முன்னாள் ராணுவ வீரர் மண்டை உடைப்பு

2 பேர் கைது சொத்து தகராறில் விபரீதம்
முன்னாள் ராணுவ வீரர் மண்டை உடைப்பு
Published on

வேலூர்:

வேலூர் மாவட்டம், கணியம்பாடி அடுத்த சின்ன பாலம் பாக்கம், கும்பங்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (70), விவசாயி.

இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குமரவேல்(45), ரமேஷ்(41) ஆகிய மகன்கள் உள்ளனர். இவர்கள் 2 பேரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். ரமேஷ் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

அண்ணன் தம்பி இடையே பரம்பரை சொத்தை பிரிப்பது தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் குமரவேலின் மகன் அருண்குமார் (வயது 23), நேற்று நள்ளிரவு தனது நண்பர்களான குடியாத்தம் அடுத்த தட்டப்பாரையைச் சேர்ந்த விக்னேஷ்(18), ஹரி, கார்த்திக் ஆகியோருடன் ரமேஷ் வீட்டுக்கு சென்றார்.

வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்த ரமேஷை வெளியே அழைத்து வந்து இரும்புரா டால் சரமாரியாக தாக்கினர். இதில் ரமேஷின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.

அவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டில் தூங்கிக் கொண்டி ருந்தவர்கள் வெளியே ஓடி வந்தனர். இதனை கண்ட அருண்குமார் மற்றும் அவரது நண்பர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து ரமேஷை அவரது உறவினர்கள் மீட்டு சிகிச்சை க்காக அடுக்க ம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

இது குறித்து ரமேஷின் மனைவி ராஜகுமாரி வேலூர் தாலுகா போலீசில் புகார் செய்தார்.

இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி வழக்கு பதிவு செய்து அருண்குமார் விக்னேஷ் ஆகியோரை கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.

மேலும் தலை மறைவாக உள்ள ஹரி, கார்த்திக் ஆகியோரை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com