என் மலர்
நீங்கள் தேடியது "சூறாவளி காற்றுடன் பலத்த மழை"
- மேய்ச்சலுக்கு சென்றபோது பரிதாபம்
- மின்கம்பங்கள் உடைந்து விழுந்தது
வேலூர்:
வேலூரில் நேற்று மாலை திடீரென சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் ஆங்காங்கே மரங்கள் முறிந்து சாலையில் விழுந்தன .
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் மின்கம்பங்கள் உடைந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் சத்துவாச்சாரி பிராமணர் தெருவை சேர்ந்த வசந்தகுமார், உத்தர மூர்த்தி, சரஸ்வதி, ராஜேந்திரன் ஆகியோர் தங்களது மாடுகளை கணபதி நகர் பகுதியில் மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம். நேற்று பலத்த சூறாவளி காற்று வீசியதால் கணபதி நகர் வயல்வெளியில் இருந்த மின் கம்பம் உடைந்து மின்கம்பிகள் தரையில் விழுந்து கிடந்தன.
இன்று காலை வழக்கம் போல் மேய்ச்சலுக்கு சென்ற 4 மாடுககள் மின்சார கம்பியை மிதித்ததால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தன.
இதுகுறித்து தகவல் அறிந்த வீட்டின் உரிமையாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாக கூறி கதறி அழுதனர்.
மேலும் சத்துவாச்சாரி போலீசார் மற்றும் மின்வாரியத்திற்கு தகவல் தெரிவித்தனர். அப்பகுதியில் உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாடுகள் இறந்தது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






