search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    சாத்தூரில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி

    விருதுநகர் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி நாள்தோறும் பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி நாள்தோறும் பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

    பள்ளி மாணவர்கள், நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்ட வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    சாத்தூர் எட்வர்டு மேல்நிலைப்பள்ளியில் மூவர்ண பலூன்களை மாவட்ட கலெக்டர் கண்ணன் பறக்க விட்டு பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.

    பின்னர், சாத்தூர் முக்குராந்தல் பகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி கிராமிய கலைக்குழுவினரின் சிலம்பாட்டம், தப்பாட்டம், நையாண்டி, மேளம் மற்றும் மாணவர்கள் பாடிய தேர்தல் விழிப்புணர்வு பாடல்கள் ஆகிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    சாத்தூர் நகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்களால் போடப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு ரங்கோலி கோலத்தினை அவர் பார்வையிட்டார்.

    தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை மாவட்ட கலெக்டர் கண்ணன், சாலையில் செல்லும் பொதுமக்கள் அனைவருக்கும் வழங்கினார். தொடர்ந்து தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட கலெக்டர் கண்ணன் தலைமையில் எடுத்துக்கொண்டனர். மேலும் மாதிரி வாக்குப்பதிவு எந்திரத்தின் மூலம் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மங்களராமசுப்ரமணியன், திட்ட இயக்குனர் ஜெயக்குமார், சாத்தூர் ஆர்.டி.ஓ. புஷ்பா, சாத்தூர் நகராட்சி ஆணையாளர் ராஜமாணிக்கம், தாசில்தார் வெங்கடேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×