என் மலர்

  செய்திகள்

  சிவகாசி தொகுதி
  X
  சிவகாசி தொகுதி

  சிவகாசி தொகுதி கண்ணோட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அதிமுக - காங்கிரஸ் நேருக்குநேர் மோதும் சிவகாசி தொகுதி கண்ணோட்டம்.
  2011, 2016-ம் ஆண்டுகளில் வெற்றி பெற்ற கே.டி. ராஜேந்திரபாலாஜி, தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றார். 

  சிறப்பு வாய்ந்த சிவகாசி தொகுதியில் தற்போது அ.தி.மு.க. சார்பில் லட்சுமி கணேசன் அறிமுக வேட்பாளராக களம் இறங்குகிறார். ஆனால் தேர்தல் இவருக்கு புதிதல்ல. ஏற்கனவே திருத்தங்கல் நகராட்சி தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

  தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் அசோகன் போட்டியிடுகிறார். அ.ம.மு.க. வேட்பாளர் சாமிக்காளை, மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் முகுந்தன் மற்றும் சிலரும் களத்தில் உள்ளனர்.

  அதிமுக வேட்பாளர் லட்சுமி கணேசன் சொத்து மதிப்பு

  1. கையிருப்பு- ரூ. 5,00,000
  2. அசையும் சொத்து- ரூ. 1,00,78,932
  3. அசையா சொத்து- ரூ. 2,40,22,500

  காங்கிரஸ் வேட்பாளர் அசோகன் சொத்து மதிப்பு

  1. கையிருப்பு- ரூ. 10,00,000
  2. அசையும் சொத்து- ரூ. 8,19,09,566
  3. அசையா சொத்து- ரூ. 28,95,00,000

  சிவகாசி... இந்த பெயரை உச்சரித்ததும் நினைவுக்கு வருவது பட்டாசுதான். குட்டி ஜப்பான் என்ற புனைப்பெயரால் தொழிலால் உலகம் முழுவதும் அறியப்பட்டது சிவகாசி.

  சிவகாசி தொகுதி

  இங்கு இருந்துதான் நாடு முழுவதும் மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகளுக்கு பட்டாசுகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இந்த தொகுதியில் சிவகாசி மற்றும் திருத்தங்கல் நகராட்சி பகுதிகள். சிவகாசி யூனியன் பகுதிகள், அதற்குள் அடங்கிய பஞ்சாயத்துக்கள், கிராமங்கள் இடம் பெற்றுள்ளன.

  சிவகாசி தொகுதியில் தற்போது மொத்த வாக்காளர்கள் 2,60,941. ஆண்கள் 1,27,127. பெண்கள் 1,33,787. மூன்றாம் பாலினத்தவர் 27.

  சிவகாசி தொகுதி

  பட்டாசுக்கு பெயர் பெற்ற சிவகாசி கடந்த 1957-ம் ஆண்டு முதல் தேர்தலை சந்தித்து வருகிறது.1957 மற்றும் 1962-ம் ஆண்டுகளில் சிவகாசி தொகுதி சென்னை மாகாண சட்டமன்றத்தில் இடம் பெற்றிருந்தபோது காங்கிரஸ் சார்பில் எஸ்.ராமசாமி நாயுடு வெற்றி பெற்றார். இவர் எஸ்.ஆர்.நாயுடு என்ற அரசியல் வட்டாரத்தில் பிரபலமானவர். 

  சிவகாசி தொகுதியில் வெற்றி பெற்றவர்களில் சிலர் அரசு வேலையை உதறி விட்டு தேர்தலில் வென்று சாதனை படைத்துள்ளனர். 1980 மற்றும் 1984-ல் அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற பாலகிருஷ்ணன் ஒரு ஆசிரியர். அந்த பணியை துறந்துவிட்டு அரசியலுக்கு வந்த அவர் தேர்தலில் வெற்றியும் பெற்றார்.

  சிவகாசி தொகுதி

  இதேபோல் 2006-ம் ஆண்டு ம.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற ஞானதாஸ் தூத்துக்குடி துறைமுகத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியில் இருந்தார். அந்த பணியை ராஜினாமா செய்து விட்டு தேர்தலில் நின்று வெற்றியும் பெற்றார்.

  சிவகாசி தொகுதியை பொருத்தவரை அங்கு பெரும் பிரச்சினையாக இருப்பது பட்டாசு ஆலைகளில் ஏற்படும் விபத்துக்கள்தான். ஒவ்வொரு ஆலையிலும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வரும் நிலையில் அவ்வப்போது ஏற்படும் விபத்துக்களில் பலர் பலியாகி விடுகின்றனர். இந்த குறையை போக்க வேண்டும் என்பது தொழிலாளர்களின் நீண்டநாள் கோரிக்கை. இதற்காக பட்டாசு நலவாரியம் குறித்து அறிவிப்பு வெளியானது. ஆனால் அது செயல்பாட்டுக்கு வரவில்லை.

  பட்டாசு மற்றும் அச்சு தொழிலால் இங்குள்ள மக்கள் பொருளாதார மேம்பாடு அடைந்திருந்தாலும் தொகுதியில் உட்கட்டமைப்பு வசதிகள் இன்னும் சீர் செய்யப்படாத நிலையே உள்ளது.

  சிவகாசி தொகுதி

  குறிப்பாக குடிநீர் பற்றாக்குறை தொடர்ந்தே வருகிறது. மானூர் கூட்டுக்குடிநீர் திட்டம் அமல்படுத்தப்பட்டிருந்தாலும் குடிநீர் தட்டுப்பாடு மட்டும் தீரவில்லை. சிவகாசி நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என கடந்த 2017-ம் ஆண்டு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். தற்போது அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அது விரைந்து நிறைவேற்றப்பட வேண்டும்.

  சிவகாசி தொகுதி

  விருதுநகர் அரசு ஆஸ்பத்திரி மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்தப்படும் நிலையில், சிவகாசி அரசு ஆஸ்பத்திரியை மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்கு தீக்காய சிகிச்சை பிரிவு செயல்பட்டு வந்தாலும் அதனை மேலும் நவீனப்படுத்தி சிறப்பு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என்பதும் தொகுதி மக்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. 

  தேர்தல் வெற்றி

  சிவகாசி தொகுதி
  சிவகாசி தொகுதி

  1957 எஸ்.ஆர்.நாயுடு (காங்கிரஸ்)
  1962 எஸ்.ஆர்.நாயுடு (காங்கிரஸ்)
  1967 அழகுத்தேவர் (சுதந்திரா கட்சி)
  1971 காளிமுத்து (தி.மு-.க.)
  1977 ராமசாமி (ஜனதா கட்சி)
  1980 பாலகிருஷ்ணன் (அ.தி.மு.க.)
  1984 பாலகிருஷ்ணன் (அ.தி.மு.க.)
  1989 சீனிவாசன் (தி.மு.க.)
  1991 பாலகங்காதரன் (அ.தி.மு.-க.)
  1996 சொக்கர் (த.மா.கா.)
  2001 ராஜகோபால் (த.மா.கா.)
  2006 ஞானதாஸ் (ம.தி.மு.க.)
  2011 கே.டி. ராஜேந்திரபாலாஜி (அ.தி.மு-க.)
  2016 கே.டி. ராஜேந்திரபாலாஜி (அ.தி.மு-க.)

  2016 தேர்தல்

  கே.டி.ராஜேந்திரபாலாஜி (அ.தி.மு.க. வெற்றி) 76,734
  சொக்கர் (காங்கிரஸ்) 61,986
  சுதாகரன் (தே.மு.தி.க.)  17,379
  பார்த்தசாரதி (பா.ஜனதா) 6189
  பாபு (நாம் தமிழர்) 3245
  திலகபாமா (பா.ம.க.) 1350
  Next Story
  ×