என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெல்டிங் வேலை செய்து வந்தார்"

    • பஸ்சை முந்தி செல்ல முயன்றபோது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு அடுத்த கீழ்கொத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகாந்த் (வயது 32). வெல்டிங் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் நேற்று இவர் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தபோது பின்னத்துரை காளியம்மன் கோவில் எதிரே தனியார் பஸ் ஒன்று ஒடுகத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது.

    இந்த பஸ்சை முந்தி செல்வதற்காக விஜயகாந்த் முயற்சித்தார். இதில் நிலை தடுமாறி பஸ்சின் அடியில் பைக் சிக்கிதால் தவறி கீழே விழுந்ததில் விஜயகாந்த் மீது பஸ் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விஜயகாந்த் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து, தனியார் பஸ் டிரைவர் வேப்பங்குப்பம் போலீசில் சரணடைந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு ெசய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    ×