search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலீசார் விசாரணை
    X
    போலீசார் விசாரணை

    வேலூர் நகைக்கடை கொள்ளையில் மேலும் 20 பேரிடம் விசாரணை

    வேலூர் நகைக்கடை கொள்ளையில் சந்தேகத்தின் பேரில் மேலும் 20 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    வேலூர்:

    வேலூர்-காட்பாடி சாலையில் உள்ள பிரபல நகைக்கடையின் சுவரில் துளைபோட்டு மர்மநபர்கள் நகைகளை திருடிச் சென்றனர். 16 கிலோ தங்கநகைகள், அரை கிலோ வைர நகைகள் திருட்டுபோனது. இந்த சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக வெளியாகிய கண்காணிப்பு வீடியோக காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில், மர்மநபர் சிங்க படம் கொண்ட முகமுடி அணிந்து உள்ளே வருவதும், ஒவ்வொரு கண்காணிப்பு கேமராக்களையும் பெயிண்ட் ஸ்பிரே மூலம் மறைப்பதும் பதிவாகி இருந்தது. கொள்ளையனை பிடிக்க 4 டிஎஸ்பி தலைமையில் 8 தனிப்படை அமைக்கப்பட்டது.

    அந்த நபர் யார்? என்பதை கண்டறிய தனிப்படை போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். பெங்களூரு, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று தடைப்படை போலீசார் விசாரித்தனர்.

    மேலும் காட்பாடி சாலையில் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

    அந்த பகுதியில் அமைந்துள்ள செல்போன் டவர்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

    அதில் கொள்ளை நடந்த குறிப்பிட்ட நேரத்தில் 3 லட்சத்து 86 ஆயிரத்து 628 செல்போன்கள் அந்த டவர் எல்லையில் இருந்துள்ளது. முதல்கட்டமாக இதில் ஆயிரம் பேர் செல்போன்களை போலீசார் தேர்வு செய்து அதில் பேசிய நபர்களை விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

    தனிப்படை போலீசார் அதிரடி வேட்டையில் நகை கடையில் கொள்ளையடித்த அணைக்கட்டு பகுதியை சேர்ந்த பலே திருடன் சிக்கியுள்ளான். அவனை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    மேலும் சந்தேகத்தின் பேரில் மேலும் 20 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×