என் மலர்
வேலூர்
- மாதம்தோறும் 5-ந்தேதி நடக்கிறது
- கலெக்டர் தகவல்
வேலூர்:
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தின் சுற்றுச்சூழல் குறித்த நேரடி கலந்தாய்வு கூட்டம் வேலூரில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகத்தில் மாதம் தோறும் 5-ந் தேதி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
நேரடி கலந்துரையாடலில் கலந்து கொள்ள விரும்புவோர் முன்னதாகவே இதற்காக வாரியத்தால் உருவாக்கப்பட்டுள்ள இணையவழி செயலியில் பதிவுசெய்து கொள்ளலாம் என பரிந்துரைக்கப்படுகிறது.
இதன் மூலம் வாரிய அதிகாரிகள் பங்கேற்பாளர்களுக்கு நேரடி கலந்துரையாடல் நாளில் அல்லது முடிந்தால் அதற்கு முன்னதாகவும் பதிலளிக்க முடியும், இதற்காக வாரிய இணையதளமான www.tnpcb.govh இல் OPEN HOUSE- என்ற இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்போர் தங்கள் வருகையின்போது ஆதார்அட்டையை தவறாமல் கொண்டுவரவேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- வருகிற 30-ந்தேதி கடைசி நாள்
- கலெக்டர் தகவல்
வேலூர்:
அனைவருக்கும் இ-சேவை மையம் திட்டத்தின் கீழ் இ-சேவை மையங்களை அமைத்து நடத்த ஆர்வமுள்ள நபர்களிடம் இருந்து விண் ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன.
இதற்காக இணையத ளம் வழியாக மட்டுமே விண் ணப்பங்களை பதிவு செய்ய முடியும். இதுதொடர்பாக கூடுதல் தகவல்களை பெறவும், ஆன்லைனில் விண்ணப்பிக்க https://tnesevai.tn.gov.in/ மற்றும் https://tnega.tn.gov.in/. என்ற இணையதளங்களை பயன்ப டுத்தி கொள்ளலாம்.
விண்ணப்பங்களை வருகிற 30-ந்தேதி வரை ஆன்லைனில் பதிவு செய்யலாம். கிராமப்பு றங்களுக்கு ரூ.3 ஆயிரம், நகர்ப் புறத்துக்கு ரூ.6 ஆயிரம் விண் ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
இந்த தகவலை வேலூர் கலெக்டர் குமார வேல்பாண்டியன் தெரிவித் துள்ளார்.
- 2 பேர் கைது
- சொத்து தகராறில் விபரீதம்
வேலூர்:
வேலூர் மாவட்டம், கணியம்பாடி அடுத்த சின்ன பாலம் பாக்கம், கும்பங்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (70), விவசாயி.
இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குமரவேல்(45), ரமேஷ்(41) ஆகிய மகன்கள் உள்ளனர். இவர்கள் 2 பேரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். ரமேஷ் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
அண்ணன் தம்பி இடையே பரம்பரை சொத்தை பிரிப்பது தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் குமரவேலின் மகன் அருண்குமார் (வயது 23), நேற்று நள்ளிரவு தனது நண்பர்களான குடியாத்தம் அடுத்த தட்டப்பாரையைச் சேர்ந்த விக்னேஷ்(18), ஹரி, கார்த்திக் ஆகியோருடன் ரமேஷ் வீட்டுக்கு சென்றார்.
வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்த ரமேஷை வெளியே அழைத்து வந்து இரும்புரா டால் சரமாரியாக தாக்கினர். இதில் ரமேஷின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.
அவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டில் தூங்கிக் கொண்டி ருந்தவர்கள் வெளியே ஓடி வந்தனர். இதனை கண்ட அருண்குமார் மற்றும் அவரது நண்பர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து ரமேஷை அவரது உறவினர்கள் மீட்டு சிகிச்சை க்காக அடுக்க ம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
இது குறித்து ரமேஷின் மனைவி ராஜகுமாரி வேலூர் தாலுகா போலீசில் புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி வழக்கு பதிவு செய்து அருண்குமார் விக்னேஷ் ஆகியோரை கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.
மேலும் தலை மறைவாக உள்ள ஹரி, கார்த்திக் ஆகியோரை தேடி வருகின்றனர்.
- சமையல் போட்டி நடந்தது
- ஜி.வி.செல்வம் பரிசு வழங்கினார்
வேலூர்:
காட்பாடி காந்திநகரில் மக்கள் நலச்சந்தை செயல்பட்டு வருகிறது. இதன் ஓராண்டு நிறைவு விழா இன்று காலை நடந்தது. விஐடி பல்கலைக்கழக துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அவர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் சான்றிதழ் வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஜி.வி. செல்வம் பேசியதாவது:-
காட்பாடியில் இயற்கை வேளாண் விவசாயிகளை ஒருங்கிணைத்து மக்கள் நல சந்தை கடந்த ஒராண்டாக சிறப்பாக செயல்படுவது பாராட்தலுக்கு உரியது. இப்பகுதி மக்கள் இயற்கை விவசாயத்திற்கு ஆதரவு அளித்த காரணத்தினால் சிற ப்பாக நடைபெற்றுள்ளது. மட்டற்ற மகிழ்ச்சியளிக்கிறது.
.இயற்கை உணவுகளை கொரோனா காலங்களில் நாடி சென்றோம்.மாடு மலைகளில் மேய்ந்தால் நல்ல பால் தரும்.
ஆனால் இன்றைக்கு போஸ்டரை சாப்பிடுகிறது. யானையும் பிளாஸ்டிக்கை சாப்பிடுகிறது. நாம் இயற்கை உணவை உண்ண வேண்டும்.
இயற்கையோடு ஒத்து வாழ வேண்டும். இயற்கையை நமது வீட்டிற்கு எவ்வாறு எடுத்து வருவது மண்ணை காப்பது எப்படி தண்ணீரை காப்பது எப்படி என அனைத்தையும் காக்க வேண்டும்.
இயற்கையையும் மண் வளத்தையும் தண்ணீரையும் காக்க வேண்டும். இது போன்ற மக்கள் சந்தையை மக்களாகிய நீங்கள் ஊக்குவிக்க வேண்டும். மண் வளம் காப்போம் விவசாயத்தினை காப்போம். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவிற்கு ஒருங்கிணைப்பாளர் கு.செந்தமிழ்செல்வன் தலைமை தாங்கினார். விஐடி வயல் இயக்குநர் பேராசிரியர் எஸ்.பாபு இந்தியன் ரெட்கிராஸ் காட்பாடி கிளை அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன், மகளிர் மன்ற தலைவி மாலினி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இன்று நடந்த கண்காட்சியில் 100 அரங்குகளில் இயற்கை விவசாயக் காய்கறிகள், பழங்கள், கீரைகள், மூலிகைகள் மதிப்புக் கூட்டப்பட்டவைகள் , கொல்லிமலை கிழங்குகள், வாழைப்பழத்தில் மதிப்புக் கூட்டுதல் போல பல புதுமைகளுடன், 101 வகை உணவுகள் இடம்பெற்றன.
மா, பலா, வாழை மற்றும் நுங்கு சிறப்புக் கண்காட்சி, புத்தகக் கண்காட்சி, நாட்டுரக நெல் விதைகள் , கொடி, காய்கறி விதைகள், கிழங்குகள், வங்கிகளின் விவசாய கடன் திட்ட விளக்கங்கள், பட்டு,பருத்தி, மூங்கில் நார் கைத்தறி ஆடைகள், பலவகையான பொடிகள், திண்பண்டங்கள் தொகுப்பாக, அனைத்தும் இயற்கை விவசாயத்தின் உற்பத்திகள் பார்வைக்கு வைத்திருந்தனர்.
இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ., ஆய்வு
- படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்
வேலூர்:
வேலூர் அப்துல்லா புரத்தில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் புதிய தொழில் நுட்ப பூங்கா கட்டப்படுகிறது.
இந்த பணிகளை ஏ.பி. நந்தகுமார் எம்.எல்.ஏ., இன்று ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
சட்டமன்றத்தில் அணைக்கட்டு தொகுதியில் தொழில்நுட்ப பூங்கா அமைக்க வேண்டும் என பல பலமுறை நான் பேசி உள்ளேன். அதன் அடிப்படையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ரூ.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார்.
அதன் கட்டுமான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதன் முதல் கட்ட கட்டுமான பணி முடிவடையும் நிலையில் உள்ளது.
அதன்பின்பு 2-வது பகுதி கட்டதற்கான கட்டுமான பணிக்கு முதல்வர் நிதி ஒதுக்கீடு செய்வார் என எதிர்பார்க்கிறோம். இந்த டைட்டில் பார்க்கில் அணைக்கட்டு தொகுதியில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதை தொடர்ந்து நரசிங்கபுரத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மரக்கன்றுகளை ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ., நட்டு திட்டத்தை தொடங்கி வைத்தார்.
- பஸ் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து பரிதாபம்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் நேற்று இரவு பஸ்சுக்காக காத்திருந்தனர்.
சென்னை தாம்பரத்தில் இருந்து நேற்று நள்ளிரவில் வேலூர் புதிய பஸ் நிலையத்திற்கு அரசு பஸ் வந்தது. அங்குள்ள நடைமேடை அருகே பஸ் மெதுவாக சென்றது.
அப்போது முன் படிக்கட்டில் இருந்து இறங்கிய ஆண் பயணி ஒருவர் தவறி கீழே விழுந்தார். அவர் மீது பஸ்சின் பின்பக்க டயர் ஏறி இறங்கியது.
இதில் உடல் நசுங்கிய அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த வேலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர.
விபத்தில் பலியான பயணி யார் என்பது தெரியவில்லை. போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பொதுக்கூட்டம் நாளை நடக்கிறது
- ராட்சத பலூன், ட்ரோன் பறக்க தடை
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரி பகுதியில் மத்திய பாஜக அரசின் 9 ஆண்டு காலம் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நாளை மாலை 3 மணி அளவில் நடைபெற உள்ளது.
இதில் மத்திய மந்திரி அமித்ஷா மற்றும் மத்திய போக்குவரத்து துறை மந்திரி வி.கே. சிங் மற்றும் மத்திய தகவல் தொடர்புத்துறை இணை மந்திரி எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
கூட்டத்திற்கு மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்குகிறார். இதற்கான முன்னேற்பாடு பாதுகாப்பு பணிகளை வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி மற்றும் மத்திய சி.ஆர்.பி.எப். கமாண்டோ அசோக்குமார் ஆகியோர் பொதுக்கூட்டம் நடைபெறும் இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதனையொட்டி 1,200 போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் உள்துறை மந்திரி வருவதையொட்டி அதன் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
அமித்ஷா சென்னையில் இருந்து ெஹலிகாப்டர் மூலம் அப்துல்லாபுரம் விமான நிலையத்திற்கு வருகிறார். அங்கிருந்து காரில் பொதுக்கூட்ட மேடைக்கு செல்கிறார்.
வழிநெடுகிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டம், பொய்கை அடுத்த கந்தனேரியில் பா.ஜ.க. சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு அமித்ஷா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்கிறார்.
இதனால் கந்தனேரி மற்றும் பள்ளிகொண்டா ஆகிய பகுதிகளில் ட்ரோன் கேமரா மற்றும் ராட்சத பலூன்கள் பறக்க தடை செய்யப்பட்டுள்ளது.
மீறினால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தெரிவித்தார்.
- மேய்ச்சலுக்கு சென்றபோது பரிதாபம்
- மின்கம்பங்கள் உடைந்து விழுந்தது
வேலூர்:
வேலூரில் நேற்று மாலை திடீரென சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் ஆங்காங்கே மரங்கள் முறிந்து சாலையில் விழுந்தன .
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் மின்கம்பங்கள் உடைந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் சத்துவாச்சாரி பிராமணர் தெருவை சேர்ந்த வசந்தகுமார், உத்தர மூர்த்தி, சரஸ்வதி, ராஜேந்திரன் ஆகியோர் தங்களது மாடுகளை கணபதி நகர் பகுதியில் மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம். நேற்று பலத்த சூறாவளி காற்று வீசியதால் கணபதி நகர் வயல்வெளியில் இருந்த மின் கம்பம் உடைந்து மின்கம்பிகள் தரையில் விழுந்து கிடந்தன.
இன்று காலை வழக்கம் போல் மேய்ச்சலுக்கு சென்ற 4 மாடுககள் மின்சார கம்பியை மிதித்ததால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தன.
இதுகுறித்து தகவல் அறிந்த வீட்டின் உரிமையாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாக கூறி கதறி அழுதனர்.
மேலும் சத்துவாச்சாரி போலீசார் மற்றும் மின்வாரியத்திற்கு தகவல் தெரிவித்தனர். அப்பகுதியில் உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாடுகள் இறந்தது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி கிராமத்தில் பஸ்நிறுத்தம் இங்கு உள்ளது. கே.வி.குப்பம் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ,10 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்கூடம் கட்டும் பணிக்கான பூமி பூஜை நேற்று நடந்தது.
வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வி.ராமு தலைமை தாங்கினார். கல்லப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ்குமார், கூட்டுறவு வங்கி தலைவர்கள் வில்வநாதன், வனராஜ், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ரமேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக கே.வி.குப்பம் எம்.எல்.ஏ. பூவை ஜெகன்மூர்த்தி கலந்து கொண்டு பயணிகள் நிழற் கூடத்தற்கான கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் குடியாத்தம் நகரமன்ற உறுப்பினர் பி.மேகநாதன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் குட்டிவெங்கடேசன், தியாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- விவசாயிகள் வலியுறுத்தல்
- குறை தீர்வு கூட்டம் நடந்தது
வேலூர்:
வேலூர் சப்-கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் சப்-கலெக்டர் கவிதா தலைமையில் நேற்று நடந்தது. இதில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் விவசாயிகள் கூறியதாவது:- வேலூர் மாவட்டத்தில் விவசாயி களுக்கு தட்டுப்பாடு இன்றி 24 மணி நேரமும் மின்சாரம் வழங்க வேண்டும். விவசாயி களுக்கு உர தட்டுப்பாடு இல்லாமல் வழங்க வேண்டும். மேல் அரசம்பட்டு பகுதியில் உள்ள நீர் நிலைகளை தூர்வார வேண்டும்.
தோட்டக்கலை துறை சார்பில் தக்காளி, கத்திரிக்காய், மிளகாய், சாமந்தி, மல்லி, சம்பங்கி உள்ளிட்ட பயிர் வகைகளை செய்ய விவசாயிகளை ஊக்கப்படுத்த வேண்டும். பள்ளிகள் ரேஷன் கடைகள் ஆஸ்பத்திரிகள் மற்றும் விவசாய நிலங்களில் மது குடித்துவிட்டு பாட்டிலை உடைத்து செல்பவர்கள் மீது காவல்துறையினர் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கர்நாடக மாநிலத்தில் விற்பனை செய்வதை போல் மது வகைகளை அட்டைப்பெட்டிகளில் அடைத்து விற்பனை செய்ய வேண்டும் இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதற்கு பதிலறிந்த சப்-கலெக்டர் கவிதா உரிய நடவடிக்கை மேற்கொ ள்ளப்படும் என்றார்.
- மின் துண்டிப்பால் பொதுமக்கள் அவதி
- பேரிகார்டுகள் சூறைக் காற்றுக்கு தூக்கி வீசப்பட்டது
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் 'அக்னி' நட்சத்திரம் முடிந்து பல நாட்களாகியும், சராச ரியாக 100 டிகிரிக்கு மேல் வெயில் சுட்டெரித்து வருகிறது.
இதனால், மக்கள் பகலில் நடமாட முடியாமல் தவித்தனர். இரவிலுல் புழுக்கம் தாங்க முடியாமல் அவதி அடைந்தனர்.
இந்நிலையில், வேலூரில் நேற்று காலை வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.
ஆனால், மதியத்துக்கு மேல் வேலூர், சேண்பாக்கம், கொணவட் டம், சத்துவாச்சாரி, காட் பாடி, பாகாயம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. பின்னர் திடீரென பலத்த காற்று வீசியது. இந்த சூறைக்காற்றால் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
மாலை 3 மணிக்கு மேல் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால், பல்வேறு பகுதிகளில் மரங்கள் மற்றும் மரக்கி ளைகளும், மின் கம்பங்களும் சாலையிலும், தெருக்க ளிலும் முறிந்து விழுந்தன.
கலெக்டர் அலுவல கத்தில் மட்டும் 4 மரங்கள் முறிந்து விழுந்தன. மேலும், தேசிய நெடுஞ் சாலையில் விபத்தை குறைக்கும் வகையில் பல இடங்களில் வைக்கப்பட்டிருந்த பேரிகார்டுகள் சூறைக் காற்றுக்கு தூக்கி வீசப்பட்டது.
இதனால் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே சென்றனர்.
பலத்த காற்றுடன் மழை பெய்ததால், முன்னெச்சரி க்கை நடவடிக்கையாக மின் வினியோ கம் நிறுத்தப்பட்டது. பலத்த மழை காரணமாக வேலூர், சம்பத் நகர், திடீர் நகர் உள்ளிட்ட தாழ்வான குடி யிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுந்தது. மதியம் 3 மணிக்கு மேல் பலத்த காற்றுடன் தொடங்கிய மழை, மாலை 5 மணிவரை நீடித்தது. இரவில் விட்டு விட்டு மழை பெய்தது.
வேலூர் மற்றும் காட்பாடி, சத்துவாச்சாரி பகுதிகளில் நேற்று மதியத்திற்கு மேல் சுறைக்காற்றுடன் கனமழை பெய்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
குடியாத்தம்-பலமநேர் சாலையில் கள்ளூர்மேடு என்ற பகுதியில் பெரிய புளியமரம் சாய்ந்தது அப்போது அந்த புளியமரம் மின்கம்பங்கள் மீது சாய்ந்ததால் பல மின்கம்பங்கள் சேதம் அடைந்தன அந்த மரத்தின் ஒரு பகுதி அருகில் இருந்து குடிசை மீதும் விழுந்தது.
குடியாத்தத்தில் இருந்து ஆந்திரா மற்றும் கர்நாடகா செல்லும் முக்கிய சாலையாக பலமநேர் சாலை இருப்பதால் புளியமரம் விழுந்ததால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து உடனடியாக ஜே.சி.பி. பெக்லைன் எந்திரம் மூலம் புளிய மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
உயிர் தப்பிய 2 பெண்கள் கள்ளூர் கே.எம்.ஜி.கார்டன் பகுதியில் குடிசை வீட்டில் இருந்த சாந்தி (50)அவரது உறவினர் 80 வயது மூதாட்டி இருவரும் வீட்டில் இருந்தபோது சாய்ந்த புளிய மரத்தின் ஒரு கிளை குடிசை மீது விழுந்து அமுக்கியது.
அப்போது அதிர்ஷ்டவசமாக 2 பெண்களும் வெளியே ஓடி வந்து உயிர் தப்பினர்.
அணைக்கட்டு
அணைக்கட்டு பகுதியில் நேற்று சுமார் மாலை 5.30 மணி அளவில் திடீரென கனமழை பெய்தது.
சரிந்து விழுந்த அம்மன் கட்டவுட் அப்போது எதிர்பாராத வீதமாக மின்கம்பத்தோடு சேர்த்து திருவிழாவிற்க்காக அமைக்கப்ட்டு இருந்த கட்டவுட் சூறைக்காற்றில் திடீரென முறிந்து விழுந்தது.
இதில் மின்சார கம்பிகள் அறுந்து தீப்பொறி ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் மின்சாரம் பாதிக்கப்பட்டது.
சுமார் 3 மணி நேரம் ஆகியும் மின்சாரம் இல்லாததால் மக்கள் இருளில் கடும் அவதியடைந்தனர்.
திடீரென முறிந்து விழுந்த கட்டவுட்டால் அதன் கீழ் இருந்த மக்கள் பதட்டத்துடன் ஓட்டம் பிடித்தனர். அதில் அதிர்ஷ்டசமாக நொடி ப்பொழுதில் அனைவரும் உயிர் தப்பினர்.
வேலூரில் நேற்று மதியம் முதல் இரவு வரை மழை பெய்தது. இதன் காரணமாக மாநகரப் பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டது. இதனால் வீட்டில் விளக்குகள் மெழுகுவர்த்தி ஏற்றினர்.
நீண்ட நேரமாக மின்சாரம் வராததால் கடைகளில் மெழுகுவர்த்திகள் தீர்ந்து போனது.
இரவு 7 மணிக்கு மேல் பல இடங்களில் உள்ள கடைகளில் மெழுகு வர்த்திகள் விற்று தீர்ந்தன. இதனால் மெழுகு வர்த்திகளை வாங்க பொதுமக்கள் படாதபாடு பட்டனர். வீடுகளில் செல்போன் வெளிச்சத்தில் அமர்ந்து இருந்ததை காண முடிந்தது.
மின்சாரம் இல்லாததால் சமையல் செய்ய முடியாமல் அவதிப்பட்ட பொதுமக்கள் சாலையோரங்களில் இருந்த கடைகளுக்கு சென்றனர்.
ஆனால் வழக்கமான கடைகளும் மூடப்பட்டிருந்தன. பெரிய ஓட்டல்களில் இரவு 8 மணிக்குள் இட்லி தோசை உள்ளிட்டவை தீர்ந்து போனது. குழந்தைகளுக்கு இட்லி வாங்க சென்றவர்கள் கூட கிடைக்காமல் ஏமாந்து சென்றனர்.
- 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலை அமைக்கப்பட உள்ளது
- நெட்வொர்க் வசதி இல்லாததால் பணி தடைப்பட்டது
அணைக்கட்டு:
அணைக்கட்டு அருகே உள்ள அல்லேரி மலைப்பகுதியில் நிபுணர் குழுவினர் இன்று 2-வது நாளாக அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதிக்கு உட்பட்ட அல்லேரி மலைப்பகுதியில் உள்ள அத்தி மரத்துக் கொல்லை பகுதியை சேர்ந்த விஜி - பிரியா தம்பதியினரின் ஒன்றரை வயது மகள் தனுஷ்கா.
இவர் கடந்த 27-ந்தேதி இரவு பாம்பு கடித்த நிலையில் போதிய மருத்துவ வசதி மற்றும் முறையான சாலை வசதி இல்லாததால் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். மேலும் உயிரிழந்த சிறுமியின் உடலை சாலை வசதி இல்லாததால் மலைப்பகுதிக்கு கையால் சுமந்து நடந்தே செல்லும் அவல நிலையும் ஏற்பட்டது. இதனையடுத்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன், எம்.எல்.ஏ. நந்தகுமார் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதனையடுத்து அல்லேரி மலைப்பகுதிக்கு சாலை அமைக்க அளவீடு பணி நடந்து. மேலும் அனுமதி கேட்டு மத்திய அரசின் பர்வேஸ் போர்ட் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு இடையில் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவு சாலை அமைக்கப்பட உள்ள இடத்திற்கு, வனத்துறைக்கு மாற்று இடம் வழங்க அல்லேரி மலை பகுதியில் வருவாய் துறைக்கு சொந்தமான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தில் பெரிய பாறைகள் மற்றும் மரங்கள் இருப்பதால் இடத்தை துல்லியமாக அளவீடு செய்ய முடியவில்லை.
எனவே வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின், தொழில்நுட்ப பிரிவு குழுவின் உதவியோடு ஜி.பி.எஸ். கருவி மூலம் நிலத்தை அளவீடு செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதனை அடுத்து வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் நிபுணர் குழுவினர், ஜி.பி.எஸ். கருவியுடன் அல்லேரி மலையில் அளவீடு பணியில் ஈடுபட்டனர்.
மலைப்பகுதியில் நெட்வொர்க் வசதி இல்லாததால், அளவீடு செய்யும் பணி செய்ய முடியவில்லை. இதனால் அதிகாரிகள் திரும்பி வந்துவிட்டனர்.
தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் நிபுணர் குழுவினர் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் ஓரிரு நாட்களில் ஜி.பி.எஸ்.கருவி மூலம் நிலம் அளவீடு செய்துவிடலாம் என நிபுணர் குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.






