என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேர்தல்
    X
    தேர்தல்

    வாக்களிக்க ஆர்வம் காட்டாத மக்கள்

    விருதுநகர் மாவட்டத்தில் வாக்களிக்க மக்கள் ஆர்வம் காட்டவில்லை.

    விருதுநகர்

    தேர்தல் என்றால் திருவிழா என்று முன்பெல்லாம் கூறுவார்கள். ஆனால் தற்போது தேர்தல் ஆணையத்தின் கெடுபி யால்  நிலைமை மாறியுள்ளது. தேர்தல் மட்டுமல்ல அதில் வாக்களிக்கும் மக்கள் மனநிலையும் மாறிவிட்டது என்பதை வாக்குப்பதிவு சதவீதம் காட்டுகிறது.

    ஒவ்வொரு தேர்தலுக்கும்  மொத்த சதவீத வாக்குப்பதிவை பார்த்தால் குறைந்தே வருகிறது. விருதுநகர் மாவட்டத்தை பொருத்தவரை கடந்த சட்டமன்ற தேர்தலில் 70 சதவீதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவாகின. 

    ஆனால் நேற்று நடந்த நகர்ப்புற உள்ளாட்சி வாக்குப்பதிவில் 62.94 சதவீதம் வாக்குகளே பதிவாகி உள்ளன. இது  தேர்தலில் மக்களுக்கு ஆர்வம் இல்லாத நிலையையே காட்டுகிறது-.

    வாக்களிப்பது ஜனநாயக கடமை. வாக்களிக்க அனைவரும் செல்ல வேண்டும் என்பதற்காக அரசு விடுமுறை என்றெல்லாம் அறிவிக்கப்பட்ட நிலையிலும் வாக்கு சதவீதம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    சில விதிமீறல்களும் வாக்கு பதிவு மீது மக்களுக்கு நம்பிக்கையின்மையை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில்கூட விதிமீறல்கள் இல்லை என்றும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விதிமீறல்கள் அதிக அளவில் காணப்பட்டதாகவும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    பல இடங்களில் வேட்பாளர்கள் வாக்குச்சாவடிகளுக்கு உள்ளேயே வந்து ஆதரவு கேட்டதாகவும் அவர்கள் புகார்கள்  கூறி உள்ளனர்.
    Next Story
    ×