என் மலர்

  செய்திகள்

  விருதுநகர் தொகுதி
  X
  விருதுநகர் தொகுதி

  விருதுநகர் தொகுதி கண்ணோட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திமுக-வும் அதிமுக கூட்டணியில் பா.ஜனதாவும் நேருக்குநேர் மோதும் விருதுநகர் தொகுதி கண்ணோட்டம்.
  விருதுநகர் தொகுதியில் தி.மு.க. சார்பில் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் மீண்டும் களம் இறங்கி உள்ளார். அ.தி.மு.க. இந்த முறை தொகுதியை கூட்டணி கட்சியான பா.ஜனதாவுக்கு விட்டு கொடுத்துள்ளது. இந்த கட்சி சார்பில் பாண்டுரங்கன் போட்டியிடுகிறார்.

  தனக்கு நிச்சயம் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என தீவிர களப்பணியாற்றிய அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். மன்ற மேற்கு மாவட்ட செயலாளர் கோகுலம் தங்கராஜ் சீட் கிடைக்காததால் விரக்தி அடைந்து அ.ம.மு.க.வில் இணைந்து அதன் வேட்பாளராக களம் இறங்கி உள்ளார்.

  விருதுநகர் தொகுதி

  இவர்கள் தவிர மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் மணிமாறனும், நாம் தமிழர் கட்சி சார்பில் செல்வகுமாரும் போட்டியில் உள்ளனர். 

  மேலும் குணசேகரன் (புதிய தமிழகம்), சுயம்புலிங்கம் (மை இந்தியா பார்ட்டி), விக்ரமன், கருப்பையா, குருநாதன், சிபி, தங்கபாண்டி, தங்கராஜ், தாமோதரன், பாண்டுரங்கன், புங்கன், ராமராஜ், வேலுசாமி என மொத்தம் 18 பேர் விருதுநகர் தொகுதியில களத்தில் உள்ளனர்.

  பா.ஜனதா வேட்பாளர் பாண்டுரங்கள் சொத்து மதிப்பு

  1. கையிருப்பு- ரூ. 1,00,850
  2. அசையும் சொத்து- ரூ. 1,35,48,112
  3. அசையா சொத்து- ரூ. 4,49,30,000

  தி.மு.க. வேட்பாளர் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் சொத்து மதிப்பு

  1. கையிருப்பு- ரூ. 30,000
  2. அசையும் சொத்து- ரூ. 44,65,419
  3. அசையா சொத்து- ரூ. 12,00,000

  விருதுநகர்... பெயரை உச்சரித்தவுடன் நினைவுக்கு வருபவர் காமராஜர்தான். இந்த ஊரில் பிறந்த அவர் கல்வி கண் திறந்தவர், சத்துணவு திட்டம் தந்தவர், எளிமையாக வாழ்ந்தவர், இந்திய அரசியலில் முக்கியத்துவம் பெற்றவர் என பல்வேறு புகழுக்கு சொந்தக்காரர்.

  விருதுநகர் தொகுதி

  முதல்- அமைச்சர் பதவி வகித்தபோதும் தனக்கோ, குடும்பத்துக்கோ எந்த சொத்தும் சேர்க்காதவர். இப்படி நேர்மையுடன் வாழ்ந்த காமராஜர் 1967-ம் ஆண்டு சொந்த தொகுதியிலேயே தோற்கடிக்கப்பட்டார் என்பது வேதனையான ஒன்றுதான்.

  இதுகுறித்து பேசிய அன்றைய முதல்- அமைச்சர் அண்ணாத்துரை தி.மு.க. விருதுநகரில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளித்தாலும் காமராஜர் வெற்றி வாய்ப்பை இழந்தது மிகுந்த வருத்தத்தை அளிப்பதாக குறிப்பிட்டார்.

  விருதுநகர் தொகுதி சாத்தூருடன் இணைந்த 1957 மற்றும் 1962-ம் ஆண்டுகளில்தான் காமராஜர் வெற்றி பெற்று முதல்- அமைச்சர் ஆனார்.

  விருதுநகர் தொகுதி

  தற்போதைய விருதுநகர் தொகுதியில் விருதுநகர் நகராட்சி மற்றும் யூனியன் சிவகாசி யூனியனில் சில பகுதிகள் அடங்கி உள்ளன. இந்த தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2,24,327. ஆண்கள் 1,09,607. பெண்கள் 1,14,674. மூன்றாம் பாலினத்தவர் 46.

  விருதுநகர் தொகுதியை பொறுத்தவரை நாயக்கர், நாடார், தேவர், தேவேந்திரகுல வேளாளர் இனத்தவர் அதிகம் உள்ளனர்.
  விருதுநகருக்கு மற்றொரு சிறப்பு வணிக நகர் என்பதுதான். இங்கு விவசாய விளை பொருட்கள் எதுவும் சாகுபடி செய்யப்படாவிட்டாலும் பல்வேறு பொருட்களின் விலையை நிர்ணயம் செய்வது விருதுநகர் சந்தைதான். இங்கு இருந்து தான் மல்லி, வத்தல், சமையல் எண்ணை, பருப்பு வகைகள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

  கிராம பகுதிகளில் மானாவாரி சாகுபடி நடைபெற்றாலும் தொகுதியில் பெருமளவு முன்னேறவில்லை. விருதுநகர் மாவட்டம் கல்வியில் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது. ஆனால் இங்கு அரசு கல்லூரி, அரசியல் என்ஜினீயரிங் கல்லூரி போன்றவை இதுவரை அமைக்கப்படவில்லை.

  விருதுநகர் தொகுதி

  விருதுநகர் பகுதியில் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக வேறு மாவட்டங்களையே நாடிச்செல்கின்றனர். 2010-ம் ஆண்டு இந்த பகுதியில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க எடுத்த முயற்சியும், தொழில் முதலீட்டு மண்டலம் அமைக்க மேற்கொண்ட நடவடிக்கையும் பலன் தரவில்லை.

  2015-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட சிப்காட் தொழில்பூங்காவும் இன்னும் பயன்பாட்டிற்கு வராதநிலைதான் உள்ளது. 1985-ம் ஆண்டு விருதுநகரை தலைமையிடமாக கொண்டு மாவட்டம் உருவானபோது இனி பெரும் முன்னேற்றம் கிடைக்கும் என எதிர்பார்த்த மக்களுக்கு இதுவரை ஏமாற்றமே கிடைத்துள்ளது.

  விருதுநகர் தொகுதி

  விருதுநகரில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், குடிநீர் விநியோக திட்டத்தை புனரமைத்து குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதும் மக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது. 

  விருதுநகர் தொகுதி
  விருதுநகர் தொகுதி

  1952 ராமசாமி
  1954 சண்முகநாடார் (காங்கிரஸ்)
  1957 மற்றும் 1962-ம் ஆண்டுகளில் விருதுநகர் தொகுதி சாத்தூர் தொகுதியில் இணைக்கப்பட்டது. அப்போது காமராஜர் வெற்றி பெற்றார்.
  1967 சீனிவாசன் (தி.மு.க.)
  1971 சீனிவாசன் (தி.மு-.க.)
  1977 சுந்தர்ராஜன் (அ.தி.மு.க.)
  1980 சுந்தர்ராஜன் (அ.தி.மு.க.)
  1984 ஆறுமுகம் (ஜனதா தளம்)
  1989 சொக்கர் (காங்கிரஸ்)
  1991- சஞ்சய்ராமசாமி (காங்கிரஸ்)
  1996 ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் (தி.மு.க.)
  2001 தாமோதரன் (த.மா.கா.)
  2006 வரதராஜன் (ம.தி.மு.க.)
  2011 பாண்டியராஜன் (தே.மு.தி.க.)
  2016 ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் (தி.மு.க.)
  Next Story
  ×