search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விந்தியா
    X
    விந்தியா

    வராத மழைக்கு வானிலை கூறுவதும் திமுக தேர்தல் அறிக்கையும் ஒன்றுதான்- விந்தியா

    இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜியை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று நடிகை விந்தியா பேசினார்.
    ராஜபாளையம்:

    ராஜபாளையத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியை ஆதரித்து நடிகை விந்தியா பிரசாரம் செய்தார். அப்போது அவர் திரண்டு இருந்த மக்கள் மத்தியில் பேசியதாவது:-

    வெற்றிநடை போடும் தமிழகம் என்றுமே வீரநடை போட வேண்டும். அதற்கு இப்பகுதி மக்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு அளித்து அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியை வெற்றி பெற செய்ய வேண்டும்.

    விருதுநகர் மாவட்டத்தில் ஆலமரம் போல் தாங்கி நிற்கும் சக்தி அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு உண்டு.

    உங்களுக்காக போராடுபவர். இவரை நம்பினால் வீடும், நாடும் நன்றாக இருக்கும். தி.மு.க.வை நம்பாதீர்கள். 10 ஆண்டுகளாக காய்ந்து போய் இருக்கிறார்கள். அவர்கள் அகோரப்பசியில் இருக்கிறார்கள். பணத்தை மட்டுமல்ல, மக்களையும் புடுங்கி சாப்பிட்டு விடுவார்கள். தயவுசெய்து உஷாராக இருங்கள்.

    வராத மழைக்கு வானிலை அறிக்கை கூறுவதும், வராத ஆட்சிக்கு தி.மு.க.வினர் இஷ்டத்திற்கு வாக்குறுதி கொடுத்திருப்பதும் ஒன்றுதான்.. எந்த பிரச்சினையை தி.மு.க. ஆட்சி காலத்தில் தீர்த்து வைத்தார்கள். இப்போது ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களில் பிரச்சினைகளை முடிப்பேன் என ஸ்டாலின் கூறுகிறார். அவரை நம்பாதீர்கள். எத்தனை கட்சி கூட்டணி சேர்ந்தாலும் அ.தி.மு.க.வை தோற்கடிக்க முடியாது.

    இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜியை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதேபோல சிவகாசி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் லட்சுமி கணேசனை ஆதரித்து நடிகை விந்தியா சிவகாசி -திருத்தங்கல் ரோட்டில் உள்ள தேவர் சிலை அருகே பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    நாங்கள் தீபாவளியின் போது மகிழ்ச்சியாக இருக்க உங்கள் உயிரை பணயம் வைத்து வேலை செய்கிறீர்கள். உங்களது உழைப்பை நாடே போற்றுகிறது. தமிழகத்தில் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைய போகிறது. மக்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு வாழ போகிறார்கள். இந்த பகுதியில் உள்ள தீப்பெட்டி, பட்டாசு, அச்சுத்தொழில் பாதுகாக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பிரசாரத்தின் போது அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, வேட்பாளர் லட்சுமி கணேசன் ஆகியோர் உடனிருந்தனர்.
    Next Story
    ×