search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூர் மாவட்டம்
    X
    வேலூர் மாவட்டம்

    வேலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் 282 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை

    வேலூர் மாவட்ட வாக்காளர்கள் ஓட்டுப்போட வசதியாக 1,331 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
    வேலூர்:

    தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற 6,9-ந்தேதிகளில் 2 கட்டமாக நடக்கிறது.

    வேலூர் , திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் சில வாரங்களுக்கு முன்னர் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

    இதில் வேலூர் மாவட்டத்தை பொறுத்தவரை, 7 பஞ்சாயத்து யூனியன்களில் 14 மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள், 138 பஞ்சாயத்து யூனியன் வார்டுகள், 247 கிராம பஞ்சாயத்துகள், 2 ஆயிரத்து 79 வார்டு உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் நடக்க உள்ளது.

    வேலூர் மாவட்ட வாக்காளர்கள் ஓட்டுப்போட வசதியாக 1,331 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஓட்டுப்பதிவுக்கு பின்னர், ஓட்டு எண்ணிக்கை மையங்களாக 7 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, துறைரீதியான ஆய்வும் நடந்து முடிந்துள்ளது.

    இதைத் தொடர்ந்து எந்தெந்த வாக்குச்சாவடிகளில் பதற்றமானவை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

    இதில் மொத்தம் 282 ஓட்டுச்சாவடிகள் பதட்டம் நிறைந்தவைகளாக கண்டறியப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.

    உள்ளாட்சி தேர்தலை பொறுத்தமட்டில் ஓட்டுச் சீட்டுகள்தான் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக ஒரு வாக்குச்சாவடியில் இருக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, சிறிய, நடுத்தரம், பெரிய என்ற அளவிலான ஓட்டுப் பெட்டிகள் பயன்படுத்தப்பட உள்ளது.
    Next Story
    ×