என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி
    X
    ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி

    அதிமுக- காங்கிரஸ் மோதும் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி கண்ணோட்டம்

    அ.தி.மு.க. சார்பில் மான்ராஜ் போட்டியிடுகிறார். தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.
    தற்போது இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் மான்ராஜ் போட்டியிடுகிறார். தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் போட்டியிடுகிறார். மக்கள் நீதி மய்யம் சார்பில் குருவையா, அ.ம.மு.க. சார்பில் சங்கீதபிரியா சந்தோஷ்குமார், நாம் தமிழர் சார்பில் அபிநயா களம் இறங்குகின்றனர்.

    அதிமுக வேட்பாளர் மான்ராஜ் சொத்து மதிப்பு

    1. கையிருப்பு- ரூ. 3,00,000
    2. அசையும் சொத்து- ரூ. 13,81,000
    3. அசையா சொத்து- ரூ. 10,04,457

    காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் சொத்து மதிப்பு

    1. கையிருப்பு- ரூ. 3,92,724
    2. அசையும் சொத்து- ரூ. 1,18,41,193.41
    3. அசையா சொத்து- ரூ. 2,94,50,000

    ஸ்ரீவில்லிபுத்தூர்... இந்த ஊரை கேட்டதும் நினைவுக்கு வருவது ஆண்டாள் கோவில். ஆண்டாள் அவதரித்த ஆடி மாதம் பூர நட்சத்திரத்தில் இங்கு ஆடிப்பூர திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

    தமிழகத்தின் 2-வது பெரிய தேர் இங்குதான் உள்ளது. ஆடிப்பூர திருவிழாவின்போது தேர் திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஊருக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் தமிழக அரசின் சின்னமாக ஆண்டாள் கோபுரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி

    ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியின் பல்வேறு முக்கிய வழிபாட்டு தலங்கள் இடம் பெற்றுள்ளன. இதில் குறிப்பிடத்தக்கது சதுரகிரி மலைக்கு செல்லும் தாணிப்பாறை பகுதி. இதன் வழியாகத்தான் சதுரகிரிமலைக்கு பலரும் சென்று வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பெரிய பெருமாள் கோவில் 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோவிலாகும். இங்கே உள்ள இந்து மேல்நிலைப்பள்ளி 200 வருடங்களாக செயல்படக்கூடிய சிறப்பு பள்ளியாகும். ஸ்ரீவில்லி புத்தூர் பென்னிங்டன் நூலகம் 140 வருடங்கள் சிறப்பு பெற்றது.

    ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி விருதுநகர் மாவட்டத்தில் இருந்தாலும் தென்காசி பாராளுமன்ற தொகுதியில் இடம் பெற்றுள்ளது. இந்த தொகுதியில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி, வத்திராயிருப்பு, மம்சாபுரம், சுந்தரபாண்டியம், எஸ்.கொடிக்குளம், செட்டியார்பட்டி ஆகிய பேரூராட்சி பகுதிகளிலும், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு யூனியன்களும் இடம் பெற்றுள்ளன.

    ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி

    தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2,49,580.ஆண்கள் 1,21,517. பெண்கள் 1,28,031. மூன்றாம் பாலினத்தவர் 32.

    1952-ம் ஆண்டு முதல் இந்த தொகுதி  தேர்தலை சந்தித்து வருகிறது. இதில் 1957-ம் ஆண்டு வரை இரட்டை தொகுதியாக இருந்தது. 1962 முதல் 1971-ம் ஆண்டு வரை தனி தொகுதியானது. 1977-ம் ஆண்டு முதல் 2006 வரை பொதுத்தொகுதியாக இருந்தது. மீண்டும் 2011-ல் தனி தொகுதியாக மாறியது.

    சென்னை மாகான முதல்-மந்திரியாக இருந்த ராஜபாளையத்தை பூர்வீகமாக கொண்ட பி.எஸ். குமாரசாமி ராஜா இந்த தொகுதியில்தான் போட்டியிட்டுள்ளார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி

    ஸ்ரீவில்லிபுத்தூர் தேர்தல் என்றதும் நினைவுக்கு வருபவர் தாமரைக்கனி. இவர் இந்த தொகுதியில் 5 முறை வெற்றி பெற்றுள்ளார். இதில் 4 முறை அ.தி.மு.க. சார்பிலும், ஒருமுறை சுயேட்சையாகவும் வெற்றி பெற்றார். 2001-ம் ஆண்டு தாமரைக்கனி சுயேட்சையாக போட்டியிட அவரது மகன் இன்பத்தமிழன் அ.தி.மு.க. சார்பில் களம் இறக்கப்பட்டார். இதில் இன்பத்தமிழன் வெற்றி பெற்று அமைச்சரானார்.

    மாவட்ட தலைநகராக விருதுநகர் உருவாதற்கு முன்பே நிதி பரிபாலனத்தின் தலைமையிடமாக விளங்கியது ஸ்ரீவில்லிபுத்தூர். விருதுநகர் மாவட்டம் உருவான பின்பு மாவட்ட நீதிமன்றம் மாவட்ட  தலைநகரில் தான் செயல்பட வேண்டும் என்று அரசு முடிவு  எடுத்தாலும் விருதுநகர் மாவட்ட நீதிமன்றம் இன்றளவும் ஸ்ரீவில்லிபுத்தூரிலேயே நிலையாக செயல்பட்டு வருகிறது. தொகுதியில் விவசாயமும், நெசவு தொழிலுமே மக்களின் முக்கிய வாழ்வாதார மாக உள்ளது.

    ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி

    இந்த தொகுதியில்தான் பிளவக்கல் அணை, கோவிலாறு அணை உள்ளன. நெசவு தொழிலுக்கு அரசு பல்வேறு சலுகைகள் அளிக்க வேண்டும்.

    வெல்லம் தயாரிக்கும் தொழில் ஊக்குவிக்கப்பட வேண்டும். பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா தொழிலை ஊக்குவிக்க வேண்டும் என தொகுதி மக்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி

    மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் வனத்துறையின் சாம்பல் நிற அணில்களின் சரணாலயம் உள்ளது.

    இந்த பகுதியில் அழகர் அணை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதே மாவட்ட விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

    ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் உட்கட்டமைப்பு வசதிகளும், தேரோடும் திருவீதிகளும் முறையாக பராமரிக்கப்பட வேண்டும். பிளவக்கல் அணை பகுதியை சுற்றுலா தலமாக்க வேண்டும். பளியர் இன பழங்குடி மக்கள் வாழ்வாதாரம் மேம்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    தேர்தல் வெற்றி

    ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி
    ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி

    1952-ம் ஆண்டு முதல் 1957-ம் ஆண்டு வரை இந்த தொகுதி இரட்டை தொகுதியாக இருந்தது. 

    1962 செல்லையா (காங்கிரஸ்)
    1967 குருசாமி என்ற ஆண்டி (தி.மு-.க.)
    1971 குருசாமி என்ற ஆண்டி (தி.மு-.க.)
    1977 தாமரைக்கனி (அ.தி.மு.க.)
    1980 தாமரைக்கனி (அ.தி.மு.க.)
    1984 தாமரைக்கனி (அ.தி.மு.க.)
    1989 தங்கம் (தி.மு.க.)
    1991 தாமரைக்கனி (சுயேட்சை)
    1996 தாமரைக்கனி (அ.தி.மு.க.)
    2001 இன்பத்தமிழன் (அ.தி.மு.க.)
    2006 ராமசாமி (இந்திய கம்யூனிஸ்டு)
    2011 பொன்னுப்பாண்டி (இந்திய கம்யூனிஸ்டு)
    2016 சந்திரபிரபா (அ.தி.மு.க.)

    2016 தேர்தல்

    சந்திரபிரபா (அ.தி.மு.க. வெற்றி) 88103
    முத்துக்குமார் (புதிய தமிழகம்)  51430
    லிங்கம்  (இந்திய கம்யூனிஸ்டு) 19415
    ராமசாமி (பா.ஜனதா) 5497
    கல்யாணசுந்தரம்  (நாம் தமிழர்) 3833
    Next Story
    ×