என் மலர்tooltip icon

    வேலூர்

    வேலூர் மாவட்டம் முழுவதும் தினமும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தினசரி பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. தொற்றின் பரவல் மேலும் அதிகரிக்காமல் இருப்பதற்கான தடுப்பு நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையங்கள், கலெக்டர் அலுவலகம், மார்க்கெட், பஜார் உள்ளிட்டவற்றில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. மேலும் மாவட்டம் முழுவதும் தினமும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

    வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 6 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று மேலும் 12 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள், உடன் பணிபுரிந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    காட்பாடி அருகே விரிஞ்சிபுரம் ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரெயிலில் அடிபட்டு ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    ஜோலார்பேட்டை:

    காட்பாடி அருகே கே. வி. குப்பம் மேல் விலாச்சூர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமாரசாமி (வயது 43). ரெயில்வே ஊழியர்.

    இன்று அதிகாலை காட்பாடி அருகே விரிஞ்சிபுரம் ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரெயில் சிக்கி தலை துண்டாகி பரிதபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பள்ளிகொண்டா அருகே சாலையை கடக்க முயன்றவர் பஸ் மோதி பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
    அணைக்கட்டு:

    பள்ளிகொண்டாவை அடுத்து கந்தனேரி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வேலூரில் இருந்து ஆம்பூரைநோக்கி சென்ற அரசு பஸ் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்துவிட்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் பள்ளிகொண்டா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு உள்ளவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் விபத்து ஏற்படுத்திய அரசு பஸ்சை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். பஸ் டிரைவர் கேசவனிடம் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விபத்தில் இறந்த நபர் யார் என்பது தெரியவில்லை. இதுகுறித்தும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
    கே.வி.குப்பம் அருகே வீட்டுமனை தகராறில் வாலிபர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரண நடத்தி வருகின்றனர்.
    கே.வி.குப்பம்:

    கே.வி.குப்பத்தை அடுத்த காங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமாரின் மகன் விக்கி என்ற விக்னேஷ் (வயது 24). அதே பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜின் மகன் சத்யா (29).

    பி.கே.புரத்தைச் சேர்ந்த பார்த்திபன் வீட்டின் அருகில் சுவர் கட்டும் பணி நடந்தது. அங்குள்ள தனது உறவினரின் வீட்டுக்கு சத்யா வந்திருந்தார். அப்போது வீட்டுமனை அளவு தொடர்பாக சத்யாவுக்கும், பார்த்திபனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    தகராறு தொடர்பாக பார்த்திபன் தனது நண்பர் விக்னேசிடம் கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த விக்னேஷ் பார்த்திபனுக்கு ஆதரவாக செயல்பட்டு காங்குப்பம் வீட்டில் இருந்த சத்யாவை தனது கையில் அணிந்திருந்த கை காப்பால் குத்தி தாக்கினார். அதில் படுகாயம் அடைந்த சத்யா குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    இதுகுறித்து கே.வி.குப்பம் போலீசார் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    வேலூர் நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட 15 கிலோ நகைகள் உருக்கிய நிலையில் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
    வேலூர்:

    வேலூர்-காட்பாடி சாலையில் உள்ள பிரபல நகைக்கடையின் சுவரில் துளைபோட்டு மர்மநபர்கள் நகைகளை திருடிச் சென்றனர். 15 கிலோ தங்கநகைகள், அரை கிலோ வைர நகைகள் திருட்டுபோனது. இந்த சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கொள்ளையனை பிடிக்க 4 டி.எஸ்.பி. தலைமையில் 8 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் பள்ளிகொண்டா அடுத்த குச்சிபாளையத்தை சேர்ந்த டீக்காராமன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நகைகளை பிரித்து ஆங்காங்கே பதுக்கி வைத்திருந்ததாக கூறினார்.

    இதையடுத்து போலீசார் நகைகள் பதுக்கி வைத்த இடத்தை அடையாளம் காட்டும்படி அவரை இன்று அழைத்து சென்றனர். குச்சிபாளையத்தில் உத்தரகாவேரி ஆற்றங்கரையோரம் சுடுகாட்டில் நகைகளை புதைத்து வைத்திருப்பதாக கூறினார். அந்த இடத்தில் போலீசார் தோண்டிபார்த்தபோது அங்கு நகைகள் இருந்தது. 15 கிலோ நகைகள் உருக்கிய நிலையில் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக கொள்ளையனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    அரக்கோணம் அருகே சரக்கு ரெயில் தடம் புரண்டதால் சென்னை, பெங்களூர், கோவை மார்க்கமாக செல்லும் ரெயில்கள் சிறிது நேரம் தாமதமாக சென்றன.

    வேலூர்:

    காட்பாடியில் இருந்து சென்னைக்கு சரக்கு ரெயில் இன்று மதியம் சென்றது. அரக்கோணம் அடுத்த சித்தேரி அருகே சரக்கு ரெயில் தண்டவாளம் இணைப்பு பாதையில் சென்று கொண்டிருந்தது.

    அப்போது அந்த வழியாக தண்டவாளத்தை கடக்க முயன்ற பசுமாட்டின் மீது ரெயில் மோதியது. இதில் ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. 11, 12-வது ரெயில் பெட்டிகள் தண்டாவாளத்தில் இருந்து கீழே இறங்கி நின்றது.

    தடம் புரண்ட ரெயில் பெட்டிகளை சீரமைக்கும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனால் சென்னை, பெங்களூர், கோவை மார்க்கமாக செல்லும் ரெயில்கள் சிறிது நேரம் தாமதமாக சென்றன.
    வேலூர் நகைக்கடை கொள்ளையில் சந்தேகத்தின் பேரில் மேலும் 20 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    வேலூர்:

    வேலூர்-காட்பாடி சாலையில் உள்ள பிரபல நகைக்கடையின் சுவரில் துளைபோட்டு மர்மநபர்கள் நகைகளை திருடிச் சென்றனர். 16 கிலோ தங்கநகைகள், அரை கிலோ வைர நகைகள் திருட்டுபோனது. இந்த சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக வெளியாகிய கண்காணிப்பு வீடியோக காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில், மர்மநபர் சிங்க படம் கொண்ட முகமுடி அணிந்து உள்ளே வருவதும், ஒவ்வொரு கண்காணிப்பு கேமராக்களையும் பெயிண்ட் ஸ்பிரே மூலம் மறைப்பதும் பதிவாகி இருந்தது. கொள்ளையனை பிடிக்க 4 டிஎஸ்பி தலைமையில் 8 தனிப்படை அமைக்கப்பட்டது.

    அந்த நபர் யார்? என்பதை கண்டறிய தனிப்படை போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். பெங்களூரு, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று தடைப்படை போலீசார் விசாரித்தனர்.

    மேலும் காட்பாடி சாலையில் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

    அந்த பகுதியில் அமைந்துள்ள செல்போன் டவர்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

    அதில் கொள்ளை நடந்த குறிப்பிட்ட நேரத்தில் 3 லட்சத்து 86 ஆயிரத்து 628 செல்போன்கள் அந்த டவர் எல்லையில் இருந்துள்ளது. முதல்கட்டமாக இதில் ஆயிரம் பேர் செல்போன்களை போலீசார் தேர்வு செய்து அதில் பேசிய நபர்களை விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

    தனிப்படை போலீசார் அதிரடி வேட்டையில் நகை கடையில் கொள்ளையடித்த அணைக்கட்டு பகுதியை சேர்ந்த பலே திருடன் சிக்கியுள்ளான். அவனை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    மேலும் சந்தேகத்தின் பேரில் மேலும் 20 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    அரக்கோணம் அருகே வீடு புகுந்து திருடிய கொள்ளையர்கள் நாய்களுக்கு மயக்க ஸ்பிரே அடித்து குரைக்காமல் செய்துள்ளதும் போலீசார் விசாரணையில் தெரியவந்ததுள்ளது.

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த கன்னிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் புஷ்கரன் (வயது23). இவரது வீடு அங்குள்ள விவசாய நிலத்தில் தனியாக உள்ளது. வீட்டில் தாய் சுதா (52), பெரியம்மா லதா (56), பாட்டி ரஞ்சிதம்மாள் (76) ஆகியோர் உள்ளனர்.

    நேற்று முன்தினம் நள்ளிரவில் நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டதும் புஷ்கரன் எழுந்துள்ளார். ஆனால், திடீரென நாய்கள் குரைப்பதை நிறுத்தியதால் மீண்டும் உறங்கச்செல்ல முயன்றபோது கதவை யாரோ வேகமாக தட்டும் சத்தம் கேட்டுள்ளது.

    கதவை திறந்தபோது, முகமூடி அணிந்த 3 பேர் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் நிற்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தவர் கதவை வேகமாக மூடியதுடன் கூச்சலிட்டார்.

    வீட்டில் இருந்த தாய், பாட்டி உள்ளிட்டோர் ஓடிவந்தனர். அப்போது முகமூடி கும்பலை சேர்ந்த ஒருவர் அருகில் இருந்த ஜன்னல் வழியாக நாட்டுத் துப்பாக்கியால் சுட்டார்.

    இதில் புஷ்கரனின் கழுத்து, காது உள்ளிட்ட பகுதிகளில் குண்டு பாய்ந்தது. சுதா, ரஞ்சிதம்மாள் ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டது. புஷ்கரன் கீழே விழுந்த நிலையில் பூட்டிய கதவை உடைத்துக் கொண்டு முகமூடி கும்பல் உள்ளே புகுந்தனர்.

    துப்பாக்கி முனையில் அனைவரையும் மிரட்டிய கும்பல், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாறி, மாறி பேசி, சுதா, லதா மற்றும் ரஞ்சிதம்மாள் ஆகியோர் அணிந்திருந்த நகைகளை பறித்துள்ளனர்.

    பீரோவிலிருந்த நகை மற்றும் பணத்தையும் எடுத்துக் கொண்டனர். 25 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ராணிப்பேட்டை எஸ்.பி. டாக்டர் தீபா சத்யன் மேற்பார்வையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கொள்ளையர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சரளமாக பேசியுள்ளதால் வடமாநில கொள்ளையர்கள் இல்லை என்றும் உள்ளூரை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    நாய்களுக்கு மயக்க ஸ்பிரே அடித்து குரைக்காமல் செய்துள்ளதும் தெரியவந்தது. கொள்ளை கும்பல் பயன்படுத்திய நாட்டுத் துப்பாக்கியும் வடமாநில கொள்ளையர்கள் பயன்படுத்தும் வகையை சேர்ந்தது இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

    போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக தனிப்படை ஆந்திரா, சென்னை, திருவள்ளூவரில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளையும் கண்காணித்து வருகின்றனர்.

    கொள்ளை சம்பவம் நடைபெற்ற நேரத்தில் நகைக்கடையின் முன்பு நீண்டநேரம் ஆட்டோ ஒன்று சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்தது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.

    வேலூர்:

    வேலூர்-காட்பாடி சாலையில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையின் சுவரில் துளைபோட்டு கொள்ளை கும்பல் நகைகளை திருடிச் சென்றனர். 16 கிலோ தங்க நகைகள், அரை கிலோ வைர நகைகள் திருடுபோனது. இந்த சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கடையின் உள்ளே புகுந்த மர்மநபர் பெயிண்ட் ஸ்பிரே அடித்து கண்காணிப்பு கேமராக்களை மறைத்து பின்னர் நகைகளை கொள்ளை அடித்து சென்றான்.

    இதுதொடர்பாக வெளியாகிய கண்காணிப்பு வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    வீடியோவில், மர்மநபர் சிங்க படம் கொண்ட முகமுடி மற்றும் தலையில் விக் அணிந்து உள்ளே வருவதும், ஒவ்வொரு கண்காணிப்பு கேமராக்களையும் பெயிண்ட் ஸ்பிரே மூலம் மறைப்பதும் பதிவாகி இருந்தது. கொள்ளையனை பிடிக்க 4 டி.எஸ்.பி. தலைமையில் 8 தனிப்படை அமைக்கப்பட்டது.

    கேமராவில் பதிவான கொள்ளையன் யார்? என்பதை கண்டறிய தனிப்படை போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். பெங்களூரு, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று தடைப்படை போலீசார் விசாரித்தனர்.

    மேலும் காட்பாடி சாலையில் பொதுஇடங்களில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

    இந்த நிலையில் சம்பவம் நடைபெற்ற நேரத்தில் நகைக்கடையின் முன்பு நீண்டநேரம் ஆட்டோ ஒன்று சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்தது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.

    அந்த ஆட்டோ சம்பந்தமில்லாமல் நள்ளிரவு நேரத்தில் கடையின் முன்பு ஏன் நிற்க வேண்டும் என்ற கேள்வியை அடிப்படையாக கொண்டு போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

    கொள்ளைபோன நகை கடையின் அருகே காலி இடத்தை ஒட்டியவாறு தங்கும் விடுதி ஒன்று கட்டப்பட்டு வருகிறது. அந்த தங்கும் விடுதியில் கட்டிட பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த கொள்ளை சம்பவத்தில் கட்டிட தொழிலாளர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். கட்டிட தொழிலாளர்கள் 25 பேரின் புகைப்படம்- கைரேகைகள் போன்ற விவரங்களை போலீசார் சேகரித்து விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையின் தனிப்படை போலீசாரின் அதிரடி வேட்டையில் நகை கடையில் கொள்ளையடித்த பள்ளி கொண்டா பகுதியை சேர்ந்த பலே திருடன் சிக்கியுள்ளான். அவனை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.கொள்ளையடித்த 16 கிலோ தங்கநகைகள், அரை கிலோ வைர நகைகளை  மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    மேலும் கொள்ளைக்கு உடந்தையாக இருந்தவர்கள் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முழுமையான விசாரணைக்கு பிறகு மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என போலீசார் தெரிவித்தனர்.

    இதையும் படியுங்கள்...கடவுள், இந்த உலகத்துல கஷ்டப்படணும்னு படைச்சிருக்கார் - 3 கடிதம் எழுதி வைத்து மாணவி தற்கொலை

    அவதூறாக பேசியும், அநாகரீக அரசியல் செய்து வரும் சீமானை கைது செய்ய வேண்டும் என வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தி.மு.க.வினர் புகார் அளித்துள்ளனர்.
    வேலூர்:

    வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மாவட்ட தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ராஜா குப்பம் முருகானந்தம் தலைமையில் புகார் மனு அளித்தனர்.

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பொதுக்கூட்டத்தில் பேசும்போது, தமிழக அரசையும், தி.மு.க. மற்றும் தி.மு.க. தொண்டர்களை மேடையிலேயே செருப்பைக் கழட்டி அடிப்பேன் என பேசியுள்ளார்.

    அவரது பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது தி.மு.க.வினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அவதூறாக பேசியும், அநாகரீக அரசியல் செய்து வரும் சீமானை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

    அவருடன் தகவல் தொழில்நுட்ப மாவட்ட துணை அமைப்பாளர்கள் இர்பான் கோகுல் அஸ்வின், காட்பாடி தொகுதி அமைப்பாளர் சதீஷ் வேலூர் தொகுதி அமைப்பாளர்கள் சுரேஷ் தன்ஷிகா அணைக்கட்டு சமூக வலைதள பொறுப்பாளர் பாலமுருகன், பகுதி அமைப்பாளர்கள் பிரபாகர் முத்து, சிவா, மணிகண்டன், சரவணன், குமார், கோபால் சேகர், இளைஞரணி பகுதி அமைப்பாளர் இப்ராகிம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் கட்டிட தொழிலாளர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர்:

    வேலூர்-காட்பாடி சாலையில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையின் சுவரில் துளைபோட்டு மர்மநபர்கள் நகைகளை திருடிச் சென்றனர். 16 கிலோ தங்கநகைகள், அரை கிலோ வைர நகைகள் திருட்டுபோனது.

    இந்த சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடையின் உள்ளே புகுந்த மர்மநபர் பெயிண்ட் ஸ்பிரே அடித்து கண்காணிப்பு கேமராக்களை மறைத்து பின்னர் நகைகளை கொள்ளைஅடித்து சென்றான்.

    இதுதொடர்பாக வெளியாகிய கண்காணிப்பு வீடியோக காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில், மர்மநபர் சிங்க படம் கொண்ட முகமுடி மற்றும் தலையில் தலைமுடி விக் அணிந்து உள்ளே வருவதும், ஒவ்வொரு கண்காணிப்பு கேமராக்களையும் பெயிண்ட் ஸ்பிரே மூலம் மறைப்பதும் பதிவாகி இருந்தது.

    அந்த நபர் யார்? என்பதை கண்டறிய தனிப்படை போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். பெங்களூரு, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளுக்கு தடைப்படை போலீசார் விரைந்துள்ளனர்.

    மேலும் காட்பாடி சாலையில் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் சம்பவம் நடைபெற்ற நேரத்தில் நகைக்கடையின் முன்பு நீண்டநேரம் ஆட்டோ ஒன்று சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்தது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த ஆட்டோ சம்பந்தமில்லாமல் நள்ளிரவு நேரத்தில் கடையின் முன்பு ஏன் நிற்க வேண்டும் என்ற கேள்வியை அடிப்படையாக கொண்டு போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆட்டோவில் இருந்த நபர் நகைக்கடையின் காவலாளியை திசைதிருப்பும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். கொள்ளையர்களின் கூட்டாளி ஒருவர் காவலாளியை திசை திருப்பி கடையின் பின்புறம் மற்றொரு கொள்ளையர் சுவரை துளையிட்டு உள்ளே சென்றிருக்கலாம் என்று கருதுகின்றனர். அந்த ஆட்டோ எண் முழுமையாக தெரியவில்லை. அந்த மர்ம ஆட்டோ குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொள்ளைபோன நகை கடையின் அருகே காலி இடத்தை ஒட்டியவாறு தங்கும் விடுதி ஒன்று கட்டப்பட்டு வருகிறது. அந்த தங்கும் விடுதியில் கட்டிட பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த கொள்ளை சம்பவத்தில் கட்டிட தொழிலாளர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கட்டிட தொழிலாளர்கள் 25 பேரின் புகைப்படம்- கைரேகைகள் போன்ற விவரங்களை போலீசார் சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவதூறாக பேசியும், அநாகரீக அரசியல் செய்து வரும் சீமானை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க.வினர் புகார் அளித்துள்ளனர்.

    வேலூர்:

    வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மாவட்ட தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ராஜா குப்பம் முருகானந்தம் தலைமையில் புகார் மனு அளித்தனர்.

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பொதுக்கூட்டத்தில் பேசும்போது, தமிழக அரசையும், தி.மு.க. மற்றும் தி.மு.க. தொண்டர்களை மேடையிலேயே செருப்பைக் கழட்டி அடிப்பேன் என பேசியுள்ளார்.

    அவரது பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது தி.மு.க.வினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அவதூறாக பேசியும், அநாகரீக அரசியல் செய்து வரும் சீமானை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

    அவருடன் தகவல் தொழில்நுட்ப மாவட்ட துணை அமைப்பாளர்கள் இர்பான் கோகுல் அஸ்வின், மற்றும் பலர் உடன் இருந்தனர். 


    ×