேர்தல்
2001 சிவசாமி (அ.தி.மு.க.)
2006 தங்கம்தென்னரசு (தி.மு.க.)
2011 வைகைச்செல்வன் (அ.தி.முக.)
2016 சாத்தூர் ராமச்சந்திரன் (தி.முக.)
2016 தேர்தல்
சாத்தூர் ராமச்சந்திரன் (தி.மு.க. வெற்றி)- 81,485
வைகைச்செல்வன் (அ.தி.மு.க.)- 63,431
செந்தில்குமார் (இந்திய கம்யூ.)- 9817
வெற்றிவேல் (பா.ஜனதா)- 3223
நாகேந்திரன் (நாம் தமிழர்)- 1404
அதிமுக - காங்கிரஸ் நேருக்குநேர் மோதும் சிவகாசி தொகுதி கண்ணோட்டம்.
2011, 2016-ம் ஆண்டுகளில் வெற்றி பெற்ற கே.டி. ராஜேந்திரபாலாஜி, தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றார்.
சிறப்பு வாய்ந்த சிவகாசி தொகுதியில் தற்போது அ.தி.மு.க. சார்பில் லட்சுமி கணேசன் அறிமுக வேட்பாளராக களம் இறங்குகிறார். ஆனால் தேர்தல் இவருக்கு புதிதல்ல. ஏற்கனவே திருத்தங்கல் நகராட்சி தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் அசோகன் போட்டியிடுகிறார். அ.ம.மு.க. வேட்பாளர் சாமிக்காளை, மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் முகுந்தன் மற்றும் சிலரும் களத்தில் உள்ளனர்.
அதிமுக வேட்பாளர் லட்சுமி கணேசன் சொத்து மதிப்பு
1. கையிருப்பு- ரூ. 5,00,000
2. அசையும் சொத்து- ரூ. 1,00,78,932
3. அசையா சொத்து- ரூ. 2,40,22,500
காங்கிரஸ் வேட்பாளர் அசோகன் சொத்து மதிப்பு
1. கையிருப்பு- ரூ. 10,00,000
2. அசையும் சொத்து- ரூ. 8,19,09,566
3. அசையா சொத்து- ரூ. 28,95,00,000
சிவகாசி... இந்த பெயரை உச்சரித்ததும் நினைவுக்கு வருவது பட்டாசுதான். குட்டி ஜப்பான் என்ற புனைப்பெயரால் தொழிலால் உலகம் முழுவதும் அறியப்பட்டது சிவகாசி.

இங்கு இருந்துதான் நாடு முழுவதும் மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகளுக்கு பட்டாசுகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இந்த தொகுதியில் சிவகாசி மற்றும் திருத்தங்கல் நகராட்சி பகுதிகள். சிவகாசி யூனியன் பகுதிகள், அதற்குள் அடங்கிய பஞ்சாயத்துக்கள், கிராமங்கள் இடம் பெற்றுள்ளன.
சிவகாசி தொகுதியில் தற்போது மொத்த வாக்காளர்கள் 2,60,941. ஆண்கள் 1,27,127. பெண்கள் 1,33,787. மூன்றாம் பாலினத்தவர் 27.

பட்டாசுக்கு பெயர் பெற்ற சிவகாசி கடந்த 1957-ம் ஆண்டு முதல் தேர்தலை சந்தித்து வருகிறது.1957 மற்றும் 1962-ம் ஆண்டுகளில் சிவகாசி தொகுதி சென்னை மாகாண சட்டமன்றத்தில் இடம் பெற்றிருந்தபோது காங்கிரஸ் சார்பில் எஸ்.ராமசாமி நாயுடு வெற்றி பெற்றார். இவர் எஸ்.ஆர்.நாயுடு என்ற அரசியல் வட்டாரத்தில் பிரபலமானவர்.
சிவகாசி தொகுதியில் வெற்றி பெற்றவர்களில் சிலர் அரசு வேலையை உதறி விட்டு தேர்தலில் வென்று சாதனை படைத்துள்ளனர். 1980 மற்றும் 1984-ல் அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற பாலகிருஷ்ணன் ஒரு ஆசிரியர். அந்த பணியை துறந்துவிட்டு அரசியலுக்கு வந்த அவர் தேர்தலில் வெற்றியும் பெற்றார்.

இதேபோல் 2006-ம் ஆண்டு ம.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற ஞானதாஸ் தூத்துக்குடி துறைமுகத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியில் இருந்தார். அந்த பணியை ராஜினாமா செய்து விட்டு தேர்தலில் நின்று வெற்றியும் பெற்றார்.
சிவகாசி தொகுதியை பொருத்தவரை அங்கு பெரும் பிரச்சினையாக இருப்பது பட்டாசு ஆலைகளில் ஏற்படும் விபத்துக்கள்தான். ஒவ்வொரு ஆலையிலும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வரும் நிலையில் அவ்வப்போது ஏற்படும் விபத்துக்களில் பலர் பலியாகி விடுகின்றனர். இந்த குறையை போக்க வேண்டும் என்பது தொழிலாளர்களின் நீண்டநாள் கோரிக்கை. இதற்காக பட்டாசு நலவாரியம் குறித்து அறிவிப்பு வெளியானது. ஆனால் அது செயல்பாட்டுக்கு வரவில்லை.
பட்டாசு மற்றும் அச்சு தொழிலால் இங்குள்ள மக்கள் பொருளாதார மேம்பாடு அடைந்திருந்தாலும் தொகுதியில் உட்கட்டமைப்பு வசதிகள் இன்னும் சீர் செய்யப்படாத நிலையே உள்ளது.

குறிப்பாக குடிநீர் பற்றாக்குறை தொடர்ந்தே வருகிறது. மானூர் கூட்டுக்குடிநீர் திட்டம் அமல்படுத்தப்பட்டிருந்தாலும் குடிநீர் தட்டுப்பாடு மட்டும் தீரவில்லை. சிவகாசி நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என கடந்த 2017-ம் ஆண்டு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். தற்போது அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அது விரைந்து நிறைவேற்றப்பட வேண்டும்.

விருதுநகர் அரசு ஆஸ்பத்திரி மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்தப்படும் நிலையில், சிவகாசி அரசு ஆஸ்பத்திரியை மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்கு தீக்காய சிகிச்சை பிரிவு செயல்பட்டு வந்தாலும் அதனை மேலும் நவீனப்படுத்தி சிறப்பு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என்பதும் தொகுதி மக்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
தேர்தல் வெற்றி

1957 எஸ்.ஆர்.நாயுடு (காங்கிரஸ்)
1962 எஸ்.ஆர்.நாயுடு (காங்கிரஸ்)
1967 அழகுத்தேவர் (சுதந்திரா கட்சி)
1971 காளிமுத்து (தி.மு-.க.)
1977 ராமசாமி (ஜனதா கட்சி)
1980 பாலகிருஷ்ணன் (அ.தி.மு.க.)
1984 பாலகிருஷ்ணன் (அ.தி.மு.க.)
1989 சீனிவாசன் (தி.மு.க.)
1991 பாலகங்காதரன் (அ.தி.மு.-க.)
1996 சொக்கர் (த.மா.கா.)
2001 ராஜகோபால் (த.மா.கா.)
2006 ஞானதாஸ் (ம.தி.மு.க.)
2011 கே.டி. ராஜேந்திரபாலாஜி (அ.தி.மு-க.)
2016 கே.டி. ராஜேந்திரபாலாஜி (அ.தி.மு-க.)
2016 தேர்தல்
கே.டி.ராஜேந்திரபாலாஜி (அ.தி.மு.க. வெற்றி) 76,734
சொக்கர் (காங்கிரஸ்) 61,986
சுதாகரன் (தே.மு.தி.க.) 17,379
பார்த்தசாரதி (பா.ஜனதா) 6189
பாபு (நாம் தமிழர்) 3245
திலகபாமா (பா.ம.க.) 1350
சிவகாசி அருகே பெண்ணிடம் பணம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி:
திருத்தங்கல் பாண்டியன்நகர் 6-வது தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் மனைவி சித்ரா (வயது 36). இவர் தனது வீட்டின் அருகில் வந்து கொண்டிருந்த போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ்வரன் (34), ராஜகுரு (36) ஆகியோர் கத்தியை காட்டி மிரட்டி சித்ராவிடம் இருந்து ரூ.500-ஐ பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
இது குறித்து சித்ரா, திருத்தங்கல் சப்-இன்ஸ்பெக்டர் காளிதாசிடம் புகார் தெரிவித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விக்னேஷ்வரன், ராஜகுரு ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
மாற்றுத்திறனாளிகள் வாக்கு எந்திரங்களில் வாக்களிப்பது எப்படி என்பது பற்றிய பயிற்சியை கலெக்டர் கண்ணன் தொடங்கி வைத்தார்.
சிவகாசி:
சிவகாசி சாட்சியாபுரத்தில் உள்ள சி.எஸ்.ஐ. செவிதிறன் குறையுடையோர் உயர்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் செவித்திறன் குறையுடையோருக்கான சைகை மொழி தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கண்ணன் தொடங்கி வைத்தார்.
அப்போது வாக்காளர் விழிப்புணர்வு உறுதி மொழியினை மாவட்ட தேர்தல் அதிகாரி கண்ணன் வாசித்தார். இதை சி.எஸ்.ஐ. பள்ளி தலைமையாசிரியர் சைகை மொழியில் மொழிபெயத்தார்.
இதைபுரிந்து கொண்ட மாற்றுத்திறனாளிகள் சைகை மொழியில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பின்னர் மின்னணு வாக்கு எந்திரத்தில் எவ்வாறு வாக்களிப்பது என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
தொடர்ந்து மாற்றுத்திறனாளி மாணவர்கள் ஆர்வமுடன் மின்னணு வாக்கு எந்திரத்தில் வாக்களிப்பது என்பதை செயல்படுத்தி காட்டினர். பின்னர் தங்களுக்கு ஏற்பட்ட சந்தேகத்தை சைகை மூலம் கேட்டு தெரிந்து கொண்டனர்.
இந்தநிகழ்ச்சியில் 145 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். அவர்கள் தங்களது தலைமையாசிரியர் உதவியுடன் வருகிற சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்போம் என்று சைகை முறையில் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மங்களராமசுப்பிரமணியன், திட்ட இயக்குனர் ஜெயக் குமார், சிவகாசி சப்-கலெக்டர் தினேஷ்குமார், மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் சந்திரசேகர், சிவகாசி தாசில்தார் ராமசுப்பிரமணியன், சி.எஸ்.ஐ. பள்ளியின் தலைமையாசிரியர் பால்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அ.தி.மு.க. சார்பில் மான்ராஜ் போட்டியிடுகிறார். தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.
தற்போது இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் மான்ராஜ் போட்டியிடுகிறார். தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் போட்டியிடுகிறார். மக்கள் நீதி மய்யம் சார்பில் குருவையா, அ.ம.மு.க. சார்பில் சங்கீதபிரியா சந்தோஷ்குமார், நாம் தமிழர் சார்பில் அபிநயா களம் இறங்குகின்றனர்.
அதிமுக வேட்பாளர் மான்ராஜ் சொத்து மதிப்பு
1. கையிருப்பு- ரூ. 3,00,000
2. அசையும் சொத்து- ரூ. 13,81,000
3. அசையா சொத்து- ரூ. 10,04,457
காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் சொத்து மதிப்பு
1. கையிருப்பு- ரூ. 3,92,724
2. அசையும் சொத்து- ரூ. 1,18,41,193.41
3. அசையா சொத்து- ரூ. 2,94,50,000
ஸ்ரீவில்லிபுத்தூர்... இந்த ஊரை கேட்டதும் நினைவுக்கு வருவது ஆண்டாள் கோவில். ஆண்டாள் அவதரித்த ஆடி மாதம் பூர நட்சத்திரத்தில் இங்கு ஆடிப்பூர திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
தமிழகத்தின் 2-வது பெரிய தேர் இங்குதான் உள்ளது. ஆடிப்பூர திருவிழாவின்போது தேர் திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஊருக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் தமிழக அரசின் சின்னமாக ஆண்டாள் கோபுரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியின் பல்வேறு முக்கிய வழிபாட்டு தலங்கள் இடம் பெற்றுள்ளன. இதில் குறிப்பிடத்தக்கது சதுரகிரி மலைக்கு செல்லும் தாணிப்பாறை பகுதி. இதன் வழியாகத்தான் சதுரகிரிமலைக்கு பலரும் சென்று வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பெரிய பெருமாள் கோவில் 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோவிலாகும். இங்கே உள்ள இந்து மேல்நிலைப்பள்ளி 200 வருடங்களாக செயல்படக்கூடிய சிறப்பு பள்ளியாகும். ஸ்ரீவில்லி புத்தூர் பென்னிங்டன் நூலகம் 140 வருடங்கள் சிறப்பு பெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி விருதுநகர் மாவட்டத்தில் இருந்தாலும் தென்காசி பாராளுமன்ற தொகுதியில் இடம் பெற்றுள்ளது. இந்த தொகுதியில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி, வத்திராயிருப்பு, மம்சாபுரம், சுந்தரபாண்டியம், எஸ்.கொடிக்குளம், செட்டியார்பட்டி ஆகிய பேரூராட்சி பகுதிகளிலும், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு யூனியன்களும் இடம் பெற்றுள்ளன.

தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2,49,580.ஆண்கள் 1,21,517. பெண்கள் 1,28,031. மூன்றாம் பாலினத்தவர் 32.
1952-ம் ஆண்டு முதல் இந்த தொகுதி தேர்தலை சந்தித்து வருகிறது. இதில் 1957-ம் ஆண்டு வரை இரட்டை தொகுதியாக இருந்தது. 1962 முதல் 1971-ம் ஆண்டு வரை தனி தொகுதியானது. 1977-ம் ஆண்டு முதல் 2006 வரை பொதுத்தொகுதியாக இருந்தது. மீண்டும் 2011-ல் தனி தொகுதியாக மாறியது.
சென்னை மாகான முதல்-மந்திரியாக இருந்த ராஜபாளையத்தை பூர்வீகமாக கொண்ட பி.எஸ். குமாரசாமி ராஜா இந்த தொகுதியில்தான் போட்டியிட்டுள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் தேர்தல் என்றதும் நினைவுக்கு வருபவர் தாமரைக்கனி. இவர் இந்த தொகுதியில் 5 முறை வெற்றி பெற்றுள்ளார். இதில் 4 முறை அ.தி.மு.க. சார்பிலும், ஒருமுறை சுயேட்சையாகவும் வெற்றி பெற்றார். 2001-ம் ஆண்டு தாமரைக்கனி சுயேட்சையாக போட்டியிட அவரது மகன் இன்பத்தமிழன் அ.தி.மு.க. சார்பில் களம் இறக்கப்பட்டார். இதில் இன்பத்தமிழன் வெற்றி பெற்று அமைச்சரானார்.
மாவட்ட தலைநகராக விருதுநகர் உருவாதற்கு முன்பே நிதி பரிபாலனத்தின் தலைமையிடமாக விளங்கியது ஸ்ரீவில்லிபுத்தூர். விருதுநகர் மாவட்டம் உருவான பின்பு மாவட்ட நீதிமன்றம் மாவட்ட தலைநகரில் தான் செயல்பட வேண்டும் என்று அரசு முடிவு எடுத்தாலும் விருதுநகர் மாவட்ட நீதிமன்றம் இன்றளவும் ஸ்ரீவில்லிபுத்தூரிலேயே நிலையாக செயல்பட்டு வருகிறது. தொகுதியில் விவசாயமும், நெசவு தொழிலுமே மக்களின் முக்கிய வாழ்வாதார மாக உள்ளது.

இந்த தொகுதியில்தான் பிளவக்கல் அணை, கோவிலாறு அணை உள்ளன. நெசவு தொழிலுக்கு அரசு பல்வேறு சலுகைகள் அளிக்க வேண்டும்.
வெல்லம் தயாரிக்கும் தொழில் ஊக்குவிக்கப்பட வேண்டும். பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா தொழிலை ஊக்குவிக்க வேண்டும் என தொகுதி மக்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் வனத்துறையின் சாம்பல் நிற அணில்களின் சரணாலயம் உள்ளது.
இந்த பகுதியில் அழகர் அணை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதே மாவட்ட விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் உட்கட்டமைப்பு வசதிகளும், தேரோடும் திருவீதிகளும் முறையாக பராமரிக்கப்பட வேண்டும். பிளவக்கல் அணை பகுதியை சுற்றுலா தலமாக்க வேண்டும். பளியர் இன பழங்குடி மக்கள் வாழ்வாதாரம் மேம்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தேர்தல் வெற்றி

1952-ம் ஆண்டு முதல் 1957-ம் ஆண்டு வரை இந்த தொகுதி இரட்டை தொகுதியாக இருந்தது.
1962 செல்லையா (காங்கிரஸ்)
1967 குருசாமி என்ற ஆண்டி (தி.மு-.க.)
1971 குருசாமி என்ற ஆண்டி (தி.மு-.க.)
1977 தாமரைக்கனி (அ.தி.மு.க.)
1980 தாமரைக்கனி (அ.தி.மு.க.)
1984 தாமரைக்கனி (அ.தி.மு.க.)
1989 தங்கம் (தி.மு.க.)
1991 தாமரைக்கனி (சுயேட்சை)
1996 தாமரைக்கனி (அ.தி.மு.க.)
2001 இன்பத்தமிழன் (அ.தி.மு.க.)
2006 ராமசாமி (இந்திய கம்யூனிஸ்டு)
2011 பொன்னுப்பாண்டி (இந்திய கம்யூனிஸ்டு)
2016 சந்திரபிரபா (அ.தி.மு.க.)
2016 தேர்தல்
சந்திரபிரபா (அ.தி.மு.க. வெற்றி) 88103
முத்துக்குமார் (புதிய தமிழகம்) 51430
லிங்கம் (இந்திய கம்யூனிஸ்டு) 19415
ராமசாமி (பா.ஜனதா) 5497
கல்யாணசுந்தரம் (நாம் தமிழர்) 3833
சிவகாசியில் காகித ஆலை நிர்வாக தரப்பில் ரூ.1 கோடி கொள்ளை போயிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம், சிவகாசியைச் சேர்ந்தவர் சுப்புராஜ். இவர் அதே பகுதியில் உள்ள திருத்தங்கல் ரோட்டில் கிங் போர்ட்ஸ் என்ற பெயரில் காகித தொழிற்சாலையை நடத்தி வருகிறார். இங்கு காகித அட்டை, பேப்பர்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
தற்போது தேர்தல் விதிகள் அமலில் உள்ளதால் வசூலான பணம் வங்கியில் செலுத்த முடியாமல் ஆலையில் உள்ள லாக்கரில் வைத்திருந்தனர்.
நேற்று முன்தினம் ஊழியர்கள் ஆலையை மூடிவிட்டு சென்று விட்டனர். நேற்று விடுமுறை தினம் என்பதால் ஆலை திறக்கப்படவில்லை.
நள்ளிரவு அங்கு வந்த மர்ம நபர்கள் ஆலையின் ஜன்னல் கம்பியை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் ஆலையின் நிர்வாக அறைக்கு சென்ற அவர்கள் அங்கிருந்த லாக்கரை வெல்டிங் எந்திரம் மூலம் உடைத்து அதில் இருந்து பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
இன்று காலை வேலைக்கு வந்த ஊழியர்கள் ஆலை ஜன்னல் கம்பி உடைக்கப்பட்டு பணம் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி யடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த சிவகாசி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது ஆலை நிர்வாக தரப்பில் ரூ.1 கோடி கொள்ளை போயிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டன.
இந்த கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் எந்திரமயமாக்கப்பட்ட தீப்பெட்டி ஆலைகள் உள்ளன.
விருதுநகர்:
விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் எந்திரமயமாக்கப்பட்ட தீப்பெட்டி ஆலைகள் உள்ளன. இந்த பகுதிகளில் சுமார் 600 தீப்பெட்டி ஆலைகள் எந்திரங்கள் மூலம் தீப்பெட்டி தயாரிப்பு செய்து வருகின்றனர். இதன் மூலம் 4 லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். இதில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர்.
இந்தநிலையில் தீப்பெட்டி உற்பத்திக்கான வேதியல் பொருட்கள், தீக்குச்சி, அட்டைப்பெட்டி ஆகிய மூலப்பொருட்களின் விலை வெகுவாக உயர்ந்து உள்ள நிலையிலும், பெட்ரோல், டீசல் விலையினால் மூலப்பொருட்களின்அடக்க விலை மேலும் அதிகரித்துள்ளது. மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பால் பெரும் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.
தீக்குச்சி மட்டுமின்றி வேதிப்பொருட்கள் கிடைப்பதிலும் தட்டுப்பாடு உள்ளது.
இந்தநிலையில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் இன்று முதல் இந்த மாத இறுதி வரை 10 நாட்கள் தீப்பெட்டி ஆலைகளை மூட முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் 4 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்படும்.
மேலும் அடுத்த மாதம் முதல் 600 தீப்பெட்டிகள் கொண்ட பண்டலுக்கு ரூ.40 விலையை அதிகரிக்க முடிவு செய்துள்ளனர்.
எனவே தமிழக அரசு தீப்பெட்டி உற்பத்தியாளர்களுக்கு மூலப்பொருட்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பதற்கும், வெளி மாநிலங்களுக்கு தீப்பெட்டி பண்டல்களை அனுப்புவதற்கும் தேவையான உதவி கிடைப்பதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.