என் மலர்tooltip icon

    வேலூர்

    குடியாத்தம் பகுதியில் ஒரே வாரத்தில் 2-வது முறையாக நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
    வேலூர்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த தட்டப்பாறை ஊராட்சி மூலக்கொல்லை, மாரியம்மன்பட்டி, மீனூர் கொல்லைமேடு உள்ளிட்ட கிராம பகுதிகளில் கடந்த 21-ம் தேதி இரவு சுமார் 10 மணி அளவில் திடீர் நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர்.

    இந்நிலையில், நேற்று முன்தினம் 25-ம் தேதி இரவு சுமார் 10.30 மணி அளவில் மீண்டும் தட்டப்பாறையை அடுத்த மூலக்கொல்லை, மாரியம்மன்பட்டி, மீனூர் கொல்லைமேடு உள்ளிட்ட பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டது.

    இந்த நில அதிர்வின்போது வீட்டில் பரண் மீது இருந்த பாத்திரங்கள் உருண்டு கீழே விழுந்தது. பீரோக்கள், கட்டில்கள் சில அங்குலம் நகர்ந்தன. இதனால் அச்சமடைந்த மக்கள் வீட்டை விட்டு வீதிக்கு ஓடி வந்தனர்.

    ஒரே வாரத்தில் இரண்டு முறை நில அதிர்வு ஏற்பட்டதால் கிராம மக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர்.
    விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுநீரகத்தொற்று உள்ளிட்ட உடல் பிரச்சனைகளுக்கு மருத்துவரின் ஆலோசனைப்படி பேரறிவாளன் சிகிச்சை பெற்று வருகிறார்.
    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளன் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைத்தண்டனையை அனுபவித்து வருகிறார்.

    இந்நிலையில், இவரது தாயார் அற்புதம்மாள் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு தொடர் சிகிச்சை மேற்கொள்ள பரோல் வழங்க வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் மனு அளித்திருந்தார்.

    அதன்பேரில் கடந்த மே மாதம் 28-ந்தேதி பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. தொடர்ந்து 5 மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டு வந்தது. இன்றுடன் பேரறிவாளனின் பரோல் நிறைவடைந்தது.

    இந்நிலையில் அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு பரோலை மேலும் நீட்டிக்கக்கோரி அற்புதம்மாள் மனு அளித்திருந்தார். அற்புதம்மாளின் கோரிக்கையை ஏற்று பேரறிவாளனுக்கு மீண்டும் 6-வது முறையாக ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    6-வது முறையாக பரோல் வழங்கப்பட்டதையடுத்து, பேரறிவாளன் அவரின் வீட்டில் இருந்து வருகிறார்.

    பேரறிவாளன் தினமும் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார்.

    விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுநீரகத்தொற்று உள்ளிட்ட உடல் பிரச்சனைகளுக்கு மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை பெற்று வருகிறார்.
    திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 அரசு மருத்துவமனைகள் மற்றும் 37 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 313 நடமாடும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் மருத்துவ குழுக்கள் மூலம் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது.
    வேலூர்:

    தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை துரிதப்படுத்த மாபெரும் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மாநிலம் முழுவதும் நேற்று 6-வது கட்ட சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இதற்காக, மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    வேலூர் மாவட்டத்தில் 1,562 மையங்கள் மூலம் சுமார் 80 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 3,500 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். முகாம் நடைபெறும் இடங்களில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் திடீர் ஆய்வு மேற் கொண்டார்.

    ஏற்கெனவே தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நபர்களின் பட்டியலை வைத்து அவர்களை அழைத்து வந்து தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. வேலூர் உழவர் சந்தை, டோல்கேட், தொரப்பாடி, அடுக்கம்பாறை, சாத்துமதுரை, கணியம்பாடி, நெல்வாய், விருபாட்சிபுரம், ஓட்டேரி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற முகாம்களை ஆட்சியர் ஆய்வு செய்தார். மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 40 ஆயிரத்து 4 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 அரசு மருத்துவமனைகள் மற்றும் 37 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 313 நடமாடும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் மருத்துவ குழுக்கள் மூலம் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. மொத்தம் 1,400 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடந்தன. தடுப்பூசி முகாம்கள் நடைபெற்ற மாக்கனூர், ஆதியூர் ஊராட்சியில் ராவுத்தம்பட்டி, சு.பள்ளிப்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் நடைபெற்ற முகாமை கலெக்டர் அமர் குஷ்வாஹா நேற்று ஆய்வு செய்தார். அப்போது, வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) பானு, வட்டாட்சியர் சிவப்பிரகாசம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 21,158 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று 950 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. தடுப்பூசி செலுத்தும் பணியில் சுமார் 5 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபட்டனர். மாவட்டத்தில் 1 லட்சத்து 32 ஆயிரம் டோஸ் தடுப்பூசி கையிருப்பு இருந்தது. ராணிப்பேட்டை, ஆற்காடு, திமிரி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார்.

    மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 21,685 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 82 ஆயிரத்து 847 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
    ஆந்திர மாநிலம் கலவகுண்டா அணையில் இருந்து விநாடிக்கு 4,300 கன அடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், கரையோரப்பகுதி கிராம மக்களுக்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    வேலூர்:

    வடகிழக்குப் பருவ மழை காரணமாக ஆந்திர மாநிலத்தில் கடந்த கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பாலாறு, மலட்டாறு, பொன்னை ஆறுகளில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த ஆறுகளை நம்பியுள்ள ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

    இதனிடையே ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்துக்கு உட்பட்ட கலவகுண்டா அணை தொடர்மழை காரணமாக முழுமையாக நிரம்பியுள்ளது. இதையடுத்து கலவகுண்டா அணையில் இருந்து 4500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    இதன்காரணமாக பொன்னை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த தண்ணீர் வேலூர் மாவட்ட எல்லையில் உள்ள பொன்னை தடுப்பணையை தாண்டி சீறிப்பாய்ந்து செல்கிறது.

    தொடர்ந்து ஆற்றில் வெள்ளம் அதிகரித்து வரும் நிலையில் கரையோர கிராமங்களான பெலாக்குப்பம், தெங்கால், பொன்னை, பரமசாத்து, மாதாண்டகுப்பம், கீரைசாத்து, கோலப்பள்ளி, மேல்பாடி, வெப்பாலை ஆகிய பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தண்டோரா போட்டு எச்சரிக்கை செய்யப்பட்டது.

    பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, போலீஸ், தீயணைப்பு உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகளும் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

    ராணிப்பேட்டை மாவட்டம் பொன்னை மற்றும் பாலாற்றின் கரையோர கிராமங்களான மருதம்பாக்கம், ஏகாம்பரநல்லூர், கொண்டகுப்பம், சீக்கராஜபுரம், நரசிங்கபுரம், லாலாப்பேட்டை, தெங்கால், காரை, திருமலைச்சேரி, பூண்டி, குடிமல்லூர், சாத்தம்பாக்கம், விஷாரம், ஆற்காடு, சக்கரமல்லூர், புதுப்பாடி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் தாழ்வான பகுதிகளிலிருந்து பதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் பொதுமக்கள், இளைஞர்கள், சிறுவர்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவும், ஆற்றைக்கடக்கவும் வேண்டாம். மேலும் வெள்ளத்தை வேடிக்கை பார்ப்பதற்காக வருவதையும் தவிர்க்குமாறு கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.


    வேலூர் பழைய பஸ் நிலையத்தில் போதை ஆசாமி சுமார் 2 மணி நேரம் பஸ் பயணிகளை அலற விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    வேலூர்:

    வேலூர் பழைய பஸ் நிலையத்தில் இன்று காலை போதையில் இருந்த ஒருவர் பாட்டுப்பாடி நடனமாடி கொண்டிருந்தார்.

    இதையடுத்து பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பஸ்சை கையால் தூக்க முயன்றார். சுமார் அரை மணி நேரம் வரை தூக்க முயற்சி செய்து முடியாததால் ஆத்திரமடைந்து பஸ்சின் டிரைவர் அருகிலுள்ள கதவை திறந்து வேகமாக மூடிவிட்டு வேறு இடத்துக்குச் சென்றார்.

    அப்போது பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் அவரை வேடிக்கை பார்த்தனர். இதனால் ஆத்திரமடைந்த அவர் பஸ் பயணிகளை ஆபாசமான வார்த்தைகளால் திட்டினார்.

    இதையடுத்து அவரை வேடிக்கை பார்த்திருந்த பயணிகள் கலைந்து சென்றனர்.

    அவரது ஆபாச வார்த்தைகளைக் கேட்ட பயணிகள் அங்கிருந்து வேறு இடத்திற்கு புறப்பட்டு சென்றனர். போதை ஆசாமி சுமார் 2 மணி நேரம் பஸ் பயணிகளை அலற விட்ட சம்பவம் பழைய பஸ் நிலையத்தில் இன்று காலை பரபரப்பை ஏற்படுத்தியது.

    பழைய பஸ் நிலையத்தை ஒட்டிய படியே டாஸ்மாக் கடைகள் அமைந்துள்ளன. இதில் மது குடிப்பவர்கள் பஸ் நிலையத்தில் விழுந்து கிடப்பதும் அங்கிருக்கும் பயணிகளுக்கு தொல்லை கொடுப்பதும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

    மேலும் பழைய பஸ் நிலையத்தில் டாஸ்மாக் கடைகளால் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
    அணைக்கட்டு அருகே மதுபோதையில் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொண்ட வியாபாரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    அணைக்கட்டு:

    அணைக்கட்டு அடுத்த ஊசூர் காலனியைச் சேர்ந்தவர் வில்வகுமார் (வயது 48). மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட வீட்டு உபயோக பாத்திரங்களை தெருத்தெருவாக கொண்டு சென்று விற்கும் வியாபாரி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று வியாபாரம் முடிந்ததும் வழக்கம் போல் குடித்து விட்டு மது பாட்டில்களுடன் வீட்டுக்கு வந்தார். ஆனால் வில்வகுமார் தான் வாங்கி வந்த மதுவை குடித்து கொண்டு இருந்தார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த வில்வகுமார் வீட்டில் இருந்த காய்கறி அறுக்கும் கத்தியை எடுத்து மனைவியை குத்த முயன்றார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அலறியபடியே வெளியே ஓடினார்.

    போதையில் இருந்த வில்வகுமார் செய்வது தெரியாமல் கையிலிருந்த கத்தியால் தன்னுடைய கழுத்தை அறுத்துக் கொண்டார். இதில் துடிதுடித்து அதே இடத்திலேயே இறந்தார்.

    இதுபற்றிய தகவல் அறிந்ததும் வேலூர் ஏ.எஸ்.பி. ஆல்பர்ட் ஜான், பாகாயம் இன்ஸ்பெக்டர் சுபா, அரியூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் போலீசார் அங்கு வந்து வில்வகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஆசிரியர் கோவிந்தன் தி.மு.க.வில் கடந்த 1989-1991, 1991-2001 இரண்டு முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
    பேரணாம்பட்டு:

    வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. ஆசிரியர் கோவிந்தன் (வயது80).

    இவர் இன்று அதிகாலை வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். இவரது உடல் நல்லடக்கம் இன்று மாலை பேரணாம்பட்டில் நடக்கிறது.

    ஆசிரியர் கோவிந்தன் தி.மு.க.வில் கடந்த 1989-1991, 1991-2001 இரண்டு முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    இவர் முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினராகவும், முன்னாள் மாவட்ட துணை செயலாளராகவும் முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார்.



    அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் இதுவரை 49,710 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 48,376 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 205 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 1,129 பேர் பலியாகியுள்ளனர்.

    இன்று வேலூர் மாவட்டத்தில் 15 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று 8 பேர் குணமடைந்தனர். வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து கொரோனா பரவி வருவதால் பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

    ஊரடங்கு தளர்வு நேரத்தில் தேவையில்லாமல் வெளியே சுற்றித்திரிய வேண்டாம். கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
    வேலூர் வேலப்பாடி பகுதியில் கேட்பாரற்று கிடந்த 200 கிலோ ரேஷன் அரிசியை வருவாய்த்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து பாகாயம் நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனர்.
    காட்பாடி:

    காட்பாடி வழியாக செல்லும் ரெயிலில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக காட்பாடி ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் வேலூர் பறக்கும்படை தனி தாசில்தார் கோட்டீஸ்வரன் ஆகியோருக்கு நேற்று தகவல் வந்தது. அதன்பேரில் அவர்கள் நேற்று மாலை காட்பாடி ரெயில் நிலையம் வந்த லால்பாக் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகளில் ஏறி சோதனை நடத்தினர். இதில் பயணிகளின் இருக்கைகளின் கீழே சிறு, சிறு மூட்டைகளாக 500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் கைப்பற்றி திருவலம் நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.

    இதேபோல் வேலூர் வேலப்பாடி பகுதியில் கேட்பாரற்று கிடந்த 200 கிலோ ரேஷன் அரிசியை வருவாய்த்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து பாகாயம் நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனர்.
    வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கு பலவகை காய்கறிகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
    வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாதத்தை முன்னிட்டு அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கோவிலில் உள்ள அனைத்து சாமிகளுக்கும் சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டன. ஜலகண்டேஸ்வரருக்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டிருந்தது. அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கு பலவகை காய்கறிகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல, சத்துவாச்சாரியில் உள்ள பர்வதவர்த்தினி சமேத கைலாசநாதர் கோவிலில் அம்மனுக்கு காய்கறிகளால் அலங்காரமும், மூலவர் கைலாசநாதருக்கு அன்னாபிஷேகமும் செய்யப்பட்டிருந்தது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    வேலூர் அருகே உள்ள அன்பூண்டி சின்ன ஏரி நிரம்பியதால் 10 ஏக்கர் பயிர்கள் சேதமடைந்துள்ளது. வீடுகளுக்குள்ளேயும் தண்ணீர் புகுந்துள்ளது.
    வேலூர்:

    வேலூர் அருகே அன்பூண்டியில் சின்ன ஏரி உள்ளது. பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி ஒவ்வொரு ஏரியாக நிரம்பி வருகிறது. அன்பூண்டி சின்ன ஏரிக்கும் நீர்வரத்து அதிகமாக இருந்ததால் கடந்த 17-ந் தேதி ஏரி நிரம்பி கோடிபோனது. இந்த ஏரி நிரம்பியதால் அதன் கரையோரம் உள்ள விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கியது. இதனால் பல ஏக்கர் பயிர்கள் சேதம் ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

    அன்பூண்டியில் உள்ள சின்ன ஏரிக்கு தண்ணீர் வரத்து இருந்தால் அதன் அருகே உள்ள விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்துவிடும். ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேறும் மதகு பகுதி சுமார் 2 அடி உயரம் கட்டப்பட்டுள்ளதால் ஏரிக்கு தண்ணீர் வரத்து வரும் நேரத்தில் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கிவிடும். தற்போது விவசாயிகள் வெண்டை, கத்தரி, வேர்க்கடலை, பூக்கள் போன்றவற்றை பயிரிட்டிருந்தனர். இவை அனைத்தும் மூழ்கிவிட்டது. சுமார் 10 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதுதவிர சில வீடுகளுக்குள்ளேயும் தண்ணீர் புகுந்துள்ளது. அவர்கள் வீடுகளில் வசிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

    சிலர் வேறு இடங்களுக்கு தற்காலிகமாக குடிஅமர்ந்துள்ளனர். கால்நடைகளும் நீரில் வசிக்கும் சூழல் உள்ளது. அவற்றுக்கு பயன்படுத்தப்படும் வைக்கோலும் நீரில் மிதக்கிறது. மதகு பகுதியை உயர்த்தி கட்டியதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடும், விவசாய நிலம் மற்றும் வீடுகளில் தண்ணீர் புகாதவாறு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    ஆம்பூர் அருகே கள்ளக்காதலனை கொலை செய்து நாடகமாடிய கணவன், மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆம்பூர்:

    வேலூர் தொரப்பாடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரசூல் ரஹ்மான் (வயது40). கட்டிட மேஸ்திரி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர்.

    அதே தெருவை சேர்ந்தவர் கோட்டீஸ்வரன் மனைவி சாந்தி. சாந்தி கட்டிட வேலைக்காக ரசூலுடன் சென்று வந்தார். இதனால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளகாதலாக மாறியது.

    இதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கடந்த ஒரு ஆண்டாக சென்னை, காஞ்சிபுரம், வேலூர், செய்யாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தங்கி வேலை செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.

    இதை அறிந்த சாந்தியின் கணவர் கோட்டீஸ்வரன் மற்றும் குடும்பத்தினர் சாந்தி, ரசூலை கண்டித்தனர்.

    இந்நிலையில் கடந்த 3-ந்தேதி கோட்டீஸ்வரன் தனது மனைவி சாந்தியை ஆம்பூர் அடுத்த கடாம்பூர் அருகே உள்ள பூஞ்சோலை நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு அழைத்து சென்றார். அங்கு அவரது குடும்பத்தினருடன் சாந்திக்கு அறிவுரை வழங்கினர்.

    இந்நிலையில் சாந்தியை சந்திக்க கடந்த 10-ந்தேதி ரசூல் கடாம்பூருக்கு வந்தார். இதனால் ஆத்திரமடைந்த கோட்டீஸ்வரன் ரசூலை கண்டித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    அப்போது நடந்த தகராறில் கோட்டீஸ்வரன் ஆத்திரத்தில் அங்கு கடந்த கல்லால் ரசூலின் தலையில் பலமாக தாக்கினார்.

    இதில் படுகாயமடைந்த ரசூலை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பைக் ஓட்டி வந்த போது தவறி விழுந்ததாக ஆஸ்பத்திரியில் கூறினர். பின்னர் ரசூல் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 13-ந்தேதி ரசூல் இறந்தார்.

    இதனால் கோட்டீஸ்வரன் தலைமறைவானார். பின்னர் போலீசார் விசாரணை நடத்திய போது ரசூல் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து உமராபாத் போலீசார் விபத்து வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வந்தனர்.

    இதை தொடர்ந்து ஆம்பூர் டி.எஸ்.பி. சரவணன் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு கொலை செய்து தலைமறைவான கோட்டீஸ்வரனை தேடி வந்தனர்.

    இந்நிலையில் ஆம்பூர் அடுத்த தேவலாபுரத்தில் இன்று காலை கோட்டீஸ்வரன் (50) அவரது மனைவி சாந்தி (45) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×