என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Construction work for shade hall"

    • ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி கிராமத்தில் பஸ்நிறுத்தம் இங்கு உள்ளது. கே.வி.குப்பம் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ,10 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்கூடம் கட்டும் பணிக்கான பூமி பூஜை நேற்று நடந்தது.

    வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வி.ராமு தலைமை தாங்கினார். கல்லப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ்குமார், கூட்டுறவு வங்கி தலைவர்கள் வில்வநாதன், வனராஜ், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ரமேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக கே.வி.குப்பம் எம்.எல்.ஏ. பூவை ஜெகன்மூர்த்தி கலந்து கொண்டு பயணிகள் நிழற் கூடத்தற்கான கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் குடியாத்தம் நகரமன்ற உறுப்பினர் பி.மேகநாதன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் குட்டிவெங்கடேசன், தியாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×