என் மலர்
நீங்கள் தேடியது "வெங்காயத்தின் வரத்து குறைவால் விலை அதிகரித்துள்ளது"
- சில வாரங்களுக்கு முன்பு கிலோ ரூ.20-க்கு விற்கப்பட்டது
- தொடர் விசேஷநாட்கள், முகூர்த்ததினம் என்பதால் காய்கறிகள் விலை உயர்ந்து
வேலூர்:
வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வேலூர் நேதாஜி காய்கறி மார்க்கெட்டுக்கு ஆந்திரா, டெல்லி, புனே உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வெங்காயம், உருளை உள்ளிட்ட காய்கறிகள் கொண்டு வந்து மொத்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
சமையலில் முக்கிய அங்கம் வகிக்கும் தக்காளி சில வாரங்களுக்கு முன்பு விலை அதிகமாக இருந்தது. இந்த விலை உயர்வால் குடும்ப தலைவிகள் கவலையடைந்தனர். அதன் காரணமாக தக்காளியை ரேசன்கடைகளில் மலிவு விலைக்கு விற்கும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது வெங்காயத்தின் விலை அதிகரித்து வருகிறது.
இது குடும்ப தலைவிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கிலோ ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனை செய்யப்பட்ட வெங்காயம் தற்போது விலை உயர்ந்து ரூ.65 முதல் ரூ.70 வரை தரத்துக்கு ஏற்ற வகையில் நேதாஜி மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது.
வியாபாரிகள் கூறுகையில்:-
தொடர் விசேஷநாட்கள், முகூர்த்ததினம் என்பதால் காய்கறிகள் விலை உயர்ந்து இருந்தது. தற்போது விலை குறைய தொடங்கி உள்ளது. எனினும் வெங்காயத்தின் வரத்து குறைவால் விலை அதிகரித்துள்ளது. ஒரு கிலோ சின்னவெங்காயம் ரூ.80 முதல் ரூ.100 வரையிலும், தக்காளி ரூ.20 முதல் ரூ.25 வரையிலும், கத்தரிக்காய் ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதில் இருந்து சற்று கூடுதல் விலைக்கு சில்லறை விலையில் வியாபாரிகள் வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளை விற்பனை செய்யப்படுகிறது என்றனர்.






