என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆயுதபூஜையொட்டி 4 நாட்களில் அமிர்தி பூங்காவுக்கு 2,700 பேர் வருகை
- ரூ.90 ஆயிரம் வசூலானது
- வனச்சரக அலுவலர் தகவல்
வேலூர்:
வேலூரிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது அமிர்தி வன உயிரியல் பூங்கா.
ஜவ்வாதுமலைத் தொடரில் சிறிய விலங்குகள் சரணாலயமாக பராமரிக்கப்பட்டுவரும் இந்த அமிர்தி பூங்காவில் மான்கள், கீரிப்பிள்ளைகள், குள்ளநரிகள், குரங்குகள், சிவப்புத் தலை கிளிகள், காதல் பறவைகள், ஆமைகள், மயில்கள், முதலைகள், காட்டுப் பூனைகள், கழுகுகள், வாத்துகள், புறாக்கள், காட்டுக் கிளிகள், முயல்கள், மலைப்பாம்புகள் உள்ளன.
அடர்ந்துவளர்ந்த மரங்களில் பூத்துக்குலுங்கும் பூக்களை ரசிக்கலாம். அழகான நீர்வீழ்ச்சியும் உள்ளது.
மழைக்காலங்களில் மட்டுமே நீர் ஆர்ப்பரித்துக் கொட்டும். மலையேற்றத்திலிருந்து, நீர்வீழ்ச்சியைக் காணலாம். நீர்வீழ்ச்சியில் குளிக்க இப்போது அனுமதியில்லை. புதை மணல் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை மட்டும், அமிர்தி பூங்காவுக்கு விடுமுறை. அன்று ஒரு நாள், உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகள், பறவைகள் பராமரிக்கப்படுகின்றன. ஞாயிறு உட்பட மற்ற அனைத்து நாள்களும், பூங்கா திறந்திருக்கும்.
இந்நிலையில் விடுமுறை நாளான செவ்வாய்க்கிழமை ஆயுத பூஜையொட்டி பூங்கா திறந்திருக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. காலை முதல் ஏராளமானோர் குடும்பத்துடன் குவிந்தனர்.
கடந்த 21-ந் தேதி 344 பார்வையாளர்களும், அன்றைய தினம் ரூ.12,610-ம், 22-ந் தேதி 791 பார்வையாளர்களும், ரூ.28,110-ம், 23-ந் தேதி 845 பார்வையாளர்களும், ரூ.29,350-ம், நேற்று 752 பார்வையாளர்களும், ரூ. 26,020 என மொத்தம் கடந்த 4 நாட்களில் 2,732 பார்வையாளர்களும், அதன்மூலம் ரூ.96 ஆயிரத்து 90 ரூபாய் வசூலாகி உள்ளதாக அமிர்தி வனச்சரக அலுவலர் குணசேகரன் தெரிவித்தார்.






