search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    ஆம்பூர் அருகே கள்ளக்காதலனை கொலை செய்து நாடகமாடிய கணவன், மனைவி கைது

    ஆம்பூர் அருகே கள்ளக்காதலனை கொலை செய்து நாடகமாடிய கணவன், மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆம்பூர்:

    வேலூர் தொரப்பாடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரசூல் ரஹ்மான் (வயது40). கட்டிட மேஸ்திரி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர்.

    அதே தெருவை சேர்ந்தவர் கோட்டீஸ்வரன் மனைவி சாந்தி. சாந்தி கட்டிட வேலைக்காக ரசூலுடன் சென்று வந்தார். இதனால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளகாதலாக மாறியது.

    இதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கடந்த ஒரு ஆண்டாக சென்னை, காஞ்சிபுரம், வேலூர், செய்யாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தங்கி வேலை செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.

    இதை அறிந்த சாந்தியின் கணவர் கோட்டீஸ்வரன் மற்றும் குடும்பத்தினர் சாந்தி, ரசூலை கண்டித்தனர்.

    இந்நிலையில் கடந்த 3-ந்தேதி கோட்டீஸ்வரன் தனது மனைவி சாந்தியை ஆம்பூர் அடுத்த கடாம்பூர் அருகே உள்ள பூஞ்சோலை நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு அழைத்து சென்றார். அங்கு அவரது குடும்பத்தினருடன் சாந்திக்கு அறிவுரை வழங்கினர்.

    இந்நிலையில் சாந்தியை சந்திக்க கடந்த 10-ந்தேதி ரசூல் கடாம்பூருக்கு வந்தார். இதனால் ஆத்திரமடைந்த கோட்டீஸ்வரன் ரசூலை கண்டித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    அப்போது நடந்த தகராறில் கோட்டீஸ்வரன் ஆத்திரத்தில் அங்கு கடந்த கல்லால் ரசூலின் தலையில் பலமாக தாக்கினார்.

    இதில் படுகாயமடைந்த ரசூலை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பைக் ஓட்டி வந்த போது தவறி விழுந்ததாக ஆஸ்பத்திரியில் கூறினர். பின்னர் ரசூல் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 13-ந்தேதி ரசூல் இறந்தார்.

    இதனால் கோட்டீஸ்வரன் தலைமறைவானார். பின்னர் போலீசார் விசாரணை நடத்திய போது ரசூல் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து உமராபாத் போலீசார் விபத்து வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வந்தனர்.

    இதை தொடர்ந்து ஆம்பூர் டி.எஸ்.பி. சரவணன் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு கொலை செய்து தலைமறைவான கோட்டீஸ்வரனை தேடி வந்தனர்.

    இந்நிலையில் ஆம்பூர் அடுத்த தேவலாபுரத்தில் இன்று காலை கோட்டீஸ்வரன் (50) அவரது மனைவி சாந்தி (45) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×