வேலூர் புதிய பஸ் நிலையத்தில் பயணி உடல் நசுங்கி பலி

பஸ் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து பரிதாபம் போலீசார் விசாரணை
வேலூர் புதிய பஸ் நிலையத்தில் பயணி உடல் நசுங்கி பலி
Published on

வேலூர்:

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் நேற்று இரவு பஸ்சுக்காக காத்திருந்தனர்.

சென்னை தாம்பரத்தில் இருந்து நேற்று நள்ளிரவில் வேலூர் புதிய பஸ் நிலையத்திற்கு அரசு பஸ் வந்தது. அங்குள்ள நடைமேடை அருகே பஸ் மெதுவாக சென்றது.

அப்போது முன் படிக்கட்டில் இருந்து இறங்கிய ஆண் பயணி ஒருவர் தவறி கீழே விழுந்தார். அவர் மீது பஸ்சின் பின்பக்க டயர் ஏறி இறங்கியது.

இதில் உடல் நசுங்கிய அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த வேலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர.

விபத்தில் பலியான பயணி யார் என்பது தெரியவில்லை. போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com