என் மலர்tooltip icon

    வேலூர்

    • வன அலுவலர்கள் கீழ் அரசம்பட்டு வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • விட்டுச் சென்ற உரிமம் இல்லாத 9 நாட்டு துப்பாக்கிகள், ஒரு கார், 2 செல்போன்களை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

    வேலூர்:

    வேலூர் வனச்சரகம், கணியம்பாடி அடுத்த கீழ் அரசம்பட்டு அருகே உள்ள வனப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடி வருகின்றனர்.

    நேற்று இரவு ஒரு கும்பல் வனவிலங்குகளை வேட்டையாட நாட்டுத் துப்பாக்கிகளுடன் காரில் சென்று உள்ளதாக மாவட்ட வன அலுவலர் கலாநிதிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    வன அலுவலர்கள் கீழ் அரசம்பட்டு வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வனப்பகுதியில் இருந்த 3 மர்ம நபர்கள் வனத்துறையினரை கண்டதும் காரை விட்டு விட்டு தப்பி ஓடினர்.

    வனத்துறையினர் அவர்களை விரட்டிச் சென்று ஒருவரை மட்டும் மடக்கி பிடித்தனர். 2 பேர் தப்பி ஓடி விட்டனர்.

    பிடிபட்ட நபர் திருவண்ணாமலை மாவட்டம் சாரணா குப்பத்தை சேர்ந்த கணேசன் மகன் சுதாகர் (வயது 22) என்பதும் , தப்பி ஓடியவர்கள் அதே கிராமத்தை சேர்ந்த உதயகுமார் (29) என்பது தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்கள் விட்டுச் சென்ற உரிமம் இல்லாத 9 நாட்டு துப்பாக்கிகள், ஒரு கார், 2 செல்போன்களை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

    வனத்துறையினர் சுதாகர் மீது வழக்கு பதிவு செய்து ஜெயிலில் அடைத்தனர். மேலும் தப்பிய ஓடியவர்களை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

    • அமித்ஷா சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அப்துல்லாபுரம் விமான நிலையத்திற்கு வருகிறார்.
    • 1,200 போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரி பகுதியில் மத்திய பாஜக அரசின் 9 ஆண்டு காலம் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நாளை மாலை 3 மணி அளவில் நடைபெற உள்ளது.

    இதில் மத்திய மந்திரி அமித்ஷா மற்றும் மத்திய போக்குவரத்து துறை மந்திரி வி.கே. சிங் மற்றும் மத்திய தகவல் தொடர்புத்துறை இணை மந்திரி எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

    கூட்டத்திற்கு மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்குகிறார். இதற்கான முன்னேற்பாடு பாதுகாப்பு பணிகளை வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி மற்றும் மத்திய சி.ஆர்.பி.எப். கமாண்டோ அசோக்குமார் ஆகியோர் பொதுக்கூட்டம் நடைபெறும் இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

    இதனையொட்டி 1,200 போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும் உள்துறை மந்திரி வருவதையொட்டி அதன் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

    அமித்ஷா சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அப்துல்லாபுரம் விமான நிலையத்திற்கு வருகிறார். அங்கிருந்து காரில் பொதுக்கூட்ட மேடைக்கு செல்கிறார்.

    வழிநெடுகிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • பிரச்சினையில் தொடர்புடைய 2 வேன்களின் ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டது.
    • சில அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஆவின் நிறுவனவத்துக்கு சில நாட்களுக்கு முன்பு ஆவின் வளாகத்தில் பால் ஏற்றிச்செல்ல ஒரே பதிவு எண் கொண்ட 2 வேன்கள் இருந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இரு வேன்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அதைத்தொடர்ந்து ஆவணங்கள் இல்லாத ஒரு வேனை அதன் உரிமையாளர் மற்றும் அவரது டிரைவர் ஆகியோர் சேர்ந்து ஆவின் அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்து எடுத்துச்சென்றனர்.

    இந்த பிரச்சினையில் தொடர்புடைய 2 வேன்களின் ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் ஆவின் நிர்வாகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும், பணியில் கவனக்குறைவாக இருந்ததாகவும் ஆவின் செயல் அலுவலர்கள் 6 பேர் மீது புகார் எழுந்தது.

    இதுதொடர்பாக உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அதைத்தொடர்ந்து புகாருக்கு உள்ளான 6 செயல் அலுவலர்கள் வெவ்வேறு இடங்களுக்கு திடீரென இடமாற்றம் செய்யப்பட்டனர். மேலும் சில அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    • மருத்துவமனை செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    திருநெல்வேலி மாவட்டம், மூலக்கரைப்பட்டி, நடுத்தெருவை சேர்ந்தவர் அய்யாதுரை மகன் குருபிரசாத் (வயது 28). இவர் வேலூரில் உள்ள தனியார் ஓட்டலில் வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் இன்று தன்னுடன் வேலை செய்யும் சஞ்சய் மற்றும் விக்னேசுடன் பைக்கில் வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் சென்றனர்.

    பைக்கை குருபிரசாத் ஓட்டி சென்றார். அப்போது அங்குள்ள ெரயில்வே கேட்டில் பைக் மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் படுகாயம் அடைந்த 3 பேரை சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதில் மருத்துவமனை செல்லும் வழியில் குருபிரசாத் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காட்பாடி ெரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பயணிகளுக்கு மிக காலதாமதம் ஏற்படுகிறது
    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் கோரிக்கை மனு

    வேலூர்:

    திருவண்ணாமலை மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் சார்பாக நிர்வாகிகள் வி.உமாசங்கர், சிவகுமார், ராஜா, சதீஷ், மதன், குணா, விக்னேஷ் ஆகியோர் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணனை நேரில் சந்தித்தனர்.

    அவரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

    அதில் கூறியிருப்பதாவது; திருவண்ணாமலை- ஆரணி மார்க்கமாக வேலூர் வரும் பயணிகள் பஸ்கள் நேஷனல் சர்க்கிளில் இருந்து புதிய பைபாஸ் வழியாக திருப்பிவிடப்பட்டு ரெயில்வே லைன் வழியாக திரும்பி பெங்களூர் சென்னை சர்வீஸ் சாலை வழியாக சுற்றுவழியில் புதிய பஸ் நிலையம் செல்கிறது.

    இதனால் பயணிகளுக்கு மிக காலதாமதம் ஏற்படுகிறது. எனவே நேஷனல் சிக்னலில் இருந்து கிரீன் சர்க்கிள் வழியாக பஸ்கள் புதிய பஸ் நிலையம் செல்ல அனுமதிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • மருத்துவமனையில் சில வசதிகள் செய்து தரப்படவேண்டும் என கோரிக்கை
    • கதிர் ஆனந்த் எம்.பி. பேட்டி

    வேலூர்:

    வேலூர் பென்ட்லேண்ட் அரசு ஆஸ்பத்திரி அருகே உள்ள இ.எஸ்.ஐ ஆஸ்பத்திரியில் இன்று காலை கதிர் ஆனந்த் எம்.பி. ஆய்வு செய்தார்.

    ஆஸ்பத்திரியில் உள்ள மருந்தகம் நோயாளிகள் பிரிவு சமையல் கூடம் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டார்.

    இ.எஸ்.ஐ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின் போது மருத்துவர்கள் மருத்துவமனையில் சில வசதிகள் செய்து தரப்படவேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    இதனை தொடர்ந்து கதிர் ஆனந்த் எம்.பி. அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    வேலூரில் உள்ள முக்கிய மருத்துவமனையாக இ.எஸ்.ஐ. மருத்துவமனை திகழ்கிறது. தொழிலாளர்களுக்காக பிரத்தியேகமாக இயங்குகிறது.

    தற்போது மத்திய அரசு மாநில அரசு புதிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    அதாவது இந்த மருத்துவமனையில் வாங்கக்கூடிய பொருட்கள் மற்றும் எந்திரங்கள் தேவைப்படுகிறது என்பதை செய்து கொடுப்பதற்காக கமிட்டி ஒன்று நியமித்துள்ளனர்.

    இந்த கமிட்டியில் பாராளுமன்ற உறுப்பினர் தலைவராக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மருத்துவமனை டாக்டர்கள் உறுப்பினர்களாக கொண்டு இந்த கமிட்டி செயல்படும்.

    மருத்துவமனை தொடர்பாக இனி மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கையும் இந்த கமிட்டியின் ஒப்புதல் பெற்ற பின்னரே மேற்கொள்ளப்படும். அதின் அடிப்படையில் இங்கு ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

    இந்த மருத்துவமனையில் ஆய்வு செய்தபோது ஏராளமான நடுத்தர மற்றும் தொழிலாளர் மக்களுக்கு உதவிகரமாக இந்த மருத்துவமனை திகழ்வது தெரிய வந்தது.

    இந்த மருத்துவமனைக்கு பல தேவைகள் உள்ளது. அதில் முக்கியமாக இடப்பற்றாக்குறை உள்ளது. இதற்கு விடிவு காலம் பிறக்கும் வகையில் சுமார் 5½ ஏக்கர் பரப்பளவில் புதிய மருத்துவமனை அமைய உள்ளது. அதற்கான இடம் கேட்டுள்ளனர்.

    அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது நிலம் தேர்வு செய்யும் பணிகள் நடக்கிறது. மாவட்ட கலெக்டரும் அதற்கான நிலம் தருவதாக தெரிவித்துள்ளார்.

    இடம் தேர்வு செய்யப்பட்ட பின்னர் மருத்துவமனைக்கான அனைத்து கட்டுமானத்திற்கான நிதியை தொகை மத்திய அரசு தருவதாக தெரிவித்துள்ளது.

    இந்த மருத்துவமனையின் வளர்ச்சிக்காக மத்திய மாநில அரசுகள் கவனம் செலுத்துகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2 வருடம் முன் அனுபவம் இருக்க வேண்டும்
    • வருகிற 15-ந் தேதிக்குள் தபாலில் அனுப்ப வேண்டும்

    வேலூர்:

    வேலூர் மத்திய சிறையின் கட்டுப்பாட்டிலுள்ள கிளைச்சிறையில் காலியாக உள்ள 3 தூய்மை பணியாளர் பணியிடம் சமையலர் பணியிடம் காலியாக உள்ளது. தூய்மை பணியாளர் பதவிக்கு கல்வி தகுதி தமிழில் படிக்க எழுத தெரிந்திருக்க வேண்டும்.

    சமையலர் பதவிக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2 வருடம் முன் அனுபவம் இருக்க வேண்டும். வயது வரம்பு எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 37, இதர வகுப்பினருக்கு 34 ஆகும். முன்னுரிமைக்கான சான்றிதழ் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய கல்வி இதர சான்றிதழ்களுடன் ரூ.30-க்கான அஞ்சல் வில்லை ஒட்டிய உறை ஒன்று விண்ணப்பத்துடன் இணைத்து சிறைக்கண்கா ணிப்பாளர், மத்திய சிறை, வேலூர்- 02 என்ற முகவரிக்கு வருகிற 15-ந் தேதிக்குள் தபாலில் அனுப்ப வேண்டும் என வேலூர் ஜெயில் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.

    • ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தால் பரபரப்பு
    • மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்

    பொன்னை:

    பொன்னை அருகே ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் ராணுவ வீரரின் மனைவி தீக்குளிக்க முயன்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    காட்பாடி தாலுகா பொன்னை அருகே உள்ள குறவன் குடிசைப்பகுதியில் சுமார் 2 ஏக்கர் அரசு நிலம் உள்ளது.இதனை ஒரு சிலர் ஆக்கிரமித்து மாடி வீடுகள் மற்றும் குடிசைகளை அமைத்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று வருவாய்த் துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொக்லைன் இந்திரங்களுடன் சென்றனர்.

    அப்போது அங்குள்ள பொதுமக்கள் ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் வருவாய்த்துறையினர் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் பிச்சாண்டி என்பவரின் மனைவி ஈஸ்வரி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் அவரை பொன்னை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும் அவர் பொக்லைன் எந்திரத்தில் அமர்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டார்.

    இதனையடுத்து துணை தாசில்தார் முஹம்மத் சாதிக் தலைமையிலான வருவாய்த் துறையினர் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை கைவிட்டு திரும்பி சென்றனர். மேலும் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ளுமாறு அதிகாரிகள் நோட்டீஸ் கொடுக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

    • இந்தப் பதக்கத்துக்கு சக்தி அம்மா சிறப்பு பூஜைகள் செய்து சக்தி கணபதிக்கு சமர்ப்பித்தார்.
    • இந்த சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    வேலூர் அடுத்த அரியூரில் கடந்த 2007- ம் ஆண்டில் 1500 கிலோ கிராம் சுத்த தங்கத்தை பயன்படுத்தி செய்த தங்க தகடுகளால் ஸ்ரீபுரம் தங்க கோவில் கட்டப்பட்டது.

    அமிர்தசரத்தில் இருக்கும் பொற்கோவிலின் உட்புற விமானத்தில் உள்ள 750 கிலோ கிராம் தங்க அளவைவிட 2 மடங்கு அதிக தங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.

    தங்க கோவிலில் 1700 கிலோ வெள்ளியிலான சக்தி கணபதி சன்னதி உள்ளது. இந்த விநாயகருக்கு உலகிலேயே மிகப்பெரிய அளவிலான சுமார் 840 கேரட் எடை கொண்ட ஒரே கல்லாலான கேது கிரகத்திற்குரிய வைடூரிய கல்லால் ஆன பதக்கம் செய்யப்பட்டுள்ளது.

    இந்தப் பதக்கத்துக்கு சக்தி அம்மா சிறப்பு பூஜைகள் செய்து சக்தி கணபதிக்கு சமர்ப்பித்தார். இந்த சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • இ-சைக்கிள் 3 விதமாக இயங்கும் வகையில் யுகஆதித்தன் உருவாக்கி இருக்கிறார்.
    • இ-சைக்கிளை ஜெயில் வார்டன்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

    கோவை:

    ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள கவுந்தபாடியை சேர்ந்தவர் யுகஆதித்தன் (வயது 31). இவர் ஏரோநாட்டிக்கல் என்ஜினீயரிங் படித்துள்ளார்.

    யுகஆதித்தன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சேலம் மாவட்டம் அழகாபுரம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். பின்னர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 6 ஆண்டுகளாக கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    யுகஆதித்தன் ஜெயிலில் இருந்தபடியே தான் படித்த கல்வியை பயனுள்ளதாக்கும் வகையில் இ-சைக்கிள் ஒன்றை உருவாக்கி உள்ளார். இந்த இ-சைக்கிள் 3 விதமாக இயங்கும் வகையில் அவர் உருவாக்கி இருக்கிறார். இந்த சைக்கிளை சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் பெறும் சோலார் பேனல் மூலம் இயக்கலாம். அல்லது சைக்கிளை மிதிக்கும்போது டைனமோவில் இருந்து வரும் மின்சாரத்தை கொண்டு இயக்கலாம். 3-வது பேட்டரியில் சார்ஜ் ஏற்றிக்கொண்டும் ஓட்டலாம். தற்போது இந்த இ-சைக்கிளை ஜெயில் வார்டன்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து கோவை மத்திய ஜெயில்துறை டி.ஐ.ஜி. சண்முக சுந்தரம் கூறியதாவது:-

    யுகஆதித்தன் ஜெயில் வளாகத்துக்குள் ஏதாவது புதிதாக செய்ய வேண்டும் என முயற்சி மேற்கொண்டார். பயன்படுத்தாமல் கிடந்த சைக்கிளை பார்த்த அவர் அதனை சூரிய ஒளி மற்றும் பேட்டரியில் இயங்கும் வகையில் வடிவமைத்து உள்ளார். சைக்கிளில் நடுவில் தகடுகளை வைத்து அங்கு பேட்டரியை பொருத்தினார். மேலும் பேட்டரியை சார்ஜ் செய்வதற்காக டைனமோவையும் பொருத்தினார். சைக்கிளை மிதிக்கும்போது டைனமோ மூலமாக பேட்டரி சார்ஜ் ஏறும் வகையில் வடிவமைத்தார். மின்சாரம் மூலமாகவும் பேட்டரியை சார்ஜ் செய்யலாம். கேரியரில் சோலார் பேனலை பொருத்தி அதன் மூலமாகவும் சைக்கிள் இயங்கும் வகையிலும் வடிவமைத்து உள்ளார். மிலிட்டரி பச்சை நிறத்தில் பெயிண்ட் அடித்து எங்களிடம் வழங்கினார். யுகஆதித்தனை நாங்கள் வெகுவாக பாராட்டினோம். இந்த சைக்கிளை தற்போது டவர் பிளாக்கில் ரோந்து செல்லும் வார்டன்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இதுபோல 9 சைக்கிளை தயாரிக்க திட்டமிட்டு உள்ளோம்.

    தற்போது யுக ஆதித்தன் இ-ஆட்டோ ரிக்ஷாவை தயாரிக்கிறார். ஓரிரு மாதங்களில் இந்த பணி முடிவடையும். அதன் பின்னர் மின்சார ஆட்டோவை ஜெயில் வளாகத்தில் ரோந்து பணியில் பயன்படுத்த உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் கோவை மத்திய ஜெயிலில் கைதிகள் பணிபுரியும் நெசவு பிரிவு, பெட்ரோல் பங்க், தையல் பிரிவு, புத்தகம் பைண்டிங் பிரிவு, வெல்டிங் பிரிவு, தச்சுப்பிரிவு ஆகியவை செயல்பட்டு வருகிறது. காந்திபுரத்தில் உள்ள சிறைச்சாலை பஜாரில் பேக்கரி, நர்சரி கார்டன், வாகன நிறுத்துமிடம் ஆகியவற்றை ஜெயில் நிர்வாகம் நடத்தி வருகிறது. இங்கு நூற்றுக்கணக்கான தண்டனை கைதிகள் வேலை பார்த்து வருகின்றனர்.

    • போக்சோ சட்டத்தில் நடவடிக்கை
    • போலீசார் விசாரணை

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகரின் அருகே உள்ள ஒரு பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளியின் 8 வயது மகள். தற்போது 4-ம் வகுப்பிற்கு செல்ல உள்ளார்.

    இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவன் சிறுமியை பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து வெளியே சொன்னால் ஒழித்து விடுவேன் என சிறுமியை மிரட்டி உள்ளார். இதனால் பயந்து நிலையில் இருந்துள்ளார்.

    சிறுமியை கண்ட பெற்றோர்கள் விசாரித்த போது அந்த மாணவன் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து அந்த சிறுமியின் பெற்றோர்கள் குடியாத்தம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    இதனை தொடர்ந்து அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சியாமளா அந்த மாணவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    • கோட்ட கண்காணிப்பாளர் தகவல்
    • சிறப்பு முகாம்களை பயன்படுத்திகொள்ள அறிவுரை

    வேலூர்:

    வேலூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் நா.ராஜகோபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகள் 14-வது தவணை தொகையை பெறுவதற்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    வேலூர் மாவட்டத்தில் 11,543 விவசாயிகளும் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிகணக்கு இல்லாமல் இருப்பதாகவும், அவர்கள் அனைவரும் உடனடியாக அஞ்சல்து றையின் கீழ்செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி துவங்க வேண்டும் எனவும் தெரிவிக்க ப்பட்டுள்ளது.

    தபால்காரர் மற்றும் கிராம அஞ்சல் ஊழியர்க ளுக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட்போன் மற்றும் பயோமெட்ரிக் கருவியின் மூலம், விவசாயிகள் தங்களின் ஆதார் மற்றும் மொபைல் எண்ணை மட்டும் பயன்படுத்தி விரல்ரேகை மூலம் ஒரு சில நிமிடங்களில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு துவங்க முடியும்.

    இதற்காக மாவட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை யுடன் இணைந்து கிராமங்களில் நடத்தப்படும் சிறப்பு முகாம்களை பயன்படுத்தி அல்லது அஞ்ச லகங்கள், தபால்காரர், கிராம அஞ்சல் ஊழியரை அணுகி பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்ப ட்டுள்ளது.

    ×