என் மலர்
வேலூர்
- பாடலுக்கேற்ற நடனமாடி மக்களை மகிழ்வித்தனர்
- இன்னிசை கலந்த பாட்டு பட்டிமன்றம் நடக்கிறது
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவில் 39-ம் ஆண்டு விஜயதசமி இலக்கிய விழா நேற்று தொடங்கி இன்று மாலை பாட்டு பட்டிமன்றத்துடன் நிறைவடைகிறது.
முதல் நாளான நேற்று மாலை மண்ணுக்கேற்ற ராகம் என்ற தலைப்பில் மக்களிசைக்குழுவினரின் நாட்டுப்புற, தெம்மாங்கு பாடல், இசை நிகழ்ச்சி நடந்தது.
கெங்கையம்மன் கோவில் திடலில் நடந்த இசை நிகழ்ச்சிக்கு விஜயதசமி இலக்கிய விழாக்குழு செயலாளரும், ராணிப் பேட்டை பொறியியல் கல்லூரி இயக்குனர் மற்றும் திருஅருள் குழும நிறுவன ருமான உலகநாதன் தலைமை தாங்கினார்.
சத்துவாச்சாரி செங்குந்த சமுதாய கமிட்டி செயலாளரும், விஜயதசமி இலக்கிய விழாக் குழு தலைவரும், எஸ்.எம் எஸ் கிராண்ட் ஒட்டல் இன் உரிமையாளருமான எஸ். எம்.சுந்தரம் வரவேற்றார்.
சத்துவாச்சாரி செங்குந்த சமுதாய கமிட்டி பொருளாளர் டி.எம். மார்கபந்து, சத்துவாச்சாரி செங்குந்த சமுதாய கமிட்டி தலைவர் பி.எஸ். சுகுமார், விஜயதசமி இலக்கிய விழாக்குழு பொருளாளர் ஞானசேகரன், எஸ்.எம்.எஸ். கணேசன், யு.அருளரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் எம்.எல்.ஏ,ஞான சேகரன், மாநகர மேயர் சுஜாதா, மண்டலக்குழு தலைவர் நரேந்திரன், கவுன்சிலர் சுமதி, அருணோதயம், வேலூர் மேற்கு மாவட்ட தெ.செ.ம.சங்க தலைவர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
சிறப்பு விருந்தினராக ஸ்ரீபுரம் நாராயணி மருத்துவமனை இயக்குனர் மற்றும் அறங்காவலர் என். பாலாஜி கலந்து கொண்டு மக்களிசை நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து மண்ணுக்கேற்ற ராகம் என்ற தலைப்பில் நடந்த நாட்டுப்புற, தெம்மாங்கு இன்னிசை நிகழ்ச்சியில் பிரபல திரைப்பட பின்னணி பாடகர் செந்தில்கணேஷ், பின்னணி பாடகி ராஜலெட்சுமி குழுவினர் நாட்டுப்புற பக்தி பாடல்களையும், நாட்டுப்புற, தெம் மாங்கு பாடல்களையும் அசத்தி பார்வையாளர்களை கவர்ந்தனர். மேலும் இதில் தத்ரூபமாக அம்மன், முருகன், விநாயகர் உருவம் தாங்கியவர்கள் பாடலுக்கேற்ற நடனமாடி மக்களை மகிழ்வித்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவில் விஜயதசமி இலக்கிய விழாக்குழு மற்றும் செங்குந்த சமுதாய கமிட்டியினர் செய்திருந்தனர். இலக்கிய விழாவில் தொடர்ந்து இன்று 2-வது நாளாக பிரபல மக்கள் கவிஞர் அரு. நாகப்பன் தலைமையில் இன்னிசை கலந்த பாட்டு பட்டிமன்றம் நடக்கிறது.
- அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
வேலூர்:
வேலூர் முள்ளிப்பாளையம் கே.கே.நகரை சேர்ந்தவர் விஜய் (வயது 24), டெய்லர். இவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவலறிந்த வேலூர் வடக்கு போலீசார் விஜய் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து விஜய் தாயார் குணாவதி கொடுத்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- ரூ.3.50 கோடி ஒதுக்கீடு
- டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க நடவடிக்கை
வேலூர்:
வேலூர் நகரில் நாளுக்கு நாள் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு குறுகிய சாலைகளும் ஒரு காரணமாக அமைகிறது. போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் வேலூர் பழைய பைபாஸ் சாலை ரூ.3 கோடியே 50 லட்சத்துக்கு விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வேலூர் பழைய பைபாஸ் சாலையை அகலப்படுத்த ரூ.3 கோடியே 50 லட்சம் மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கி உள்ளது. இப்பணிகள் டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனர்.
- சில வாரங்களுக்கு முன்பு கிலோ ரூ.20-க்கு விற்கப்பட்டது
- தொடர் விசேஷநாட்கள், முகூர்த்ததினம் என்பதால் காய்கறிகள் விலை உயர்ந்து
வேலூர்:
வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வேலூர் நேதாஜி காய்கறி மார்க்கெட்டுக்கு ஆந்திரா, டெல்லி, புனே உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வெங்காயம், உருளை உள்ளிட்ட காய்கறிகள் கொண்டு வந்து மொத்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
சமையலில் முக்கிய அங்கம் வகிக்கும் தக்காளி சில வாரங்களுக்கு முன்பு விலை அதிகமாக இருந்தது. இந்த விலை உயர்வால் குடும்ப தலைவிகள் கவலையடைந்தனர். அதன் காரணமாக தக்காளியை ரேசன்கடைகளில் மலிவு விலைக்கு விற்கும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது வெங்காயத்தின் விலை அதிகரித்து வருகிறது.
இது குடும்ப தலைவிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கிலோ ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனை செய்யப்பட்ட வெங்காயம் தற்போது விலை உயர்ந்து ரூ.65 முதல் ரூ.70 வரை தரத்துக்கு ஏற்ற வகையில் நேதாஜி மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது.
வியாபாரிகள் கூறுகையில்:-
தொடர் விசேஷநாட்கள், முகூர்த்ததினம் என்பதால் காய்கறிகள் விலை உயர்ந்து இருந்தது. தற்போது விலை குறைய தொடங்கி உள்ளது. எனினும் வெங்காயத்தின் வரத்து குறைவால் விலை அதிகரித்துள்ளது. ஒரு கிலோ சின்னவெங்காயம் ரூ.80 முதல் ரூ.100 வரையிலும், தக்காளி ரூ.20 முதல் ரூ.25 வரையிலும், கத்தரிக்காய் ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதில் இருந்து சற்று கூடுதல் விலைக்கு சில்லறை விலையில் வியாபாரிகள் வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளை விற்பனை செய்யப்படுகிறது என்றனர்.
- யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என அடையாளம் தெரியவில்லை
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூரை அடுத்த செதுவாலையில் பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையை சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கடக்கமுயன்றார்.
அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த முதியவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உடல்நிலை நிலை சரியில்லாததால் விரக்தி
- போலீசார் விசாரணை
வேலூர்:
சத்துவாச்சாரி, சாவடி தெருவை சேர்ந்தவர் கருணாமூர்த்தி (வயது 70). இவரது மனைவிக்கு பித்தப்பை பிரச்சினை சம்பந்தமாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கடந்த 3 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் கருணாமூர்த்தி கடந்த 15-ந் தேதி வீட்டில் உள்ள கத்திரிக்கோலை எடுத்து வயிற்றில் குத்திக் கொண்டார். இதில் படுகாயம் அடைந்த கருணாமூர்த்தி ரத்த வெள்ளத்தில் துடி துடித்தார்.
அவரது உறவினர்கள் கருணாமூர்த்தியை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி கருணாமூர்த்தி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சத்துவாச்சாரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காட்பாடி ரெயில்வே போலீசார் விழிப்புணர்வு
- புகைப்ப டங்களை காட்டி விளக்கினர்
வேலூர்:
காட்பாடி அருகே உள்ள பள்ளிக்குப்பம் கிராமத்தில் சிவகுமார் என்பவர் தண்டவாளத்தை கடக்க முயன்றார்.
அப்போது அவர் மீது ரெயில் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதனை தொடர்ந்து தண்டவாள பகுதிகளில் பொதுமக்கள் செல்வதை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த ரெயில்வே கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வனிதா உத்தரவிட்டார்.
அதன் பேரில் காட்பாடி ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா, சப்-இன்ஸ்பெக்டர்கள் சுமதி, வசந்தி தனிப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் பத்மராஜா ஆகியோர் தலைமையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பள்ளிக்குப்பம் மற்றும் ஆவரங்காடு கிராமங்களில் விழிப்புணர்வு பேனர்கள் மற்றும் ரெயில் தண்டவா ளங்களை கடந்த போது அடிபட்டு இறந்தவர்கள் புகைப்ப டங்களை காட்டி போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அருகாமையில் உள்ள நிலத்தில் வேலை செய்யும் விவசாயிகள் தெரியாமல் ஆடு மாடுகளை தண்டவா ளப்பாதையில் மேய்ப்பது குற்றம்.
தண்டவாளத்தில் விளையாட்டு தனமாக குழந்தைகள் கற்களை வைப்பது குற்றம் என்பதை வலியுறுத்தி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- உரிமையாளர் மீது போலீசார் வழக்கு பதிவு
- அதிகாரிகள் எச்சரிக்கை
வேலூர்:
வேலூர் மாநகராட்சி பகுதியில் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், சத்துவாச்சாரி, காகிதப்பட்டறை, அண்ணா சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் மாடுகள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றி திரிகின்றன.
இதனால் அந்த வழியாக சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் மாடுகள் மீது வாகனங்கள் மோதி அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.
மேலும் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களை மாடுகள் முட்டித் தள்ளுவதால் காயமடைந்து வருகின்றனர். சாலையில் சுற்றி திரியும் மாடுகளை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு பல்வேறு புகார்கள் அனுப்பி வந்தனர்.
பொதுமக்களின் புகாரை அடுத்து மேயர் சுஜாதா உத்தரவின் பெயரில் இன்று மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களிலும் சாலையில் சுற்றித்திரிந்த 16 மாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்தனர்.
பிடிக்கப்பட்ட மாடுகளுக்கு தலா ரூ 1000 அபராதமும், 3 மாடுகளின் உரிமையாளர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதுகுறித்து மேயர் சுஜாதா கூறுகையில், மாநகர சாலைகளில் பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித் திரியும் மாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் இன்று பிடித்தனர்.
பிடிக்கப்பட்ட மாடுகள் கோ சாலையில் ஒப்படை க்கப்படும். அபராத தொகை கட்டியவுடன் மாடுகள் விடுவிக்கப்படும். மாட்டின் உரிமையாளர்கள் யாரும் சாலைகளில் மாடுகளை விடக்கூடாது.
இனி சாலையில் சுற்றித் திரியும் மாடுகள் தொடர்ந்து பிடிக்கப்பட்டு மாட்டின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
- அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியல் பிரேத பரிசோதனை
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
வேலூர்:
வேலூர் மாவட்டம், கீழ்கொத்தூர், கண்ணப்ப கவுண்டர் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் விஜயகாந்த் (வயது 32). இவர் நேற்று முன்தினம் பின்னத்தூரில் இருந்து ஒடுக்த்தூர் செல்லும் சாலையில் பைக்கில் சென்று கொண்டு இருந்தார்.
அங்குள்ள காளியம்மன் கோவில் அருகே சென்றபோது பின்னால் வந்த தனியார் பஸ் பைக் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்ட விஜயகாந்த் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த வேப்பங்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விஜயகாந்த் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியல் பிரேத பரிசோதனை
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
வேலூர்:
வேலூர் மாவட்டம், கீழ்கொத்தூர், கண்ணப்ப கவுண்டர் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் விஜயகாந்த் (வயது 32). இவர் நேற்று முன்தினம் பின்னத்தூரில் இருந்து ஒடுக்த்தூர் செல்லும் சாலையில் பைக்கில் சென்று கொண்டு இருந்தார்.
அங்குள்ள காளியம்மன் கோவில் அருகே சென்றபோது பின்னால் வந்த தனியார் பஸ் பைக் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்ட விஜயகாந்த் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த வேப்பங்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விஜயகாந்த் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கார்ணாம்பட்டு கோவிலை சீரமைக்க கோரிக்கை
- மக்கள் வழிபாட்டுக்கு கொண்டு வர வேண்டும்
வேலூர்:
காட்பாடி அருகே உள்ள கார்ணாம்பட்டு கிராமத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கைலாசநாதர் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவில் சிதிலமடைந்து காணப்படுகிறது.
அந்த பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து நிதி திரட்டி கோவிலில் பூஜை நடத்தி வருகின்றனர். கோவிலை சீரமைக்க வேண்டும் மக்கள் வழிபாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என இந்து முன்னணி சார்பில் பலமுறை மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கோவிலை சீரமைக்க வலியுறுத்தி கார்ணாம்பட்டில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். கோட்ட தலைவர் மகேஷ் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் ராமன் வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இது குறித்து கோட்டதலைவர் மகேஷ் கூறியதாவது:-
கைலாசநாதர் கோவில் 500 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான கற்கோவில் ஆகும். இந்து சமய அறநிலையத்துறை முறையாக பாதுகாக்க வில்லை.
கோவிலுக்கு சொந்தமாக ஏராளமான ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இருப்பினும் கோவிலில் நாள்தோறும் பூஜைகள் நடத்த கூட இந்து சமய அறநிலைத்துறை முயற்சிக்கவில்லை.
சிவ பக்தர்கள் நாள்தோறும் வழிபாடு நடத்துகின்றனர். கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தி முறையாக பராமரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம். நிதி ஒதுக்கியதாக கூறினர்.
ஆனால் இன்றுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த கோவிலை சீரமைக்க உடனடியாக பணிகளை தொடங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய விண்ணப்பிக்கலாம்
- ஜனவரி மாதம் 5-ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தேர்தல் அதிகாரிகள் தகவல்
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் இன்று வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் வெளியிட்டார்.
வாக்காளர் பட்டியல்
வேலூர் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதி களில் 6 லட்சத்தி 8639 ஆண் வாக்காளர்கள், 6 லட்சத்து 48 ஆயிரத்து 515 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 162 பேர் என மொத்தம் 12 லட்சத்து 57 ஆயிரத்து 316 வாக்காளர்கள் உள்ளனர்.
மாவட்டத்தில் மொத்தம் 1303 வாக்குச்சாவடிகள் 656 வாக்குச்சாவடி மையங்களில் அமைந்துள்ளன. அனைத்து வாக்குச்சாவடி மையங்கள், வேலூர் மாநகராட்சி, தாலுகா அலுவலகங்கள், மற்றும் நகராட்சி அலுவலகங்களில் வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பம்
பொதுமக்கள் இன்று முதல் வருகிற 9, 12, 23-ம் தேதி வரை படிவம் 6, 6 பி, 7,8, ஆகியவற்றில் விண்ணப்பித்து கொள்ளலாம்.
பொதுமக்கள் பெயர் சேர்க்க, நீக்கம் செய்,ய திருத்தம் செய்ய விண்ணப்பங்கள் அனைத்து வாக்குச்சாவடி மையங்கள், வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் வழங்கலாம்.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி வருகிற 4 மற்றும் 5-ந் தேதிகளிலும் 18 மற்றும் 19-ந் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்காத வாக்காளர்கள் உடனடியாக படிவம் 6 பி- ல் ஆதார் விவரத்தினை பதிவு செய்து வழங்கலாம்.
இந்த சுருக்க திருத்த பணிகள் முடிந்தவுடன் ஜனவரி மாதம் 5-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சட்ட மன்ற தொகுதியின் எண் மற்றும் பெயர் வருமாறு:-
காட்பாடி: ஆண்-116383, பெண்-124750, மூன்றாம் பாலினம்-34, மொத்தம்-241167
வேலூர்: ஆண்-117441, பெண்-126691, மூன்றாம் பாலினம்-44, மொத்தம்-244176
அணைக்கட்டு: ஆண்-122842, பெண்-130334, மூன்றாம் பாலினம்-33, மொத்தம்-244176
கே.வி.குப்பம் (தனி): ஆண்-111478, பெண்-116402, மூன்றாம் பாலினம்-8, மொத்தம்-227888
குடியாத்தம் (தனி): ஆண்-140495, பெண்-150338, மூன்றாம் பாலினம்-43, மொத்தம்-290876
மொத்த ஆண்கள்-608639, பெண்கள்-648515, மூன்றாம் பாலினம்-162, மொத்தம்-1257316






