விக்கிரவாண்டி அருகேகூலி தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை

அய்யூர் அகரம் கிராமத்தை சேர்ந்தவர் காத்தவராயன் மகன் அரிதாஸ்உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னை
அரிதாஸ்
அரிதாஸ்
Published on

விழுப்புரம்:

விக்கிரவாண்டி அடுத்த அய்யூர் அகரம் கிராமத்தை சேர்ந்தவர் காத்தவராயன் மகன் அரிதாஸ் (வயது 25). இவர் பேக்கரியில் கூலி தொழிலாளியாக பணி செய்து வந்தார். அடிக்கடி மது சாப்பிட்டதால் தீராத வயிற்று வலி ஏற்பட்டு மன உளைச்சலில் இருந்து வந்தார்.

இந்நிலையில் நேற்று காலை 9 மணிக்கு வீட்டில் இருந்து சென்றவர் மதிய சாப்பாட்டிற்கு வீட்டுக்கு வராததால், அவரது உறவினர்கள் தேடி வந்தனர். முண்டியம்பாக்கம் அருகே உள்ள ஒரத்தூர் ஏரிக்கரையில் உள்ள புளிய மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் தெரிய வந்தது. தகவல் அறிந்து. விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அரிதாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக முண்டியம் பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக விக்கிரவாண்டி சப்-இன்ஸ்பெக்டர் காத்தமுத்து மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com