என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வழக்கு
    X
    வழக்கு

    பா.ஜனதா வேட்பாளர் மீது வழக்கு

    சிவகாசி அருகே வாக்குச்சாவடியில் தகராறு செய்ததாக பா.ஜனதா வேட்பாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி முதன்முறையாக மாநகராட்சியாக்கப்பட்டு தேர்தல் நடைபெற்றது. இந்த மாநகராட்சிக்குட்பட்ட  திருத்தங்கல் சி.கே. மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடந்தது.

    அப்போது மின்னணு வாக்கு எந்திரத்தில் பழுது ஏற்பட்டது. இதனை சரிசெய்யும் பணியில் வாக்குச்சாவடி அதிகாரி புவனேசுவரன் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு வந்த 12வது வார்டு பா.ஜனதா  வேட்பாளர் சுரேஷ்குமார் மற்றும் 10 பேர் வாக்குவாதம் செய்ததோடு மேஜையை சேதப்படுத்தியதாக திருத்தங்கல் போலீசில் அதிகாரி புவனேசுவரன் புகார் செய்தார்.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் இடையூறு செய்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சுரேஷ்குமார் உள்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    Next Story
    ×