என் மலர்
வேலூர்
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான ‘நீட்’ தேர்வு நாடு முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நீட் தேர்வு பயத்தால் தனுஷ் என்ற மாணவரும், கனிமொழி என்ற மாணவியும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற 6,9-ந்தேதிகளில் 2 கட்டமாக நடக்கிறது.
வேலூர் , திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் சில வாரங்களுக்கு முன்னர் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதில் வேலூர் மாவட்டத்தை பொறுத்தவரை, 7 பஞ்சாயத்து யூனியன்களில் 14 மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள், 138 பஞ்சாயத்து யூனியன் வார்டுகள், 247 கிராம பஞ்சாயத்துகள், 2 ஆயிரத்து 79 வார்டு உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் நடக்க உள்ளது.
வேலூர் மாவட்ட வாக்காளர்கள் ஓட்டுப்போட வசதியாக 1,331 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஓட்டுப்பதிவுக்கு பின்னர், ஓட்டு எண்ணிக்கை மையங்களாக 7 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, துறைரீதியான ஆய்வும் நடந்து முடிந்துள்ளது.
இதைத் தொடர்ந்து எந்தெந்த வாக்குச்சாவடிகளில் பதற்றமானவை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
இதில் மொத்தம் 282 ஓட்டுச்சாவடிகள் பதட்டம் நிறைந்தவைகளாக கண்டறியப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.
உள்ளாட்சி தேர்தலை பொறுத்தமட்டில் ஓட்டுச் சீட்டுகள்தான் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக ஒரு வாக்குச்சாவடியில் இருக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, சிறிய, நடுத்தரம், பெரிய என்ற அளவிலான ஓட்டுப் பெட்டிகள் பயன்படுத்தப்பட உள்ளது.
வேலூரை அடுத்த கணியம்பாடி அருகே உள்ள சலமநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் பச்சையப்பன். இவருடைய மகன் வெங்கடேசன் (வயது 17). அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 11-ந் தேதி வெங்கடேசனுக்கு பிறந்தநாள். இதனால் அன்று இரவு 8.30 மணிக்கு அவரது நண்பர்கள் இருவருடன் கண்ணமங்கலத்திற்கு சென்று கேக் வாங்கினார். பின்னர் அங்கிருந்து 3 பேரும் மீண்டும் ஒரே மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பினர். மோட்டார் சைக்கிளை வெங்கடேசன் ஓட்டி வந்தார். வேலூர் மெயின் ரோட்டில் பெருமாள்பேட்டை என்ற இடத்தில் வந்தபோது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த புளியமரத்தில் மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட வெங்கடேசன் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
உடன் வந்த அவரது நண்பர் 2 பேரும் படுகாயம் அடைந்து தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து வேலூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்தநாளில் கேக் வாங்க சென்ற மாணவன் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
தர்மபுரி மாவட்டம் பொன்னகரம் பகுதியை சேர்ந்தவர் சின்ன குட்டி (வயது 65). இவர் கொலை வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் சின்னகுட்டிக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து கடந்த 2019-ம் ஆண்டு வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார். சின்னகுட்டி மூச்சுத் திணறல் உள்ளிட்ட பல்வேறு உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். அதற்காக அவர் ஜெயிலில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில் அவருக்கு கடந்த 4-ந் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதையடுத்து உடனடியாக ஜெயிலில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு முதற்கட்டமாக அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. சின்ன குட்டிக்கு தொடர்ந்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். சின்னகுட்டி உயிரிழந்தது குறித்து அவரின் குடும்பத்தினருக்கு ஜெயில்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து ஜெயில் அதிகாரிகள் பாகாயம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
வேலூர் ஒருகிணைந்த மாவட்டத்தில் பல இடங்களில் குழந்தை திருமணம் நடக்க உள்ளதாக மாவட்ட சமூகநலத்துறை அலுவலர்களுக்கு கடந்த 2 நாட்களாக தொடர்ந்து தகவல் வந்தது.
இதையடுத்து மாவட்ட சமூக நல அலுவலர் முருகேஸ்வரி உத்தரவின்பேரில், சைல்டு லைன் அமைப்பினர், சமூக நல அலுவலர்கள் மற்றும் போலீசார் இணைந்து தகவல் வந்த இடங்களுக்குச் சென்று விசாரணை நடத்தினர்.
இதில் காட்பாடியை சேர்ந்த 16 வயது சிறுமி 11-ம் வகுப்பு படிக்கிறார். இவருக்கும் கே.வி. குப்பம் பகுதியை சேர்ந்த தினகரன் என்ற வாலிபருக்கும் காட்பாடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடக்க இருந்தது.
அதை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதேபோல் வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமிக்கும், வேலூர் அப்துல்லாபுரத்தை சேர்ந்த ஸ்டீபன் என்பவருக்கும் நேற்று திருமணம் நடக்க இருந்தது. அதை சமூக நலத்துறை அலுவலர்கள் தடுத்து நிறுத்தி சிறுமியை மீட்டனர்.
இதன்படி கடந்த 2 நாட்களில் வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் வேலூர் 3,திருப்பத்தூர் 8,ராணிப்பேட்டை 4 என மொத்தம் 15 இடங்களில் நடக்கவிருந்த குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டது என்றும் சம்பந்தப்பட்ட சிறுமிகளை மீட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் லோகேஸ்வரன். சென்னையில் உள்ள ஒரு ஐஸ்கிரீம் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
இவருடைய மனைவி மீனாட்சி. இவர்களது மகன் ஜஸ்வந்த் (வயது 8). மகள் ஹரிபிரிதா (6). கள்ளூர் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்தனர். மீனாட்சியின் தாய்வீடு திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள கடாம்பூர் கிராமத்தில் உள்ளது.
விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு மீனாட்சி தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் ஊத்தங்கரையில் இருந்து குடும்பத்தோடு கடாம்பூர் கிராமத்திற்கு வந்தார்.
நேற்று காலை லோகேஸ்வரன் தனது 2 குழந்தைகளுடன் கைலாச கிரிமலைக்கு சென்றார். அங்குள்ள சுப்பிரமணியசாமி கோவில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்றார். அந்த நேரத்தில் அவருடன் சென்றிருந்த ஜஸ்வந்த், ஹரிப்ரியா இருவரும் தவறி குளத்தில் விழுந்தனர்.
நீச்சல் தெரியாததால் குளத்தில் இருவரும் தத்தளித்தனர். அவர்களை லோகேஸ்வரன் காப்பாற்ற முயன்றார். ஆனால் முடியவில்லை. குழந்தைகள் இருவரும் தண்ணீரில் மூழ்கி இறந்தனர்.
உமாராபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தைகளின் உடல்களை மீட்டு ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இன்று காலையில் ஆஸ்பத்திரியில் இருந்த லோகேஸ்வரன் திடீரென பூச்சி மருந்தை எடுத்து குடித்தார். அங்கு அவருக்கு உடனடியாக சிகிச்சை அளித்தனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். குழந்தைகள் இறந்த துக்கம் தாங்காமல் தந்தை இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேலூர்:
வேலூர் காட்பாடி தாலுகா அலுவலகம் முன்பாக கிராம நிர்வாக அலுவலர்கள் கட்டாய பணி இடமாற்றத்தை கண்டித்து நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு காட்பாடி வட்ட செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் அன்பரசன் செயலாளர் வெங்கடேசன் வட்ட துணைத் தலைவர் ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் காட்பாடி கோட்டத்தில் உள்ள 4 கிராம நிர்வாக அலுவலர்கள் குடியாத்தம் கோட்டத்திற்கு கட்டாய பணி இடம் மாற்றம் செய்த மாவட்ட வருவாய் அலுவலரை கண்டித்து கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் விநாயகம் காட்பாடி கிராம நிர்வாக அலுவலர் கோபி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த நெல்லூர்பேட்டை ஊராட்சி லிங்குன்றம் ஜாப்ராபேட்டை பகுதியை சேர்ந்தவர் விஜயன் (வயது 40) கட்டிட மேஸ்திரி இவருக்கும் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த தாஜ்புரா பகுதியைச் சேர்ந்த பிரியா வயது 38 என்பவருக்கும் 17 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு பிளஸ் 1 படிக்கும் மோகன் குமார் வயது 16 என்ற மகனும் 5 வகுப்பு படிக்கும் மாதவி வயது 10 என்ற மகளும் உள்ளனர்.
விஜயனுக்கும் அவரது மனைவி பிரியாவிற்க்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு 10.30 மணி அளவில் வீட்டிற்கு பக்கத்தில் உள்ள காலி இடத்தில் எரிந்த நிலையில் பிரியா பிணமாக கிடந்தார். வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அவரது மகன் மதன்குமார், மகள் மாதவி ஆகியோருக்கும் தெரியவில்லை என கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து அக்கிராமத்தைச் சேர்ந்த சிலர் உடனடியாக பிரியாவின் பெற்றோர் வீடான ஆற்காடு அடுத்த தாஜ்புரா கிராமத்திற்கு தெரிவித்தனர் அதிர்ச்சி அடைந்த பிரியாவின் குடும்பத்தினர் உடனடியாக அங்கிருந்து இரவே கிளம்பி வந்தனர். அவரது அண்ணன் சுரேஷ் குடியாத்தம் டவுன் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி உள்ளிட்ட போலீசார் அதிகாலை 4 மணி அளவில் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். பிரியாவின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரியா தனக்குத்தானே மண்ணெண்ணெயை ஊற்றி தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்று பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பிரியாவின் கணவர் விஜயனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த ஊனை பள்ளத்தூரை சேர்ந்தவர் குருநாதன் (வயது 35). என்ஜினீயர். இவரது மனைவி நந்தினி. இவர் வேலூரில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார். தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். குருநாதன் சத்துவாச்சாரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை செய்து வந்தார்.
இன்று காலை சத்துவாச்சாரியில் இருந்து வேலூர் நோக்கி பைக்கில் வந்து கொண்டிருந்தார். காகிதப்பட்டறை வேலைவாய்ப்பு அலுவலகம் அருகே வந்த போது குறுக்கே நாய் புகுந்தது. இதனால் நிலை தடுமாறிய குருநாதன் பைக்கில் இருந்து கீழே விழுந்தார்.
அப்போது வேலூரிலிருந்து சத்துவாச்சாரி நோக்கி கியாஸ் சிலிண்டர் ஏற்றி வந்த வேன் குருநாதன் தலைமீது ஏறி இறங்கியது. இதில் குருநாதன் அணிந்திருந்த ஹெல்மெட் நசுங்கி படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் குருநாதனை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி குருநாதன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து குருநாதன் மீது மோதிய வேனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேன் மோதி என்ஜினீயர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் வேலப்பாடி பூந்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ரமாபாய் (வயது 54). இவரது உறவினர் வீட்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சி காட்பாடி காந்திநகரில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது.
வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று இரவு ரமாபாய் பஸ்சிலிருந்து இறங்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.
அணைக்கட்டு நந்தகுமார் எம்.எல்.ஏ. வீட்டின் அருகே நடந்து சென்றபோது பைக்கில் அவரை பின்தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் ரமாபாய் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு வேகமாக பைக்கில் தப்பிச் சென்றனர். சங்கிலி பிடித்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
ரமாபாய் திருடன் திருடன் என கூச்சலிட்டார். அதற்குள் செயின் பறித்த வாலிபர் தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்து ரமாபாய் விருதம்பட்டு போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்குள்ள வீடுகளில் முன்பாக பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வு செய்து வருகின்றனர். எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள எம்.எல்.ஏ. வீட்டின் அருகேயே செயினை பறித்துச் சென்ற சம்பவம் காட்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காட்பாடி பகுதியில் தொடர்ந்து செயின் பறிப்பு திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவதால் அப்பகுதி பெண்கள் தெருவில் தனியாக நடந்து செல்ல அச்சப்படுகின்றனர்.
எனவே போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி செயின் பறிப்பு சம்பவங்களை தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.
வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்தவர் 17 வயது பிளஸ்-2 மாணவி. இவர் கடந்த மாதம் 30-ந்தேதி திடீரென மாயமானார். அதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் மாணவியை கண்டுபிடிக்கவில்லை.
இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில் மாணவிக்கும், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா மேல்பட்டியை சேர்ந்த ஆம்னி பஸ் கிளீனர் கவுதம் (21) என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேஸ் புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி இருவரும் செல்போனில் பேசி வந்தனர். மேலும் கவுதம் பெங்களூருக்கு மாணவியை கடத்தி சென்றது தெரியவந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் கவுதம் மற்றும் மாணவியுடன் நின்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அங்கு சென்ற போலீசார் 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அதில், கவுதம் கட்டாயப்படுத்தி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்த போலீசார் கைது செய்தனர். பின்னர் வேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி குடியாத்தம் கிளை ஜெயிலில் அடைக்கப்பட்டார்.






