என் மலர்
நீங்கள் தேடியது "தொடர்ந்து 3 நாட்கள் நடக்கிறது"
- சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவிலில் நடக்கிறது
- ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரியில் 800 ஆண்டுகள் பழமையான கெங்கையம்மன் கோவில் உள்ளது. கெங்கையம்மனிடம் ஊரை காக்கும் தெய்வமாக பக்தியுடன் வேண்டி பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
உள்ளூர், வெளியூர் வெளி மாவட்டம், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள பக்தர்கள் ஆண்டுக்கு ஒருமுறை அம்மனை தரிசிக்க தவறாமல் இங்கு வந்து அம்மனை தரிசிக்கின்றனர்.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் விஜயதசமி இலக்கிய விழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு 39-வது விஜயதசமி இலக்கிய விழா இன்று கோலாகலமாக துவங்கியது. இது தொடர்ந்து 3 நாட்கள் நடக்கிறது.
இதில் தினமும் மாலை 4 மணிக்கு முதல் நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு அடுத்த நிகழ்ச்சியும் நடைபெறும். இலக்கிய விழாக்களுக்கு சத்துவாச்சாரி செங்குந்த சமுதாய கமிட்டி செயலாளரும், விஜயதசமி இலக்கிய விழாக்குழு தலைவருமான எஸ்.எம்.சுந்தரம், செயலாளர் உலகநாதன், பொருளாளர் ஜெ.ஞானசேகரன், சத்துவாச்சாரி செங்குந்த சமுதாய கமிட்டி தலைவர் பி.எஸ்.சுகுமார், பொருளாளர் மார்க்கபந்து மற்றும் நகராட்சி முன்னாள் தலைவர் ஜி.முருகன், முன்னாள் துணைத்தலைவர் ஜானகிராமன் ஆகியோர் தலைமை தாங்கினர். விழாவை வேலூர் முன்னாள் எம். எல்.ஏ.சி.ஞானசேகரன் தொடங்கி வைத்தார்.
விழாவில் 'தெய்வம் நீ என்றும் உணர்' என்ற தலைப்பில் பாரதி பாஸ்கரின் தனி உரை நிகழ்ச்சியும், 'வாழ்வில் நிம்மதியும் மகிழ்வும் தருவது கனிந்த மனமே- நிறைந்த பணமே' என்ற தலைப்பில் கலைமாமணி திண்டுக்கல் ஐ.லியோனி கலந்து கொள்ளும் சிந்தனை பட்டிமன்றமும், 'அன்பே தவம்' என்ற தலைப்பில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரின் சொற்பொழிவும், டெலிவிஷன் புகழ் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி ஆகியோரின் மக்கள் இசை தெம்மாங்கு பாடல் நிகழ்ச்சியும், 'வாழ்வும் வாக்கும்' என்ற தலைப்பில் தொலைக்காட்சி புகழ் அருள் பிரகாசத்தின் தனி உரையும், நிறைவு நாள் நிகழ்ச்சியில் மக்கள் கவிஞர் அரு.நாகப்பனின் நிலையான பயனும் மகிழ்ச்சியும் அளிக் கும் பாடல்கள் எது? என்ற தலைப்பில் இன்னிசை கலந்த பாட்டு பட்டிமன்றமும் நடைபெறுகிறது.
சிறப்பு அழைப்பாளர்களாக கதிர் ஆனந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஏ.பி.நந்தகு மார்,ப.கார்த்திகேயன், மேயர் சுஜாதா ஆனந்தகுமார், 2-வது மண்டல குழு தலைவர் வீனஸ் நரேந்திரன், கவுன்சிலர்கள் ஆர்.பி.ஏழுமலை, சுமதி மனோகரன், நாராயணி மருத்துவமனை இயக்குனர் டாக்டர் என்.பாலாஜி உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை செங்குந்த சமுதாய மரபினர் மற்றும் விஜயதசமி இலக்கிய விழா குழு தலைவர் எஸ்.எம். சுந்தரம் உள்ளிட்ட விழா குழு வினர் செய்துள்ளனர்.






