என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொன்னை அணைக்கட்டில் இருந்து சீறிப்பாய்ந்து செல்லும் வெள்ளம்
    X
    பொன்னை அணைக்கட்டில் இருந்து சீறிப்பாய்ந்து செல்லும் வெள்ளம்

    ஆந்திர அணை திறப்பால் பொன்னை ஆற்றில் கடும் வெள்ளம்- வேலூர், ராணிப்பேட்டை கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

    ஆந்திர மாநிலம் கலவகுண்டா அணையில் இருந்து விநாடிக்கு 4,300 கன அடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், கரையோரப்பகுதி கிராம மக்களுக்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    வேலூர்:

    வடகிழக்குப் பருவ மழை காரணமாக ஆந்திர மாநிலத்தில் கடந்த கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பாலாறு, மலட்டாறு, பொன்னை ஆறுகளில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த ஆறுகளை நம்பியுள்ள ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

    இதனிடையே ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்துக்கு உட்பட்ட கலவகுண்டா அணை தொடர்மழை காரணமாக முழுமையாக நிரம்பியுள்ளது. இதையடுத்து கலவகுண்டா அணையில் இருந்து 4500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    இதன்காரணமாக பொன்னை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த தண்ணீர் வேலூர் மாவட்ட எல்லையில் உள்ள பொன்னை தடுப்பணையை தாண்டி சீறிப்பாய்ந்து செல்கிறது.

    தொடர்ந்து ஆற்றில் வெள்ளம் அதிகரித்து வரும் நிலையில் கரையோர கிராமங்களான பெலாக்குப்பம், தெங்கால், பொன்னை, பரமசாத்து, மாதாண்டகுப்பம், கீரைசாத்து, கோலப்பள்ளி, மேல்பாடி, வெப்பாலை ஆகிய பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தண்டோரா போட்டு எச்சரிக்கை செய்யப்பட்டது.

    பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, போலீஸ், தீயணைப்பு உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகளும் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

    ராணிப்பேட்டை மாவட்டம் பொன்னை மற்றும் பாலாற்றின் கரையோர கிராமங்களான மருதம்பாக்கம், ஏகாம்பரநல்லூர், கொண்டகுப்பம், சீக்கராஜபுரம், நரசிங்கபுரம், லாலாப்பேட்டை, தெங்கால், காரை, திருமலைச்சேரி, பூண்டி, குடிமல்லூர், சாத்தம்பாக்கம், விஷாரம், ஆற்காடு, சக்கரமல்லூர், புதுப்பாடி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் தாழ்வான பகுதிகளிலிருந்து பதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் பொதுமக்கள், இளைஞர்கள், சிறுவர்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவும், ஆற்றைக்கடக்கவும் வேண்டாம். மேலும் வெள்ளத்தை வேடிக்கை பார்ப்பதற்காக வருவதையும் தவிர்க்குமாறு கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.


    Next Story
    ×