என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அங்குள்ள ரத்தினவிலா
    X
    விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அங்குள்ள ரத்தினவிலா

    758 வாக்குச்சாவடிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

    விருதுநகர் மாவட்டத்தில் 758 வாக்குச்சாவடிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது.
    விருதுநகர்

    தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சிவகாசி மாநகராட்சி,  5 நகராட்சி, 9 பேரூராட்சிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

    இங்கு உள்ள 363 கவுன்சிலர் பதவிகளில் 3 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதுப்பட்டி 3-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் முத்தையா இறந்ததால் அங்கு தேர்தல் நடக்கவில்லை. மீதமுள்ள 359 பதவிகளுக்கு  ஆயிரத்து 613 பேர் போட்டியிட்டனர். இதற்காக மாவட்டத்தில் 758 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

    அதிகபட்சமாக அ.தி.மு.க.வை சேர்ந்த 353 பேரும், தி.மு.க.வை சேர்ந்த 297 பேரும், பா.ஜ.க.வை சேர்ந்த 167 பேரும் களமிறங்கினர். நாம்தமிழர் கட்சி சார்பில் 113 பேரும், காங்கிரஸ், தே.மு.தி.க. சார்பில் தலா 34 பேர் போட்டியிட்டனர். 

    அனைத்து வாக்குச்சாவடிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கப்பட்டன.


    அதனை தொடர்ந்து வாக்காளர்கள் வந்து வாக்களித்தனர்.  காலையில் சிறிது நேரம் மந்தமாக காணப்பட்ட வாக்குப்பதிவு,  நேரம் செல்ல செல்ல விறுவிறுப்பானது. ஏராளமானோர் வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை செலுத்தினர்.   

    இதில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா மூலம் வாக்குப்பதிவு கண்காணிக்கப்பட்டது. நுண் பார்வையாளர்களும் வாக்குப்பதிவை ஆய்வு செய்தனர். ஒரு சில இடங்களில் பணப்பட்டு வாடா நடப்பதாக புகார்கள் எழுந்தன. இருப்பினும் வாக்குப்பதிவில் எந்த பாதிப்பும் இல்லை. தொடர்ந்து விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. 
    Next Story
    ×