என் மலர்
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை 9 இடங்களில் வாக்கு எண்ணப்படுகிறது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மாநகராட்சி, சாத்தூர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை, விருதுநகர் ஆகிய 5 நகராட்சிகள், காரியாபட்டி, மல்லாங்கிணறு, மம்சாபுரம், சேத்தூர், எஸ்.கொடிகுளம், வத்திராயிருப்பு, வ.புதுப்பட்டி, செட்டியார்பட்டி, சுந்தரபாண்டியம் ஆகிய 9 பேரூராட்சிகள் ஆகியவற்றுக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது.
மாவட்டம் முழுவதும் 758 வாக்குச்சாவடிகளில் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. வாக்குப்பதிவு முடிந்ததும் அனைத்து மின்னணு வாக்கு எந்திரங்களும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சரிபார்க்கப்பட்டு சீல் வைக்கப்பட்டன. அதன் பிறகு போலீஸ் பாதுகாப்புடன் மின்னணு வாக்கு எந்திரங்கள் லாரிகளில் ஏற்றப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.
அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் மின்னணு வாக்கு எந்திரங்கள் அறையில் வைக்கப்பட்டு வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் அந்த அறை சீல்வைக்கப்பட்டது. தொடர்ந்து மின்னணு வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அங்கு போலீசார் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை (22&ந்தேதி) எண்ணப்படுகிறது.
வாக்கு எண்ணிக்கை மொத்தம் 9 இடங்களில் நடக்கிறது. சிவகாசி மாநகராட்சியில் பதிவான வாக்குகள் சிவகாசி அரசு கலைக்கல்லூரியில் எண்ணப்படுகிறது.
விருதுநகர் நகராட்சியில் பதிவான வாக்குகள் வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியிலும், சாத்தூர் நகராட்சியில் பதிவான வாக்குகள் எத்தல் ஆர்.வி. பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், ராஜபாளையம் நகராட்சியில் பதிவான வாக்குகள் பி.ஏ.சி.ராமசாமிராஜா பாலிடெக்னிக் கல்லூரியிலும், ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் பதிவான வாக்குகள் வி.பி.எம்.எம்.கலைக்கல்லூரியிலும், அருப்புக்கோட்டை நகராட்சியில் பதிவான வாக்குகள் தேவாங்கர் கலைக்கல்லூரியிலும் எண்ணப்படுகின்றன.
இதேபோல் 9 பேரூராட்சிகளில் காரியாபட்டி, மல்லாங்கிணறு பேரூராட்சியில் பதிவான வாக்குகள் மல்லாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளியிலும், மம்சாபுரம், சேத்தூர், எஸ்.கொடிகுளம் பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் ராஜபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், வத்திராயிருப்பு, வ.புதுப்பட்டி, செட்டியார்பட்டி, சுந்தரபாண்டியம் பேரூராட்சியில் பதிவான வாக்குகள் கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்திலும் எண்ணப்படுகின்றன.
வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. காலை 10 மணிக்கு பிறகு முன்னணி நிலவரம் தெரியவரும். சிவகாசி மாநகராட்சியான பிறகு முதல் தேர்தல் என்பதால் அதனை யார் கைப்பற்றுவார்கள்? என்ற எதிர்பார்ப்பு அனைவரின் மத்தியில் எழுந்துள்ளது.
ராஜபாளையத்தில் கூலித்தொழிலாளியை சரமாரி அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் துரைச்சாமிபுரம் செங்குட்டுவன் தெருவை சேர்ந்தவர் பிள்ளையார்(வயது55). விவசாய கூலி தொழிலாளியான இவர் நேற்று இரவு தனது வீட்டின் முன்பு மகள் மதிஅனிதாவுடன் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு அதே தெருவை சேர்ந்த இசக்கிராஜா என்பவர் கையில் வீச்சரிவாளுடன் வந்து பிள்ளையாரின் பக்கத்துவீட்டு பெண்ணான அமுதா என்பவரிடம், அவரது கணவரை எங்கே என்று கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதனைப்பார்த்த பிள்ளையார் பெண்ணிடம் ஏன் தகராறு செய்கிறாய் என்று கேட்டு இசக்கிராஜாவை அங்கிருந்து செல்லுமாறு கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த இசக்கிராஜா, தான் வைத்திருந்த அரிவாளால் பிள்ளையாரை சரமாரியாக வெட்டினார்.
இதனை தடுத்த அவரது மகள் மதிஅனிதா மற்றும் அந்த வழியாக சென்ற அலெக்ஸ்பாண்டியன் ஆகியோரை அரிவாளை காட்டி மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
அரிவாளால் வெட்டப்பட்டதில் கழுத்து, தலை, கை, மார்பு என 7 இடங்களில் பிள்ளையாருக்கு வெட்டு விழுந்தது. அவர் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக மதுரை கொண்டு செல்லப்பட்டார்.
இதுகுறித்து பிள்ளையார் கொடுத்த புகாரின்பேரில் ராஜபாளையம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னவன் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து இசக்கிராஜாவை கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விற்பனை பிரதிநிதி மாயமானார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
-ஸ்ரீவில்லிபுத்தூர் கூனங்குளம் தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார்(வயது23). தனியார் விற்பனை பிரதிநிதியாக உள்ளார். நேற்று முன்தினம் இவரும், அண்ணன் மதன்குமாரும் ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள புனித இருதய பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டு போட்டுவிட்டு வந்தனர்.
அதன்பிறகு முத்துக்குமார் மாயமாகிவிட்டார். பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து சகோதரர் மதன்குமார் கொடுத்த புகாரின்பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையங்களுக்கு மின்னணு எந்திரங்கள் கொண்டுவரப்பட்டன. அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
விருதுநகர்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. வாக்குப்பதிவுக்கு பிறகு அனைத்து மின்னணு வாக்கு எந்திரங்களும் போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மாநகராட்சி, சாத்தூர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை, விருதுநகர் ஆகிய 5 நகராட்சிகள், காரியாபட்டி, மல்லாங்கிணறு, மம்சாபுரம், சேத்தூர், எஸ்.கொடிகுளம், வத்திராயிருப்பு, வ.புதுப்பட்டி, செட்டியார்பட்டி, சுந்தரபாண்டியம் ஆகிய 9 பேரூராட்சிகளும் உள்ளன.
இங்கு நடைபெற்ற வாக்குப்பதிவுக்காக 758 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. நேற்று மாலை 6 மணி வரை விறுவிறுப்பான வாக்குப்பதிவு முடிந்ததும் அனைத்து மின்னணு வாக்கு எந்திரங்களும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சரிபார்க்கப்பட்டு சீல்வைக்கப்பட்டன. அதன் பிறகு போலீஸ் பாதுகாப்புடன் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் உள்ள மின்னணு வாக்கு எந்திரங்கள் லாரிகளில் ஏற்றப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. சிவகாசி மாநகராட்சி மின்னணு வாக்கு எந்திரங்கள் சிவகாசி அரசு கலைக்கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன.
விருதுநகர் நகராட்சி மின்னணு வாக்கு எந்திரங்கள் வெள்ளைச்சாமி நாடார் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டது. இந்த நகராட்சி மின்னணு வாக்கு எந்திரங்கள் இன்று அதிகாலை 3.30 மணிக்குதான் வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்தது. சாத்தூர் நகராட்சி மின்னணு வாக்கு எந்திரங்கள் எத்தல் ஆர்.வி.பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கும், ராஜபாளையம் நகராட்சி மின்னணு வாக்கு எந்திரங்கள் பி.ஏ.சி.ராமசாமிராஜா பாலிடெக்னிக் கல்லூரிக்கும் கொண்டு வரப்பட்டன. ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி மின்னணு வாக்கு எந்திரங்கள் வி.பி.எம்.எம்.கலைக்கல்லூரிக்கும், அருப்புக்கோட்டை நகராட்சி மின்னணு வாக்கு எந்திரங்கள் தேவாங்கர் கலைக்கல்லூரிக்கும் கொண்டு வரப்பட்டன.
இதேபோல் 9 பேரூராட்சிகளில் காரியாபட்டி, மல்லாங்கிணறு பேரூராட்சிகளின் மின்னணு வாக்கு எந்திரங்கள் மல்லாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளிக்கும், மம்சாபுரம், சேத்தூர், எஸ்.கொடிகுளம் பேரூராட்சிகளின் மின்னணு வாக்கு எந்திரங்கள் ராஜபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கும், வத்திராயிரப்பு, வ.புதுப்பட்டி, செட்டியார்பட்டி, சுந்தரபாண்டியம் பேரூராட்சிகளின் மின்னணு வாக்கு எந்திரங்கள் கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்திற்கும் கொண்டு வரப்பட்டன.
அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் மின்னணு வாக்கு எந்திரங்கள் அறையில் வைக்கப்பட்டு வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் அந்த அறை சீல்வைக்கப்பட்டது. தொடர்ந்து மின்னணு வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மின்னணு வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் சீல் வைக்கப்பட்ட கதவு முன்பும், அந்த அறையின் நுழைவு வாயிலிலும் துப்பாக்கி ஏந்திய போலீ சார் பாதுகாப்பு பணிக்கு நிறுத்தப்பட்டனர்.
இதே போல் வளாக வாசலிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்ற னர். நாளை மறுநாள் (22ந்தேதி) வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதன் முடிவுகள் உடனுக்குடன் வெளியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர் மறைமுக தேர்தல்கள் மார்ச் 4ந்தேதி நடக்கிறது.
விருதுநகர் மாவட்டத்தில் வாக்களிக்க மக்கள் ஆர்வம் காட்டவில்லை.
விருதுநகர்
தேர்தல் என்றால் திருவிழா என்று முன்பெல்லாம் கூறுவார்கள். ஆனால் தற்போது தேர்தல் ஆணையத்தின் கெடுபி யால் நிலைமை மாறியுள்ளது. தேர்தல் மட்டுமல்ல அதில் வாக்களிக்கும் மக்கள் மனநிலையும் மாறிவிட்டது என்பதை வாக்குப்பதிவு சதவீதம் காட்டுகிறது.
ஒவ்வொரு தேர்தலுக்கும் மொத்த சதவீத வாக்குப்பதிவை பார்த்தால் குறைந்தே வருகிறது. விருதுநகர் மாவட்டத்தை பொருத்தவரை கடந்த சட்டமன்ற தேர்தலில் 70 சதவீதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவாகின.
ஆனால் நேற்று நடந்த நகர்ப்புற உள்ளாட்சி வாக்குப்பதிவில் 62.94 சதவீதம் வாக்குகளே பதிவாகி உள்ளன. இது தேர்தலில் மக்களுக்கு ஆர்வம் இல்லாத நிலையையே காட்டுகிறது-.
வாக்களிப்பது ஜனநாயக கடமை. வாக்களிக்க அனைவரும் செல்ல வேண்டும் என்பதற்காக அரசு விடுமுறை என்றெல்லாம் அறிவிக்கப்பட்ட நிலையிலும் வாக்கு சதவீதம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சில விதிமீறல்களும் வாக்கு பதிவு மீது மக்களுக்கு நம்பிக்கையின்மையை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில்கூட விதிமீறல்கள் இல்லை என்றும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விதிமீறல்கள் அதிக அளவில் காணப்பட்டதாகவும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பல இடங்களில் வேட்பாளர்கள் வாக்குச்சாவடிகளுக்கு உள்ளேயே வந்து ஆதரவு கேட்டதாகவும் அவர்கள் புகார்கள் கூறி உள்ளனர்.
சிவகாசி அருகே லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.
சிவகாசி
சிவகாசி அருகே உள்ள கங்கரகோட்டை ஊராட்சி கீழசெல்லையாபுரத்தை சேர்ந்த லட்சுமணன் மகன் ஆனந்தராஜ்(வயது 38). இவர் இருசக்கர வாகனத்தில் ஏழாயிரம் பண்ணைக்கு சென்றபோது மேட்டூரில் இருந்து வந்த லாரி மோதியது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஆனந்தராஜை விருதுநகர் அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அவரது மனைவி ராஜலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் ஏழாயிரம் பண்ணை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
லாரி டிரைவர் நடுசுரங்குடியை சேர்ந்த கருப்பசாமியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி அருகே வாக்குச்சாவடியில் தகராறு செய்ததாக பா.ஜனதா வேட்பாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி முதன்முறையாக மாநகராட்சியாக்கப்பட்டு தேர்தல் நடைபெற்றது. இந்த மாநகராட்சிக்குட்பட்ட திருத்தங்கல் சி.கே. மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடந்தது.
அப்போது மின்னணு வாக்கு எந்திரத்தில் பழுது ஏற்பட்டது. இதனை சரிசெய்யும் பணியில் வாக்குச்சாவடி அதிகாரி புவனேசுவரன் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த 12வது வார்டு பா.ஜனதா வேட்பாளர் சுரேஷ்குமார் மற்றும் 10 பேர் வாக்குவாதம் செய்ததோடு மேஜையை சேதப்படுத்தியதாக திருத்தங்கல் போலீசில் அதிகாரி புவனேசுவரன் புகார் செய்தார்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் இடையூறு செய்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சுரேஷ்குமார் உள்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சிவகாசி அருகே தொழிலாளி வீட்டில் 8 பவுன் நகையை திருடியவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
விருதுநகர்
சிவகாசி அருகே உள்ள சாமிநத்தம் பகுதியை சேர்ந்தவர் மாடசாமி. இவரது மனைவி பஞ்சவர்ணம் வயது40). கணவர் இறந்துவிட்ட நிலையில் தனியாக வசித்த இவர் பட்டாசு ஆலையில் வேலைபார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று பஞ்சவர்ணம் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிவந்தார். அப்போது அவரது வீட்டின் கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 7 பவுன் தங்க நகைகள் திருட்டு போயிருந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் மல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிவகாசி அருகே மனைவி மற்றும் மகனை பிளேடால் வெட்டிவிட்டு தொழிலாளி தற்கொலைக்கு முயன்றார்.
விருதுநகர்
சிவகாசி அருகே உள்ள புதுக்கோட்டையை சேர்ந்தவர் பால்பாண்டி(வயது 37). இவரது மனைவி கண்ணகி(30). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். பால்பாண்டி அடிக்கடி மது குடித்து வந்ததால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது.
இதனால் கண்ணகி தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். அதன் பிறகு உறவினர்கள் சமரசம் செய்து இருவரையும் சேர்த்து வைத்தனர். இதனைத்தொடர்ந்து கண்ணகி கணவர் மற்றும் மகனுடன் சேர்ந்து வாழ்ந்தார்.
இந்தநிலையில் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த பால்பாண்டி பிளேடால் மனைவி மற்றும் மகனை வெட்டினார். பின்னர் அவரும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.
இதுகுறித்த எம்.புதுப்பட்டி போலீசில் கண்ணகி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பால்பாண்டியை கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வேன் மோதி என்ஜினீயரிங் மாணவர் பலியானார். 2 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் வெளிகாண்ட்லா குளிப்பாட்டிபள்ளியை சேர்ந்தவர் ஜெயபால்சன்(வயது 18), கர்னூல் மாவட்டம் ஆர்.எஸ்.ரங்காபுரத்தை சேர்ந்த பிரவீன் (18), கோதாவரி மாவட்டம் துனியை சேர்ந்த மனோஜ் (18).
இவர்கள் 3 பேரும் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் படித்து வருகின்றனர். ஜெயபால்சன் மற்றும் மனோஜ் ஆகிய இருவரும் முதலாம் ஆண்டு பி.டெக்கும், பிரவீன் முதலாமாண்டு என்ஜினீயரிங்கும் படிக்கின்றனர்.
அவர்கள் 3 பேரும் கிருஷ்ணன்கோவில் போக்குவரத்து நகரில் தனியாக தங்கி இருந்து கல்லூரிக்கு சென்று வந்தனர். நேற்று இரவு 3 பேரும் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றனர்.
பல்கலைக்கழக வளாகத்தின் அருகே உள்ள லிங்கா பள்ளி முன்பு வந்தபோது, அவர்களது மோட்டார் சைக்கிள் மீது வத்திராயிருப்பு நோக்கி சென்ற மில் வேன் மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 மாணவர்களும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்த மாணவர் ஜெயபால்சன் சம்பவ இடத்திலேயே பலியானார். பிரவீன், மனோஜ் இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். பின்பு மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்தில் காயமடைந்த மாணவர் பிரவீனின் அண்ணன் மனோஜ் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் 3ம் ஆண்டு படிக்கிறார். விபத்து குறித்து கிருஷ்ணன் கோவில் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி நகராட்சி தேர்தலில் தி.மு.க.-தே.மு.தி.க.வினர் மோதிக்கொண்டனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியாக் கப்பட்டு முதல் முறையாக தேர்தலை சந்திக்கிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங் கியதும் அனைத்து வார்டு களிலும் உள்ள வாக்குச் சாவடிகளில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.
சிவகாசி 26&வது வார்டுக் குட்பட்ட வாக்குச் சாவடி ரத்தின விலாஸ் பள்ளிக் கூடத்தில் அமைக்கப்பட்டி ருந்தது. அங்கு இன்று காலை வாக்காளர்கள் வாக்களிக்க வந்த போது, தி.மு.க. மற்றும் தே.மு.தி.க.வை சேர்ந்த சேர்ந்தவர்கள் வாக்குச் சாவடி அருகே நின்று கொண்டு ஆதரவு திரட்டி னர்.
அப்போது தே.மு.தி.க. ஆதரவாளர் ஒருவரை தி.மு.க.வினர் கீழே தள்ளி விட்டதாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து தே.மு.தி.க. வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்கள் வேலாயுதம் ரஸ்தா பகுதியில் திரண்டு மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டது. இது குறித்த தகவல் கிடைத்ததும் போலீசார் போலீசார் அங்கு சென்று தே.மு.தி.க.வினரை சமரசம் செய்தனர்.
மேலும் பதட்டம் ஏற்படா மல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த வாக்குச்சாவடியில் சிறிது நேரம் வாக்குப்பதிவில் பாதிப்பு ஏற்பட்டது.
விருதுநகர் மாவட்டத்தில் 758 வாக்குச்சாவடிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது.
விருதுநகர்
தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சிவகாசி மாநகராட்சி, 5 நகராட்சி, 9 பேரூராட்சிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.
இங்கு உள்ள 363 கவுன்சிலர் பதவிகளில் 3 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதுப்பட்டி 3-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் முத்தையா இறந்ததால் அங்கு தேர்தல் நடக்கவில்லை. மீதமுள்ள 359 பதவிகளுக்கு ஆயிரத்து 613 பேர் போட்டியிட்டனர். இதற்காக மாவட்டத்தில் 758 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
அதிகபட்சமாக அ.தி.மு.க.வை சேர்ந்த 353 பேரும், தி.மு.க.வை சேர்ந்த 297 பேரும், பா.ஜ.க.வை சேர்ந்த 167 பேரும் களமிறங்கினர். நாம்தமிழர் கட்சி சார்பில் 113 பேரும், காங்கிரஸ், தே.மு.தி.க. சார்பில் தலா 34 பேர் போட்டியிட்டனர்.
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கப்பட்டன.
அதனை தொடர்ந்து வாக்காளர்கள் வந்து வாக்களித்தனர். காலையில் சிறிது நேரம் மந்தமாக காணப்பட்ட வாக்குப்பதிவு, நேரம் செல்ல செல்ல விறுவிறுப்பானது. ஏராளமானோர் வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை செலுத்தினர்.
இதில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா மூலம் வாக்குப்பதிவு கண்காணிக்கப்பட்டது. நுண் பார்வையாளர்களும் வாக்குப்பதிவை ஆய்வு செய்தனர். ஒரு சில இடங்களில் பணப்பட்டு வாடா நடப்பதாக புகார்கள் எழுந்தன. இருப்பினும் வாக்குப்பதிவில் எந்த பாதிப்பும் இல்லை. தொடர்ந்து விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது.






