என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    வேலூர் மாவட்டத்தில் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு

    வேலூர் மாவட்டம் முழுவதும் தினமும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தினசரி பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. தொற்றின் பரவல் மேலும் அதிகரிக்காமல் இருப்பதற்கான தடுப்பு நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையங்கள், கலெக்டர் அலுவலகம், மார்க்கெட், பஜார் உள்ளிட்டவற்றில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. மேலும் மாவட்டம் முழுவதும் தினமும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

    வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 6 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று மேலும் 12 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள், உடன் பணிபுரிந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×