என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது"

    • ரூ.3.50 கோடி ஒதுக்கீடு
    • டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க நடவடிக்கை

    வேலூர்:

    வேலூர் நகரில் நாளுக்கு நாள் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு குறுகிய சாலைகளும் ஒரு காரணமாக அமைகிறது. போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் வேலூர் பழைய பைபாஸ் சாலை ரூ.3 கோடியே 50 லட்சத்துக்கு விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வேலூர் பழைய பைபாஸ் சாலையை அகலப்படுத்த ரூ.3 கோடியே 50 லட்சம் மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கி உள்ளது. இப்பணிகள் டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனர்.

    ×