என் மலர்tooltip icon

    வேலூர்

    • ஓடும் பஸ்சில் ஏற முயன்றதால் விபரீதம்
    • போக்குவரத்து விதிகளை பின்பற்ற போலீசார் அறிவுரை

    வேலுார்:

    ஓசூரில் இருந்து சென்னை செல்லும் அரசு பஸ் வேலூர் புது பஸ் நிலையத்தில் இருந்து நேற்று மாலை புறப்பட்டது.

    அப்போது, ஊருக்கு செல்ல வேண்டும் என்ற அவசரத்தில் ஒரு குடும்பம் அந்த பஸ்சில் ஏற முயன்றனர்.

    அப்போது பஸ் படியிலிருந்து 2 வயது பெண் குழந்தை தவறி கீழே விழுந்தது. இதனை பார்த்த சக பயணிகள் அதிர்ச்சி யடைந்து கூச்சலிட்டனர்.

    சுதாரித்துகொண்ட டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தினார். இதனால், பஸ் சக்கரத்தில் சிக்காமல், காலில் லேசான காயத்துடன் அதிர்ஷ்ட வசமாக குழந்தை உயிர் தப்பியது.

    உடனடியாக பெற்றோர் அந்த குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு சென்றனர்.

    ஓடும் பஸ்சில் ஏற வேண்டாம். அதிவேக பயணம் ஆபத்தில் முடியும். போக்குவரத்து விதிகளை மதிக்க வேண்டும். வாகனங்களில் செல்ப வர்கள் தலைகவசம் அணிய வேண்டும்.

    ஆனால் அதனை பெரும்பா லானோர் மதிப்பதில்லை. அதனால்தான் இதுபோன்ற விபத்துகள் அவ்வப்போது நடக்கிறது. எனவே பொது மக்கள் போக்குவரத்து விதிகளை பின்பற்ற வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

    இந்தசம்பவம் வேலூர் புதிய பஸ் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • வனச்சரகர் 2 மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனர்
    • காப்புக்காட்டில் பத்திரமாக விடப்பட்டது

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அடுத்த ஓட்டேரிப்பாளையம் பகுதியில் சண்முகம் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணறு உள்ளது. நேற்று வழி தவறி வந்த 2 ஆண் புள்ளி மான்கள் திடீரென இவரது கிணற்றில் தவறி விழுந்தன.

    இதனை கண்ட சண்முகம் கிணற்றில் 2 மான்கள் தத்தளித்து கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி யடைந்தார். உடனடியாக அருகே இருந்த ஒடுகத்தூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனச்சரகர் இந்து தலைமையிலான வீரர்கள் தீயனைப்பு துறையினரின் உதவியுடன் மான்களை 2 மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனர்.

    காயம் அடைந்திருந்த 2 புள்ளி மான்களுக்கும் முதலுதவி சிகிச்சை அளித்து வனச்சரகர் இந்து உத்தரவின்பேரில் அருகே இருந்த கருத்தமலை காப்புக்காட்டில் பத்திரமாக விட்டனர்.

    • சாலையை கடந்த போது பரிதாபம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் தனசேகர் (வயது 26). இவர் கே.வி. குப்பத்தில் இருந்து காட்பாடி நோக்கி பைக்கில் சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது சென்னாங்குப்பம் தனியார் பள்ளி அருகே சவுந்தரராஜன் என்பவர் சைக்கிளில் சாலையை கடந்தார். எதிர்பாராத விதமாக தனசேகர் ஓட்டிச் சென்ற பைக் சவுந்தரராஜன் சைக்கிள் மீது மோதியது.

    இதில் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்ட தனசேகர் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த கே.வி. குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தனசேகர் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கூட்ட நெரிசல் ஏற்பட்டது
    • விலை உயர்த்தி விற்பனை செய்யப்பட்டன

    வேலூர்:

    வேலூர் மீன்மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு கடலோர பகுதிகளில் இருந்து மீன்கள் கொண்டு வரப்படுகிறது.

    அதைத்தவிர ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து ரெயில், டெம்போ உள்ளிட்ட வாகனங்களில் மீன்கள் விற்பனைக்காக வருகின்றன.

    இங்கிருந்து ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களுக்கு மீன்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. வேலூர் மீன்மார்க்கெட்டில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமையில் அசைவ பிரியர்களின் கூட்டம் அதிகமாக காணப்படும்.

    அதிகாலையில் மொத்த விற்பனையும், காலை 7 மணிக்கு மேல் சில்லறை விற்பனையும் நடக்கிறது. அன்றைய தினம் அதிகளவு மீன்கள் விற்பனையாகும். இதில் புரட்டாசி மாதத்தின் எதிரொலியாக கடந்த மாதம் மீன்கள் விலை வீழ்ச்சி அடைந்து விற்பனை மந்தமாக இருந்தது. புரட்டாசி மாதம் முடிந்ததை தொடர்ந்து இன்று வேலூர் மீன் மார்க்கெட்டில் அசைவ பிரியர்கள் அதிக அளவில் குவிந்தனர்.

    மீன்கள் விற்பனை மட்டுமின்றி ஆடு, கோழி, நண்டு உள்ளிட்ட புரட்டாசி மாதம் முடிந்ததை தொடர்ந்து விற்பனையும் வெகுஜோராக நடந்தது. அதிக அளவில் கூட்டம் குவிந்ததால் மீன் மார்க்கெட் வளாகம் நிரம்பி வழிந்தது. இதனால் சற்று நெரிசல் ஏற்பட்டது.

    பெரும்பாலான மீன்களின் விலை உயர்த்தி விற்பனை செய்யப்பட்டன. சிலவற்றின் விலை சிறிதளவு அதிகரித்து காணப்பட்டது.

    ஒரு கிலோ வஞ்சிரம் மீன் ரூ. 1100 முதல் ரூ.1500-க்கும், இறால் ரூ.250 முதல் ரூ.300-க்கும், வவ்வால், கட்லா மீன்கள் ரூ.250-க்கும் விற்பனையானது. அதேபோல் சங்கரா மீன் ரூ.250 முதல் ரூ.300-க்கும், நெத்திலி ரூ.150-க்கும், நெய்மீன் ரூ.100 முதல் ரூ.120-க்கும், ஜிலேபி ரூ.80 முதல் ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டன.

    • பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சோதனை செய்தனர்
    • உரிமையாளர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அறிவுரை

    வேலூர்:

    நாடு முழுவதிலும் தீபாவளி பண்டிகை வருகிற 12-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, பட்டாசு விற்பனையும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்தநிலையில், தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பட்டாசு ஆலையில் நடந்த விபத்தில் 15-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழ்ந்தனர்.

    இதையடுத்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள பட்டாசு கடைகளில் ஆய்வு செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது.

    இதை தொடர்ந்து, வேலூர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு கடைகளில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு நடத்த தாசில்தார்களுக்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவிட்டார்.

    இதற்கிடையில், வேலூர் ஆர்டிஓ அலுவலகத்தில் பட்டாசு கடை உரிமையா ளர்களுடன் ஆலோசனை கூட்டத்தில், கலெக்டர், டிஆர்ஓ மற்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறை பின்பற்றி பட்டாசு விற்பனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

    இந்தநிலையில், வேலூர் காகிதப்பட்டறையில் உள்ள பட்டாசு கடையில், தாசில்தார் செந்தில் நேற்று திடீர் ஆய்வு செய்தார்.

    அப்போது, கடை உரிமையாளர் ஜனார்த்தனனிடம், கடைக்கான லைசென்ஸ் உள்ளதா? என ஆய்வு செய்தார். தொடர்ந்து, கடையில் அவசர கால வழி திறந்த நிலையில் உள்ளதா?, கடையில் அனுமதிக்கப்பட்ட அளவு பட்டாசு இருப்பு வைக்கப்பட்டுள்ளதா?, தீத்தடுப்பு கருவிகள் காலாவதி ஆகாமல் முறையாக பராமரிக்கப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்தார்.

    மேலும், சீனா பட்டாசுகள் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், விற்பனை செய்யக்கூடாது. அரசின் வழிகாட்டுதல் முறையாக பின்பற்றி, பட்டாசு விபத்து இல்லாத மாவட்டமாக மாற்ற பட்டாசு கடை உரிமையாளர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தாசில்தார் செந்தில் அறிவுரை வழங்கினார்.

    • வாகனப்போக்கு வரத்து அதிகமாக காணப்பட்டது
    • மல்லி பூ கிலோ ரூ.300-க்கும் விற்பனையானது

    வேலூர்:

    ஆயுத பூஜை நாளில் வீடு, பட்டறை, தொழிற்சா லைகள் உள்பட வணிக வளாகங்கள் அனைத்தும் தூய்மை செய்து சரஸ்வதி, லட்சுமி, பார்வதிக்கு படையலிட்டு சிறப்பு பூஜை செய்து வழிபடுவது வழக்கம்.

    அதன்படி நடப்பாண்டு நாளை ஆயுத பூஜையும், விஜயதசமி 24-ந் தேதியும் கொண்டாடப்படுகிறது.

    ஆயுதபூஜைக்கு இன்று ஒரு நாள் மட்டுமே உள்ளதால் பூஜை பொருள்கள் வாங்க வேலூர் மாநகரில் உள்ள கடைகள் மற்றும் மார்க்கெட்டுகளில் கூட்டம் அலைமோதியது.

    இதுகுறித்து வேலூர் மாவட்ட மளிகை கடை வியாபாரிகள் கூறியதாவது;

    ஒவ்வொரு ஆண்டும் ஆயுத பூஜைக்கு 2 நாட்களுக்கு முன்பு படையலுக்கு தேவையான பொரி, வெள்ளை சிவப்பு கொண்டைக்கடலை, பொட்டுக்கடலை, அவல், நாட்டு சர்க்கரை நிலக்கடலை, விபூதி, சந்தனம், குங்குமம், சாம்பிராணி, ஊதிபத்தி, கற்பூரம், கடலை உருண்டை, எள் உருண்டை, அலங்கார தோரணங்கள் உள்ளிட் டவைகள் விற்பனைக்கு வைக்கப்படும்.

    நாளை ஆயுத பூஜை என்பதால், வெளி மாநிலங் களில் இருந்து பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்கி இருப்பு வைத்து ள்ளோம். வழக்கமாக வாங்கும் அளவில் இருந்து 30 சதவீதம் கூடுதலாக வாங்கி உள்ளோம். அந்த வகையில், சிவப்பு கொண் டைக்கடலை ரூ.80 முதல் ரூ.90 வரையும், வெள்ளை கொண்டை க்கடலை ரூ.130 முதல் ரூ.150-க்கும், நாட்டுச்சர்க்கரை ரூ.70 முதல் ரூ.100-க்கும் நிலக்கடலை ரூ.120, அவல் ரூ.50, பொரி ரூ.12 முதல் ரூ.15 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    அதேபோல், பழங்கள், பூசணிக்காய், ஸ்வீட் கடைகளில் இனிப்பு. காரம் ஆர்டர்கள் அதிகளவில் வந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    பூஜையில் முக்கிய இடத்தை வகிக்கும் பூக்கள் விலையும் உயர்ந்துள்ளது. வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் பூக்கள் விலை சற்று அதிகரித்து காணப்பட்டது.

    பெரிய சாமந்தி கிலோ ரூ.400,சிறிய சாமந்தி ரூ.150 முதல் ரூ. 300 வரையும், சிறிய பன்னீர் ரோஜாகிலோ ரூ.200 முதல் ரூ. 300 வரையும், மல்லி கிலோ ரூ.900 முதல் ரூ.1,000 வரையும், முல்லை கிலோ ரூ.700 -க்கும், கன காம்பரம் கிலோ ரூ.1,000 -க்கும், சாதி மல்லி கிலோ ரூ.300-க்கும் விற்பனையானது.

    மேலும் பூஜை முடிவில் திருஷ்டி கழிக்க பயன்படுத்தும் பூசணிக்காய், இதை தவிர ஆரஞ்சு, மாதுளை, ஆப்பிள், வாழைப்பழம் மற்றும் தேங்காய் அதிகமாக விற்பனை செய்யப்பட்டன. இந்த பொருட்களை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

    கடை வீதிகளுக்கு மக்கள் அதிக அளவில் வந்ததால் மாநகரில் வாகனப்போக்கு வரத்து அதிகமாக காணப்பட்டது.

    • ஜெயிலில் அடைத்தனர்
    • குளியல் அறையில் பிணமாக கிடந்தார்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அருகே ஒதியத்தூர் பகுதியை சேர்ந்தவர் வசந்தகுமார் (வயது 40) பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அஞ்சலி (38). இவர்களுக்கு 7 வயதில் மகன் உள்ளார்.

    குடிப்பழக்கத்திற்கு அடிமையான வசந்தகுமார் மனைவி அஞ்சலியின் நடத்தை மீது சந்தேகப்பட்டு தினந்தோறும் அவரை கொடுமை படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த 9-ந் தேதி அதிகாலை வீட்டில் உள்ள குளியல் அறையில் தூக்கில் தொங்கியவாறு அஞ்சலி பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து பள்ளிகொண்டா போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அஞ்சலி மீது ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் வசந்தகுமார் சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மனவேதனை அடைந்த அஞ்சலி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக வசந்தகுமார் மீது வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • பூமிக்கு அடியில் தோண்ட தோண்ட வந்தது
    • கீழே கொட்டி அழித்தனர்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த அல்லேரி மலைப்பகுதியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் அவர்கள் உத்தரவு பேரில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது அல்லேரி மலைப்பகுதியில் பூமிக்கு அடியில் புதைத்து வைத்திருந்த சின்டெக்ஸ் டேங்க், தண்ணீர் பேரல்கள் போன்றவகைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.

    மேலும் வாலிகள் மூலம் 2000 லிட்டர் சாராய ஊறல்களை தோண்டி எடுத்தனர். பின்னர் மேலே காண்டு வந்து கீழே கொட்டி அழித்தனர்.

    மேலும் சாராயத்தை காய்ச்ச பயன்படுத்திய பொருட்களையும் அழித்துவிட்டு பூமிக்கு அடியில் குழி தோண்டி சாராயத்தை காய்ச்ச பதுக்கி வைத்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உணவு செரிமானத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதால் இறந்தது கிடந்து
    • உடலை தீயிட்டு எரித்தனர்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த எல்லப்பன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் எத்திராஜ் இவருக்கு சொந்தமாக அதேபகுதியில் விவசாய நிலம் உள்ளது. இதில் கால்நடைகளுக்கு தேவையான தீவன பயிர்கள் வளர்த்து வருகிறார்.

    நேற்று எத்திராஜ் விவசாய நிலத்தை சுற்றிப் பார்ப்பதற்காக சென்றார். அப்போது நிலத்தில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.

    உடனே அங்கு சென்று பார்த்த போது சுமார் 2 வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளி மான் ஒன்று 2 நாட்களுக்கு முன்பாக இறந்து கிடந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து உடனடியாக ஒடுகத்தூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த வனச்சரக அலுவலர் இந்து தலைமையில் வனக்காப்பாளர்கள் சங்கீதா, வெங்கடேஷ் ஆகியோர் இறந்து கிடந்த மானை மீட்டு கால்நடை மருத்துவர்களின் உதவியுடன் பிரேத பரிசோதனை செய்து பார்த்ததில் உணவு செரிமானத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதால் மான் இறந்தது தெரியவந்தது.

    பின்னர் மானை வனத்துறையினர் கைப்பற்றி தீயிட்டு எரித்தனர்.

    • ரெயில் இயக்கியபோது என்ஜின் மீது சரக்கு பெட்டி மோதி ஒன்றோடு ஒன்று உரசியது.
    • ரெயில் 45 நிமிடங்கள் காலதாமதமாக புறப்பட்டு சென்றது.

    வேலூர்:

    பெங்களூருவில் இருந்து, அசாம் மாநிலத்திற்கு செல்லும் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று சென்னை நோக்கி புறப்பட்டது.

    ரெயில் என்ஜினுக்கு அடுத்து உள்ள பொருட்கள் இருப்பு வைக்கும் சரக்கு பெட்டியில் பழம் நிரப்பப்பட்ட பெட்டிகள் மற்றும் பழ மூட்டைகள் ஏற்றப்பட்டன.

    அளவுக்கு அதிகமாக லோடு ஏற்றுமதி செய்யப்பட்டதால், ரெயில் இயக்கியபோது என்ஜின் மீது சரக்கு பெட்டி மோதி ஒன்றோடு ஒன்று உரசியது. இதனால் ரெயில் மெதுவாக சென்றது.

    இதுகுறித்து எஞ்சின் டிரைவர் காட்பாடி ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

    அதன்படி இன்று அதிகாலை 3.30 மணிக்கு கவுகாத்தி எக்ஸ்பிரஸ் காட்பாடி ரெயில் நிலையத்திற்கு வந்ததும் நிறுத்தப்பட்டது.

    அப்போது தயார் நிலையில் இருந்த அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் சரக்கு பெட்டியில் இருந்த பழ மூட்டைகளை பாதி இறக்கினர்.

    இதனையடுத்து ரெயில் 45 நிமிடங்கள் காலதாமதமாக புறப்பட்டு சென்றது.

    இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். இந்த சம்பவம் காட்பாடி ரெயில் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பாதை கேட்டு பொதுமக்கள் போராட்டம்
    • உரிய ஆவணங்களை கொண்டு சமர்ப்பிக்க உத்தரவு

    வேலூர்:

    வேலூர், ஓட்டேரி, காந்தி நகரில் உள்ள சுடுகாட்டை ஒட்டி பூந்தோட்டம் குடியிருப்பு பகுதி உள்ளது. பூந்தோட்டத்தில் சுமார் 25-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்கள் சுடுகாட்டில் ஒரு பகுதியை சாலையாக பயன்படுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் சிலர் இன்று காலை சுடுகாட்டை சுற்றிலும் வேலி அமைக்க வந்தனர். இதனைக் கண்ட பூந்தோட்டம் பகுதி மக்கள் வேலி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த வேலூர் தாசில்தார் செந்தில்குமார் சம்பவ இடத்திற்கு வந்து இரு தரப்பினரையும் சமாதானம் செய்தார். மேலும் பூந்தோட்டம் பகுதியில் உள்ள பொதுமக்கள் உரிய ஆவணங்களை கொண்டு சமர்ப்பிக்க வேண்டுமென உத்தரவிட்டார்.

    இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்
    • போலீசார் ஜெயிலில் அடைத்தனர்

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சின்ன தொட்டாளத்தை சேர்ந்தவர் மோகன் (வயது 38). இவர் அந்த பகுதி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பெரியாங்குப்பம் புதுமணையை சேர்ந்த பிரபல ரவுடி அமெரிக்கா என்கிற ராஜேஷ் என்பவர் மது போதையில் வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் நடந்து சென்ற மோகனை வழிமறித்து ரூ.2 ஆயிரம் தரவேண்டும் என மிரட்டினார்.

    அதற்கு மோகன் தன்னிடம் பணம் இல்லை என மறுப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ராஜேஷ் மோகனை சரமாரியாக தாக்கி கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.

    இதேபோல் சின்ன தொட்டாளத்தை சேர்ந்த ராஜ்குமார் (வயது 38). என்வரிடமும் ராஜேஷ், அவரது நண்பர்கள் கதிர்வேல், ராதா, பிரபு ஆகியோர் ராஜ்குமாரிடம் பணத்தைக் கேட்டு தகராறு செய்து கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

    இது குறித்து மோகன், ராஜ்குமார் ஆகியோர் தனித்தனியாக மேல்பாடி போலீசில் புகார் செய்தனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜேசை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். மேலும் தலை மறைவாக உள்ளவர்களை தேடி வருகின்றனர்.

    ×