என் மலர்tooltip icon

    விழுப்புரம்

    குடியிறுப்புகள் நிறைந்த பகுதியில் கொள்ளை நடந்திருப்பது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பெரி யார்நகரை சேர்ந்தவர் ஜம்பு (என்கிற) ஜம்புலிங்கம் (வயது 50). இவர் ரெயில்வேயில் மெக்கானிக்காக பணி புரிந்து வருகிறார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக திருச்சியில் நடைபெறும் பயிற்சிக்காக சென்று விட்டார். அவரது மனைவி மற்றும் குழைந்தைகள் விழுப்புரத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தனர். வீட்டின் மேல்புறம் வாடகைக்கு விடப்பட்டுள்ளது.இந்நிலையில் நேற்று இரவு ஜம்புலிங்கத்தின் மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவு நேரத்தில் வீட்டின் பின்புறம் வந்த மர்மநபர்கள் கடப்பாறையினால் கதவை உடைத்துள்ளனர். வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் பீரோவை உடைத்து அதிலிருந்த 25 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் பணத்தை திருடி சென்றனர்.

    இது குறித்து விழுப்புரம் நகர போலீசாரிடம் இன்று காலை புகாரளித்தனர். அதன்பேரில் இன்ஸ் பெக்டர் காமராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதனைத் தொடர்ந்து தடயவியல் நிபுணர்களும், மோப்பநாயும் வர வழைக்கப்பட்டது. வீட்டின் பின்பக்க கதவு, பீரோவில் இருந்த தடயங்களை தடயவியல் நிபுணர்கள் சேகரித்தனர்.சிறிது தூரம் ஓடிய மோப்பநாய் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இதையடுத்து அப்பகுதி களில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். குடியிறுப்புகள் நிறைந்த பகுதியில் கொள்ளை நடந்திருப்பது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • அதிகாலை 1 மணி அளவில் பஸ் திண்டிவனம் பஸ் நிறுத்தத்திற்கு வந்தது.
    • தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    சென்னையில் இருந்து நேற்று இரவு திருநெல்வேலிக்கு செல்லும் தனியார் ஆம்னி பஸ்சில் சென்னையில் இருந்து பெண் ஒருவர் பயணம் செய்து கொண்டிருந்தார்.

    அதிகாலை 1 மணி அளவில் இந்த பஸ் திண்டிவனம் பஸ் நிறுத்தத்திற்கு வந்தது. அப்போது திருநெல்வேலியைச் சேர்ந்த 11 பேர் கொண்ட கும்பல் குடித்துவிட்டு பஸ்சில் ஏறி வந்து கொண்டிருந்தனர். தூங்கிக்கொண்டிருந்த அப்பெண்ணை 11 பேர் கொண்ட கும்பலில் 2 பேர் மட்டும் பெண் மீது தவறான கண்ணோட்டத்தில் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

    அந்தப் பெண் விழுப்புரத்தில் உள்ள அவரது உறவினருக்கு தகவல் தெரிவிக்கவே அவரது உறவினர்கள் விழுப்புரம் புறவழிச்சாலையில் நின்று கொண்டிருந்தனர். ஆனால் பஸ் நிற்காமல் செல்லவே ஆத்திரமடைந்த உறவினர்கள் சினிமா பட பாணியில் பஸ்சை இரு சக்கர வாகனம் மூலம் 8 கிலோமீட்டர் துரத்தி விழுப்புரம் அடுத்த பிடாகம் என்ற இடத்தில் மடக்கினர். அதில் இருந்த 11 பேர்களை கீழே இறக்கி தர்ம அடி கொடுத்து அந்த பஸ் மற்றும் அதிலிருந்த அனைவரையும் விழுப்புரம் தாலுக்கா போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து ஒப்படைத்தனர்.

    இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 2 பேரை மட்டும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மற்ற பயணிகளையும் பஸ்சையும் அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    விழுப்புரம்:

    வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் இன்று அதிகாலை வரை மழை பெய்தது. இதில் கிளியனூர் அருகேயுள்ள கூத்தப்பாக்கம் பள்ளி தெருவில் இருந்த புளியமரம் வேரோடு சாய்ந்து அருகில் இருந்த வீடுகள் மீது இன்று காலையில் விழுந்தது.

    கான்கீரிட் வீடு என்ப தால் வீட்டிற்குள் வசித்த செல்வி (வயது 38) மற்றும் குடும்பத்தார் அதிர்ஷ்ட வசமாக உயிர்தப்பி னர். அதேசமயம் வீட்டின் மேல்பகுதி சேதமடைந்தது. மேலும், மரங்களின் கிளை கள் முறிந்து விழுந்ததில் பக்கத்தில் இருந்த 2 வீடுகளின் கழிப்பறைகள் சேத மடைந்தது.

    அரும்பட்டு கிராமத்தில் நடைபெற்ற முகாமில் விழுப்புரம் மாவட்ட கூடுதல் கலெக்டர் ஸ்ருதன் ஜெய்நாராயணன் கலந்து கொண்டு பயனாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் ஒன்றியத்தில் பிரதமரின் குடியிருப்பு திட்டத்தின் கீழ் 2016-22 வரை வழங்கப் பட்ட 2862 வீடுகளை கட்டி முடிக்காதவர்களுக்கு ஆலங் குப்பம் சமுதாயக் கூடத்திலும், ஏனாதிமங்க லம் ஊராட்சி சேவைமைய கட்டிடத்திலும், அரும் பட்டு சமத்துபுரம் சமுதாயக் கூடத்திலும், மணக்குப்பம் விஜய் திருமணமண்ட பத்தி லும் அண்டராய நல்லூர் அஞ்சுகம் திருமண மண்ட பத்திலும் முகாம் நடை பெற்றது.

    அரும்பட்டு கிராமத்தில் நடைபெற்ற முகாமில் விழுப்புரம் மாவட்ட கூடுதல் கலெக்டர் ஸ்ருதன் ஜெய்நாராயணன் கலந்து கொண்டு பயனாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் சிமெண்ட் கம்பி பணம் முறையாக வழங்கப்படுகின்றதா எனவும் வீடு கட்டுவதற்கு சிரமங்கள் இருந்தால் தீர்ப்பதாகவும் வருகிற 31.12. 2023-க்குள் வீடுகளை கட்டி முடிக்க வேண்டும் எனவும் வீடுகளை கட்டி முடிப்பவர்கள் வீடுகளுக்கு தான் வருவதாகவும் கூறினார்.அவருடன் திருவெண்ணைநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் (வட்டார ஊராட்சி) கேசவலு (வட்டார ஊராட்சி) விஜயபாலன்(கிராம ஊராட்சி), துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தர் ராஜன், ஒன்றிய பொறி யாளர் ரங்கபாஷியம் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • திண்டிவனம் அடுத்த இனமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் அருண்
    • வேலையை முடித்துவிட்டு இரவு வீட்டிற்கு வரவில்லை.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த இனமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் அருண் (24)ஸ்வீட் மாஸ்டர் . இவர் கடந்த மாதம் 30 -ந்தேதி வீட்டிலிருந்து வேலைக்கு செல்வதாக சென்ற அவர் வேலையை முடித்துவிட்டு இரவு வீட்டிற்கு வரவில்லை. அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு போது செல் சுவிட்ச் ஆப் ஆகி இருந்ததது. இதனால் அவரது தந்தை அருண் வேலை செய்த இடம் மற்றும் பல்வேறு இடங்களில் தேடிய நிலையில் அவரை காணவில்லை என அவரது தந்தை மோசஸ் வெள்ளிமேடு பேட்டை போலீஸ் நிலையத்தில் கடந்த 30 -ந்தேதி இரவு புகார் அளித்தார்.

    புகாரின்பேரில் போலீசார் பல்வேறு இடங்களில் தேடி வந்த நிலையில் திண்டிவனம் அருகே உள்ள விழுக்கம் ஏரிக்கரை வேப்ப மரத்தில் அழுகிய நிலையில் உடலில் பல்வேறு இடங்களில்ெவடடு காயங்களுடன் அருண் பிணமாக கிடந்தார். இது குறித்த தகவல் கிடைத்ததும் அங்கு சென்ற ரோசனை போலீசார் அருண் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அருண் தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது முன் விரோதம் காரணமாக யாரேனும் அவரை அடித்து கொலை செய்துவிட்டு தூக்கில் தொங்கவிட்டார்களா என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விடுமுறைக்கு சென்ற வாகனங்கள்
    • ஒரே நாளில் 45 ஆயிரம்

    விழுப்புரம்:

    தென்மாவட்டங்களுக்கு விடுமுறைக்கு சென்ற வாகனங்கள் ஒரே நாளில் 45 ஆயிரம் வாகனங்கள் தலைநகர் திரும்பின. தமிழகத்தில் தீபாவளி பண்டிகையையாட்டி கடந்த 10,11 தேதிகளில் தென்மாவட்டங்களுக்கு விடுமுறையை கொண்டாட சென்னை தலைநகரில் வசிக்கும் தென்மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இரண்டு நாட்கள் தொடர்ந்து 1லட்சத்து 10ஆயிரம் வாகனங்களில் சென்றனர்.

    நேற்று விடுமுறை முடிந்த நிலையில் வாகனங்கள் சென்னைக்கு திரும்பின.நேற்று மாலை 6.30 மணிவரை 28 ஆயிரம் வாகனங்களும், அதிகாலை 6மணி வரை 45 ஆயிரம் வாகனங்கள் டோல்கேட்டை கடந்தன.வாகனங்கள் அதிகமாக சென்னை நோக்கி சென்றதால் 8 வழிகள் திறக்கப்பட்டு வாகனங்கள் அனுமதிக்கப்பட்டதால் , டோல் பிளாசாவை நெரிசலின்றி எளிதாக கடந்தன.சாலையில் வாகனங்கள் அதிகரிக்க ஆரம்பித்ததால் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வினாயக முருகன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • பூசாரிகள் பக்திப் பாடல்கள் பாடியவுடன் அம்மன் ஊஞ்சலில் முன்னும் பின்னும் அசைந்தாடியபடி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    • விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், புதுச்சேரியிலிருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    மேல்மலையனூர்:

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாதந்தோறும் அமாவாசை அன்று இரவு ஊஞ்சல் விழா நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி ஐப்பசி மாதத்துக்கான அமாவாசை விழா நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பால், தயிர், சந்தனம், மஞ்சள், விபூதி, குங்குமம் பஞ்சாமிர்தம், இளநீர், தேன், பன்னீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு வெள்ளிக்கவச அலங்காரத்தில் அருள்பாலித்தனர். உற்சவ அம்மனுக்கு அன்னபூரணி அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் அருள்பாலித்தார்.

    இரவு 11 மணிக்கு அங்கிருந்த உற்சவ அம்மனை பம்பை, மேளதாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக கொண்டு செல்லப்பட்டு ஊஞ்சல் மண்டபத்தில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் அமர்த்தினர். பின்பு பூசாரிகள் பக்திப் பாடல்கள் பாடியவுடன் அம்மன் ஊஞ்சலில் முன்னும் பின்னும் அசைந்தாடியபடி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    விழாவில் மாவட்ட கலெக்டர் பழனி, தாசில்தார் முகமது அலி மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர். விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னை, காஞ்சிபுரம் வேலூர், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், புதுச்சேரியிலிருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழுத் தலைவர் செந்தில் குமார் பூசாரி, அறங்காவலர்கள் தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி, சந்தானம் பூசாரி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை விழுப்புரம் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோவிந்தராஜி தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் செய்திருந்தனர்.

    • மீனவர்கள் கடற்கரை ஓரமிருந்த தங்களது விசைப்படகுகளை மேடான பகுதிக்கு எடுத்துச் செல்கின்றனர்.
    • ஏரி, குளம், குட்டையில் உடைப்பு ஏற்பட்டால் உடனடியாக அதை சரி செய்ய மணல் மூட்டை தயார் நிலையில் உள்ளது.

    மரக்காணம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில தினங்களாக லேசான மழை பெய்து வந்தது. இதன் காரணமாக இப்பகுதியில் உள்ள குளம், ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகளுக்கு நீர் வரத்தும் அதிகரித்தது. இதனால் இப்பகுதியில் இருக்கும் விவசாயிகள் தங்களது விலை நிலங்களில் உழவு மற்றும் நடவு பணிகளை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் உள்ள கடற்கரையில் வழக்கத்திற்கு மாறாக சீற்றம் ஏற்பட்டு கடல் அலைகள் ஆக்ரோஷமாக கரைப்பகுதி நோக்கி தாக்குகிறது.

    இதனால் மீனவர்கள் கடற்கரை ஓரமிருந்த தங்களது விசைப்படகுகளை மேடான பகுதிக்கு எடுத்துச் செல்கின்றனர். இதுபோல் மழையும் தொடர்ந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 19 மீனவர் கிராமங்களில் இருக்கும் மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரையில் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

    இதைத்தொடர்ந்து கீழ் புத்துப்பட்டு, அனுமந்தை, கூனி மேடு, படிச்ச மேடு, செட்டிகுப்பம், ஆட்சிக்காடு, கைப்பணி குப்பம், அழகன் குப்பம், முட்டுக்காடு குப்பம் போன்ற 19 மீனவ கிராமங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் இன்று கடலுக்கு செல்லவில்லை.

    மரக்காணம் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள 500 மணல் மூட்டைகள் வளர்ச்சி அலுவலர் ராமு தலைமையில் தயார் நிலையில் வைத்துள்ளார்கள்.

    ஏரி, குளம், குட்டையில் உடைப்பு ஏற்பட்டால் உடனடியாக அதை சரி செய்ய இந்த மணல் மூட்டை தயார் நிலையில் உள்ளது. அதுபோல் சாலை துண்டிப்பு ஏற்பட்டால் உடனடியாக அதை சீரமைக்க இந்த 500 மணல் முட்டையை தயார் நிலையில் வைத்துள்ளனர்.

    இந்த பகுதியில் ஏராளமான உப்பளங்கள் உள்ளது. அங்கு மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

    • திண்டிவனத்தில் பட்டாசு வெடித்ததில் தீற்ெபாறி விழுந்து கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது.
    • இவரது வீடு திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கிடங்கல் 2 ராஜன் தெருவை சேர்ந்தவர் அஞ்சலி தேவி. இவர் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர். இவரது வீடு திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. உடனடியாக அருகே இருந்தவர்கள் தீயை அணைக்கப் போராடினர். இது குறித்து தகவலறிந்த திண்டிவனம் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இது குறித்து திண்டிவனம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் தீபாவளிக்கு சிறுவர்கள் பட்டாசு வெடித்த போது அதிலிருந்து தீப்பொறி கூரை வீட்டில் பற்றி எரிந்திருக்கலாம் என தெரியவந்தது.

    • திண்டிவனத்தில் பட்டாசு வெடித்ததில் தீற்ெபாறி விழுந்து கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது.
    • வீடு திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கிடங்கல் 2 ராஜன் தெருவை சேர்ந்தவர் அஞ்சலி தேவி. இவர் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர். இவரது வீடு திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. உடனடியாக அருகே இருந்தவர்கள் தீயை அணைக்கப் போராடினர்.

    இது குறித்து தகவலறிந்த திண்டிவனம் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இது குறித்து திண்டிவனம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் தீபாவளிக்கு சிறுவர்கள் பட்டாசு வெடித்த போது அதிலிருந்து தீப்பொறி கூரை வீட்டில் பற்றி எரிந்திருக்கலாம் என தெரியவந்தது.

    • அய்யூர் அகரம் கிராமத்தை சேர்ந்தவர் காத்தவராயன் மகன் அரிதாஸ்
    • உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னை

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி அடுத்த அய்யூர் அகரம் கிராமத்தை சேர்ந்தவர் காத்தவராயன் மகன் அரிதாஸ் (வயது 25). இவர் பேக்கரியில் கூலி தொழிலாளியாக பணி செய்து வந்தார். அடிக்கடி மது சாப்பிட்டதால் தீராத வயிற்று வலி ஏற்பட்டு மன உளைச்சலில் இருந்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று காலை 9 மணிக்கு வீட்டில் இருந்து சென்றவர் மதிய சாப்பாட்டிற்கு வீட்டுக்கு வராததால், அவரது உறவினர்கள் தேடி வந்தனர். முண்டியம்பாக்கம் அருகே உள்ள ஒரத்தூர் ஏரிக்கரையில் உள்ள புளிய மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் தெரிய வந்தது. தகவல் அறிந்து. விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அரிதாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக முண்டியம் பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக விக்கிரவாண்டி சப்-இன்ஸ்பெக்டர் காத்தமுத்து மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    • பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு வாகனங்களில் அணிவகுத்து சென்றனர்
    • வெறிச்சோடிய நெடுஞ்சாலை

    விழுப்புரம்:

    தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. பண்டிகையை கொண்டாட கடந்த 10-ந் தேதி முதல் சென்னையில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு வாகனங்களில் அணிவகுத்து சென்றனர்.சாலைகளில் தொடர்ந்து சென்ற வாகனங்களால் போக்குவரத்து நெரிசலாக காணப்பட்டது. இந்த ஆண்டு தீபாவளி பண்டி கையை கொண்டாட தென் மாவட்டங்களுக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் வாகனங்களில் பொது மக்கள் சென்றனர்.

    தீபாவளியை முன்னிட்டு பெரும்பாலான அலுவல கங்கள், தனியார் நிறுவனங்க ளில் பணிபுரியும் ஊழியர்க ளுக்கு இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டது, இதனால் எப்போதும் பரபரப்ாக காணப்படும் விக்கிர வாண்டி டோல்கேட் சாலை வெறிச்சோடி காணப்பட்டது.

    ×