வயிற்றில் கத்திரிக்கோலால் குத்தி முதியவர் தற்கொலை

உடல்நிலை நிலை சரியில்லாததால் விரக்தி போலீசார் விசாரணை
வயிற்றில் கத்திரிக்கோலால் குத்தி முதியவர் தற்கொலை
Published on

வேலூர்:

சத்துவாச்சாரி, சாவடி தெருவை சேர்ந்தவர் கருணாமூர்த்தி (வயது 70). இவரது மனைவிக்கு பித்தப்பை பிரச்சினை சம்பந்தமாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கடந்த 3 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் கருணாமூர்த்தி கடந்த 15-ந் தேதி வீட்டில் உள்ள கத்திரிக்கோலை எடுத்து வயிற்றில் குத்திக் கொண்டார். இதில் படுகாயம் அடைந்த கருணாமூர்த்தி ரத்த வெள்ளத்தில் துடி துடித்தார்.

அவரது உறவினர்கள் கருணாமூர்த்தியை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி கருணாமூர்த்தி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து சத்துவாச்சாரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com