search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "railway employee killed"

    நெல்லை மற்றும் தூத்துக்குடியில் பன்றி காய்ச்சலுக்கு 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் டெங்கு, பன்றி காய்ச்சல், மர்ம காய்ச்சலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கொசு ஒழிப்பு, சுகாதார பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. காய்ச்சல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

    ஏற்கனவே டெங்கு , பன்றி காய்ச்சல் காரணமாக இதுவரை 16 பேர் பலியானார்கள். இந்த நிலையில் பாளை சாந்திநகரை சேர்ந்த ஜான்வரதன்(48) என்பவர் மர்ம காய்ச்சலுக்கு பலியானார். இதனால் பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.

    நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு, பன்றிகாய்ச்சல் அறிகுறியுடன் 22 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களுக்கு தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து மாவட்டம் முழுவதும் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்பட்டு உள்ளன.

    இந்த நிலையில் நெல்லையில் பன்றி காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் பலியானார். பாளை ரெயில்வே காலனியை சேர்ந்தவர் ஆறுமுகநயி னார்(வயது45). ரெயில்வே ஊழியர். கடந்த சில நாட்களாக இவருக்கு காய்ச்சல் இருந்தது. அவர் நெல்லையில் ஒரு தானியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அப்போது அவருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது.

    இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும், சுகாதாரதுறை அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். ரெயில்வே காலனி பகுதியில் சுகாதார துறை அதிகாரிகள் முகாமிட்டு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

    இதேபோல் தூத்துக்குடியில் பள்ளி மாணவன் பன்றி காய்ச்சலுக்கு பலியானான். தூத்துக்குடி குறிஞ்சிநகரை சேர்ந்தவர் மந்திரமூர்த்தி. இவரது மகன் சக்தி கபிலன்(13), இவன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் கடந்த 9-ந்தேதி சக்தி கபிலனுக்கு காய்ச்சல் ஏற்பட்டது.

    அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தான். ரத்த பரிசோதனையில் அவனுக்கு பன்றி காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் இன்று சக்தி கபிலன் சிகிச்சை பலனின்றி இறந்தான். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    பழனி அருகே ஓரினச்சேர்க்கை தகராறில் ரெயில்வே ஊழியர் படுகொலை செய்யப்பட்டார்.

    பழனி:

    பழனி அருகே உள்ள புதுநகர் ரெயில்வே காலனியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 59). இவர் பழனி ரெயில் நிலையத்தில் கேபிள் மேனாக வேலை பார்த்து வந்தார். திருமணமாக வில்லை. ரெயில்வே குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார்.

    இவரது வீடு கடந்த 2 நாட்களாக பூட்டப்பட்டு கிடந்தது. இதனால் அவர் வெளியூருக்கு சென்றிருக்கலாம் என அக்கம் பக்கத்தினர் நினைத்தனர். நேற்று இரவு இவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசவே பழனி டவுன் போலீசாருக்கு புகார் அளித்தனர்.

    போலீசார் வந்து கதவை உடைத்து திறந்து பார்த்தனர். அப்போது முருகேசன் தலையில் அம்மிக் கல்லைப் போட்டு மர்ம நபர்கள் கொலை செய்து விட்டு தப்பி சென்றது தெரியவந்தது. மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், முருகேசன் ஓரினச் சேர்க்கையாளராக இருந்துள்ளார்.

    இவரது வீட்டுக்கு அடிக்கடி வாலிபர்கள் வந்து சென்றுள்ளனர். வீட்டில் மது அருந்தி உல்லாசமாக இருந்துள்ளனர். எனவே ஓரினச் சேர்க்கையில் ஏற்பட்ட தகராறில் அவரை கொலை செய்திருக்கலாம் என சந்தேகித்துள்ளனர்.

    மேலும் இவரது வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்லும் நபர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×