என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் பதிவான மின்னணு வாக்கு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையம் கொண்டுவரப்பட்டு அடுக்கி
வாக்கு எண்ணும் மையங்களுக்கு மின்னணு எந்திரங்கள் கொண்டுவரப்பட்டன
விருதுநகர் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையங்களுக்கு மின்னணு எந்திரங்கள் கொண்டுவரப்பட்டன. அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
விருதுநகர்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. வாக்குப்பதிவுக்கு பிறகு அனைத்து மின்னணு வாக்கு எந்திரங்களும் போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மாநகராட்சி, சாத்தூர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை, விருதுநகர் ஆகிய 5 நகராட்சிகள், காரியாபட்டி, மல்லாங்கிணறு, மம்சாபுரம், சேத்தூர், எஸ்.கொடிகுளம், வத்திராயிருப்பு, வ.புதுப்பட்டி, செட்டியார்பட்டி, சுந்தரபாண்டியம் ஆகிய 9 பேரூராட்சிகளும் உள்ளன.
இங்கு நடைபெற்ற வாக்குப்பதிவுக்காக 758 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. நேற்று மாலை 6 மணி வரை விறுவிறுப்பான வாக்குப்பதிவு முடிந்ததும் அனைத்து மின்னணு வாக்கு எந்திரங்களும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சரிபார்க்கப்பட்டு சீல்வைக்கப்பட்டன. அதன் பிறகு போலீஸ் பாதுகாப்புடன் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் உள்ள மின்னணு வாக்கு எந்திரங்கள் லாரிகளில் ஏற்றப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. சிவகாசி மாநகராட்சி மின்னணு வாக்கு எந்திரங்கள் சிவகாசி அரசு கலைக்கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன.
விருதுநகர் நகராட்சி மின்னணு வாக்கு எந்திரங்கள் வெள்ளைச்சாமி நாடார் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டது. இந்த நகராட்சி மின்னணு வாக்கு எந்திரங்கள் இன்று அதிகாலை 3.30 மணிக்குதான் வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்தது. சாத்தூர் நகராட்சி மின்னணு வாக்கு எந்திரங்கள் எத்தல் ஆர்.வி.பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கும், ராஜபாளையம் நகராட்சி மின்னணு வாக்கு எந்திரங்கள் பி.ஏ.சி.ராமசாமிராஜா பாலிடெக்னிக் கல்லூரிக்கும் கொண்டு வரப்பட்டன. ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி மின்னணு வாக்கு எந்திரங்கள் வி.பி.எம்.எம்.கலைக்கல்லூரிக்கும், அருப்புக்கோட்டை நகராட்சி மின்னணு வாக்கு எந்திரங்கள் தேவாங்கர் கலைக்கல்லூரிக்கும் கொண்டு வரப்பட்டன.
இதேபோல் 9 பேரூராட்சிகளில் காரியாபட்டி, மல்லாங்கிணறு பேரூராட்சிகளின் மின்னணு வாக்கு எந்திரங்கள் மல்லாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளிக்கும், மம்சாபுரம், சேத்தூர், எஸ்.கொடிகுளம் பேரூராட்சிகளின் மின்னணு வாக்கு எந்திரங்கள் ராஜபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கும், வத்திராயிரப்பு, வ.புதுப்பட்டி, செட்டியார்பட்டி, சுந்தரபாண்டியம் பேரூராட்சிகளின் மின்னணு வாக்கு எந்திரங்கள் கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்திற்கும் கொண்டு வரப்பட்டன.
அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் மின்னணு வாக்கு எந்திரங்கள் அறையில் வைக்கப்பட்டு வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் அந்த அறை சீல்வைக்கப்பட்டது. தொடர்ந்து மின்னணு வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மின்னணு வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் சீல் வைக்கப்பட்ட கதவு முன்பும், அந்த அறையின் நுழைவு வாயிலிலும் துப்பாக்கி ஏந்திய போலீ சார் பாதுகாப்பு பணிக்கு நிறுத்தப்பட்டனர்.
இதே போல் வளாக வாசலிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்ற னர். நாளை மறுநாள் (22ந்தேதி) வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதன் முடிவுகள் உடனுக்குடன் வெளியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர் மறைமுக தேர்தல்கள் மார்ச் 4ந்தேதி நடக்கிறது.
Next Story






